Published:Updated:

பட்டனைத் தட்டினால் குட்டிக் கதைகள்!

பட்டனைத் தட்டினால் குட்டிக் கதைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
பட்டனைத் தட்டினால் குட்டிக் கதைகள்!

பட்டனைத் தட்டினால் குட்டிக் கதைகள்!

பிரான்ஸ் நாட்டில் உள்ள ‘ஷார்ட் எடிஷன்’ (Short Edition) என்ற  பதிப்பகம், சுடச்சுட கதைகள் கொடுக்கும் இயந்திரத்தைக் களத்தில் இறக்கி உள்ளது.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில், தானியங்கி இயந்திரம் மூலமாகவே செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்களை விற்பனை செய்வார்கள். இதனால், ஒரு கடையை அமைப்பது, வேலையாட்களை நியமிப்பது போன்ற செலவுகள் மிச்சம்.

பட்டனைத் தட்டினால் குட்டிக் கதைகள்!

‘ஷார்ட் எடிஷன்’ அதற்கும் மேலே போய்விட்டது. பெரிய புத்தகங்களை வாங்கி, மணிக்கணக்கில் படிக்க உங்களுக்கு நேரம் இல்லையா? உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப சின்னச் சின்னக் கதைகள் வேண்டுமா?  அதற்கேற்ற காசைக் கொடுத்தால் போதும் என்கிறது இந்தப் பதிப்பகம்.

ஏடிஎம் மெஷின் போன்ற ஒரு கருவியில் 1, 3, 5 என்ற எண்கள் இருக்கும். எண் 1-ஐ  அழுத்தினால், ஒரு நிமிடத்தில் படித்து முடிக்கும் கதைகளின் பட்டியல் வரும். அதில், ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்து காயினைப் போட்டால், காகிதத்தில் சுடச்சுட கதை அச்சாகி வரும். படித்துவிட்டு, பாக்கெட்டில் மடித்துவைத்துக்கொள்ளலாம்.

ஷார்ட் எடிஷன் பதிப்பகத்தின் துணை நிறுவனர்களில் ஒருவரான க்வெண்டின் ப்லெப் என்பவரின் யோசனையில் உதித்ததுதான் இந்தக் கதை கக்கும் இயந்திரம். முதல் கட்டமாக, ஷார்ட் எடிஷன் பதிப்பகத்தின் எழுத்தாளர்களின் 600 கதைகளை இயந்திரத்தில் இணைத்திருக்கிறார்கள். பிரான்ஸ் நாட்டின் செர்னோபில்(Chernobyl) நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரங்கள், விரைவில் பல நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும். கதைகளும் அதிகமாகும்.

பொது இடங்களில் காத்திருக்கும்போது,  ஸ்மார்ட்போன் திரைக்குள் தலையைக் கவிழ்த்திருப்பதற்குப் பதில், கதைகள் படிப்பது நல்ல விஷயம்தானே!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- சுப.தமிழினியன்