உணவின்றி...

``லன்ச் டைம்...

10 செகண்ட் கதைகள்

வெயிட் பண்ணுங்க’’

- காக்கவைத்தார் வங்கி மேலாளர், விவசாயக் கடன் கேட்டு வந்தவர்களை!

 - பாப்பனப்பட்டு வ.முருகன்

பழக்கதோஷம்

10 செகண்ட் கதைகள்

``டைனிங் டேபிளைத் தட்டி, ரசத்தை எல்லாம் கொட்டிட்டீங்களே!’’ தொலைக்காட்சியில் தலைவர் பேசி முடித்ததும், படபடவென மேஜையைத் தட்டிய முன்னாள் அமைச்சரைக் கடிந்துகொண்டார் அவரது மனைவி.

- சி.சாமிநாதன்

நீதிக்குத் தண்டனை

``குடிபோதையில கார் ஓட்டி, ரெண்டு பேரைக் கொன்னுட்டேன்’’ என்றார் அந்தப் பணக்கார க்ளையன்ட்.

10 செகண்ட் கதைகள்

``அப்ப, கீழ் கோர்ட்டுல ஒண்ணும் பண்ண முடியாது. ஹை கோர்ட்ல பார்த்துக்கலாம்” என்றார் வழக்குரைஞர்.

- அஜித்

எல்லாம் நேரம்!

10 செகண்ட் கதைகள்

ஆறு மணிக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்த டாக்டர் 10 மணிக்கு வந்து, ``கரெக்ட் டைமுக்கு சாப்பிடுங்க... தூங்குங்க’’ என்றார்.

- நந்தகுமார்

புதியன கழிதல்

10 செகண்ட் கதைகள்

``புதுப்படம் பார்க்கணும்போல இருக்குப்பா...’’ என்று மகள் கேட்டதற்காக, புதுப்பட திருட்டு டி.வி.டி ஒன்றை வாங்கிக்கொண்டு போனார் தியேட்டர் ஆபரேட்டர் தினேஷ்.

 - வெங்கடசுப்ரமணியன்

உண்மை

10 செகண்ட் கதைகள்

``சென்னைக்கு மிக அருகில் உள்ள வீட்டுமனை’’ என்று அந்தப் பிரபலம் சொல்லிக்கொண்டிருந்தபோது அவர் மொபைல் சிணுங்கியது. மொபைலை எடுத்து ``நான் இப்போ அவுட் ஆஃப் ஸ்டேஷன். சென்னை வந்தவுடன் கால் பண்றேன்’’ என்றார்.

- விஷ்ணுவர்தன்

 16 வயதினிலே - 2016

10 செகண்ட் கதைகள்

மயிலுக்கு மெயில் அனுப்பினான் பரட்டை. டாக்டரின் வாட்ஸ்அப்பை பிளாக் செய்த மயில், சப்பாணிக்கு ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்தாள். பரட்டையை ட்விட்டரிலும் மீம்ஸிலும் வறுத்தெடுக்க, சப்பாணிக்கு ஆப்பிள் ஐபோன் வாங்கித் தந்தாள் மயில்!

 - பிரகாஷ்

பயிற்சி

10 செகண்ட் கதைகள்

வாக்கிங் முடித்துவிட்டு வந்தவன், அடுக்குமாடிக் குடியிருப்பில் தன் வீட்டுக்குச் செல்லக் காத்துக்கிடந்தான் லிஃப்ட்டுக்காக!

- பெ.பாண்டியன்

மறதி

10 செகண்ட் கதைகள்

தன் கணவன் லட்சங்களில் சம்பாதிப்பதாகப் பெருமை அடித்தாள் ப்ரியா...

தன் தோழி எல்.ஐ.சி முகவர் என்பதை மறந்து!

 - ரூபிணி சுரேஷ்

தங்கமானவர்

10 செகண்ட் கதைகள்

``அசல்கூட கில்ட்டு நகையையும் சேர்த்து நைசா தள்ளப்பார்க்கிறியா? நம்பள்கி நேர்மை ரொம்ப முக்கியம்’’ என்றார் அடகுக்கடை சேட்டு, திருட்டு நகை விற்பவனிடம்.

- அஜித்

10 செகண்ட் கதைகள்

அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய ‘நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ரூ. 500. உங்கள் கதைகளை 10secondstory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு