Published:Updated:

அன்பின் ருசி

அன்பின் ருசி
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பின் ருசி

கவிதை: சக்தி ஜோதி, ஓவியம்: செந்தில்

அந்தத் தென்னை மரம் வளர்ந்திருக்கிறது 

கோணல் கோணலாகவும்

வளைந்து வளைந்தும்.

எவருக்கும் இடைஞ்சலில்லை.

அத்தனை உயரத்தில்

அத்தனை பாதுகாப்பில் வைத்திருக்கிறது

தன்னுடைய நிலத்தடி நீரை.

பாளை பூத்திருக்கிறது

அன்பின் ருசி

எத்தனை இளநீர் என்பதறியாது.

ஒரு கூடு.

அதற்குள் ஒரு கூடு.

அதனுள் நீர்

அன்பின் ருசியாய்.

இந்த உலகு

இந்த அன்பு

இந்தத் துயரம்

இந்த விடுதலைதான்

எத்தனை பாதுகாப்பாக இருக்கிறது.