டெக்னாலஜி... டெக்னாலஜி!

`கண்டேன் சீதையை...’ என்ற ஹனுமனிடம், `வாட்ஸ்அப்ல பிக்சர் அனுப்பறதுக்கு என்ன?' என அலுத்துக்கொண்டார் ராமர்!

- பர்வீன் யூனுஸ்

ஆட்டம்... அதிரடி!

தனக்காக அமைக்கப்படும் கடுமையான ஃபீல்டிங்கைப் பார்த்து மனதுக்குள் சிரித்துக்கொண்டான், அடுத்த பாலில் ரன்அவுட் ஆக பெட்டிங் புக்கிகளிடம் அட்வான்ஸ் வாங்கியிருந்த அந்த அதிரடி பேட்ஸ்மேன்!

- தினேஷ் சரவணன்

திருடன்

``சார்... சார்... அடிக்காதீங்க. செத்துடப்போறான்’’ என பொதுமக்களிடம் இருந்து காப்பாற்றி, கூட்டிப்போய் திருடனிடம் மாமூல் வாங்கினார் போலீஸ்!

- பெ.பாண்டியன்

ஏட்டு சுரக்காய்

``ஏம்பா... நம்ம மாட்டுக்கொட்டகைக்குப் போட ஆயிரம் கீத்து வேணும்... நீ ஐந்நூறு வாங்கிட்டு வந்திருக்கே?” என்று அப்பா சொன்னதும் தலைகுனிந்தான் சிவில் இன்ஜினீயர் குணா!

- தங்க.நாகேந்திரன்

பிழைப்பு

``ஸ்கூல், காலேஜ்னு எதுக்கும் போகாம ஊர் சுத்திக்கிட்டு இருந்தான். ஒரு காலேஜ் ஆரம்பிச்சுக் கொடுத்தோம். வசூல் பண்ணிக்கிட்டு ஒழுங்கா இருக்கான்’’ என்றார் அரசியல்வாதி, மகனைப் பற்றி தன் நண்பரிடம்!

- கி.ரவிக்குமார்

துர்நாற்றம்

``யோவ்... பக்கத்துலயே பொது கட்டணக் கழிப்பிடம் இருக்குல... அங்க போகாம இங்க வந்து அடிக்கிறியே...’’ என ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்க, ``சரிதான் போய்யா... அதுக்குள்ள மனுஷன் நுழைவானா?’’ என்றார் வந்தவர்!

- சாய்ராம்

துணிச்சல்காரன்

நான்காவது மாடி தீப்பற்றி எரிந்தது. வேடிக்கை பார்த்த மக்களில் ஒருவன் மட்டும் துணிச்சலாக ஏறி, விதவிதமாகப் படம் எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்பினான்!

- திருச்சி ப.முத்துக்குமார்

பலூன்

திருவிழாவில் தொலைந்துபோன சிறுவனின் கையில் பத்திரமாக இருந்தது பலூன்!

- விகடபாரதி

விழா... வழங்குவோர்...

ஊர்த் திருவிழா பார்த்து முடித்ததும், தாத்தாவிடம் கேட்டனர் குழந்தைகள்... ``சூப்பர் தாத்தா... இதை எப்போ மறுபடியும் டி.வி-யில காட்டுவாங்க?’’

- கி.ரவிக்குமார்

ருசி

``நியூயார்க்ல இட்லி, சாம்பார்லாம் கிடைக்குதும்மா’’ என்றான், சென்னையில் இருந்தவரை பர்கர் சாப்பிட்ட மகன்!

- விகடபாரதி

அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய ‘நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ` 500. உங்கள் கதைகளை 10secondstory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!