Published:Updated:

சென்னையில் சூப்பர் ஹீரோஸ்!

சென்னையில் சூப்பர் ஹீரோஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சென்னையில் சூப்பர் ஹீரோஸ்!

கதை:அநிருத், சுதாகரன், ஓவியங்கள்:தனுஷ்

சென்னையில் சூப்பர் ஹீரோஸ்!

கதை:அநிருத், சுதாகரன், ஓவியங்கள்:தனுஷ்

Published:Updated:
சென்னையில் சூப்பர் ஹீரோஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சென்னையில் சூப்பர் ஹீரோஸ்!

லகத்தைக் காப்பாற்றும் சூப்பர் ஹீரோக்கள் எல்லாம் அமெரிக்காவிலும், வேறு சில வெளிநாடுகளிலும் இருந்துதான் வந்து இறங்குறாங்க. அதுக்குக் காரணம், அந்தக் கதைகளை எழுதும் எழுத்தாளர்கள், ஓவியர்கள் எல்லாம் வெளிநாட்டுக்காரர்கள். அந்த சூப்பர் ஹீரோக்கள் நம் நாட்டுக்கு வரணும்னா ஒரே வழி, நாமே எழுத்தாளரா மாறிவிடுவது எனத் தீர்மானித்தோம். இதோ, நாங்களே எழுதிய சூப்பர் ஹீரோஸ் கதை.

சென்னையில் சூப்பர் ஹீரோஸ்!

கோயம்பேடு மார்க்கெட். உலகை அழிக்கும் திட்டத்தோடு, தீவிரவாதக் கும்பல் ஒன்று வந்திருப்பதாக  கேப்டன் அமெரிக்காவுக்குத் தகவல் வருகிறது. உடனே அவர், ஹல்க், சூப்பர் மேன், நிஞ்சா ஹட்டோரிக்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிவிட்டுக் கிளம்புகிறார்.

கேப்டன் அமெரிக்கா கோயம்பேட்டு வந்து இறங்கும்போது, அங்கே இருந்த ஹல்க், ‘‘எங்கே தீவிரவாதி?’’ என தனது ஆர்ம்ஸைத் தட்டுகிறார்.

‘‘அவசரப்படாதே, இனிதான் கண்டுபிடிக்கணும்’’ என்கிறார் கேப்டன் அமெரிக்கா.

அப்போது, ‘‘ஹலோ மிஸ்டர், இந்த மூட்டைகளை வெளியே இருக்கிற வண்டியில் வைக்க எவ்வளவு கூலி வேணும்?’’ என ஒரு குரல் கேட்கிறது.

திரும்பிப்பார்த்தால், ஒரு பெண். மிஸ்டர் ஹல்க் டென்ஷனாகி, ‘‘என்னைப் பார்த்தால் மூட்டை தூக்குறவன் மாதிரியா இருக்கு?” எனக் கத்துகிறார்.

அந்தப் பெண், பயத்தில் அழ ஆரம்பிக்க, ‘‘கூல்... கூல்... பேபி. உன்னை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே?’’ என்கிறார் கேப்டன் அமெரிக்கா.

‘‘என் பேரு சிண்ட்ரல்லா. என் ஹஸ்பெண்ட் இப்போ எல்லாம் கேழ்வரகுதான் சாப்பிடுறார். அதான், 1,000 மூட்டைகள் வாங்கிட்டுப்போக இந்த நாட்டுக்கு வந்தேன்’’ என்கிறாள்.

‘‘கோவிச்சுக்காத... வேற டென்ஷன்ல கோபமா பேசிட்டேன். உன்னைப் பற்றி கேள்விப்பட்டிருக்கேன். சின்ன வயசுல சித்தியின் கொடுமைகளை         நீ அனுபவிச்சதை நினைக்கிறப்போ அழுகையா வருது’’ எனக் குலுங்கிக் குலுங்கி அழுகிறார் ஹல்க்.

‘‘ஒண்ணு, நெருப்பா கொதிக்கிறே. இல்லேனா, வெள்ளமா அழறே. ஓவரா உணர்ச்சிவசப்படுறதை நிறுத்துங்க ப்ரோ’’ என்கிறார் கேப்டன் அமெரிக்கா.

அப்போது, கேப்டன் அமெரிக்காவின் செல்போன் அடிக்கிறது. எடுத்துப்பார்த்தால், நிஞ்சா ஹட்டோரி. ‘‘ஹலோ நிஞ்சா, எங்கே இருக்கே? இன்னும் வரலையா?’’ எனக் கேட்கிறார் கேப்டன் அமெரிக்கா.

‘‘நான் வந்தாச்சு பாஸ். ஒருத்தன் மேல டவுட் வந்து அவனை ஃபாலோ பண்ணிக்கிட்டு ஒரு ஹோட்டலுக்கு வந்திருக்கேன். நீங்க அங்கே வந்துடுங்க” என்கிற நிஞ்சா ஹட்டோரி, ஹோட்டல் பெயர் சொல்கிறார்.

அதை, ஹல்க்கிடம் கேப்டன் அமெரிக்கா சொல்கிறார். அதைக் கேட்கும் சிண்ட்ரல்லா, ‘‘அந்த ஹோட்டலில்தான்  நான் தங்கியிருந்தேன்’’ என்கிறார்.

கேப்டன் அமெரிக்காவுக்குப் பொறிதட்டுகிறது. ‘‘சிண்ட்ரல்லா, உங்க கேழ்வரகு மூட்டைகளை இப்பவே எடுத்துட்டுப் போக வேணாம். நாங்க வர்ற வரைக்கும் இங்கேயே இருங்க” எனச் சொல்லிவிட்டுக் கிளம்புகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னையில் சூப்பர் ஹீரோஸ்!

ஹோட்டலில் காத்திருக்கும் நிஞ்சா ஹட்டோரி, ‘‘அந்தப் பயலை ஒரு தட்டு தட்டி மயக்கப்படுத்திட்டேன். அவன் ரூமுக்கு வந்து பாருங்க’’ என்கிறார்.

அந்த அறையில் இருக்கும் கம்பியூட்டரைப்  பார்க்கும் கேப்டன் அமெரிக்கா, ‘‘நான் சந்தேகப்பட்டது சரிதான். சிண்ட்ரல்லா வாங்கியிருக்கும் கேழ்வரகு மூட்டைகளில் பயங்கரமான வைரஸ் கிருமிகளைச் செலுத்தியிருக்காங்க. அதுக்கான ஃபார்முலா இதில் இருக்கு. மூட்டைகளை ஃப்ளைட்ல கொண்டு போகும்போது காற்றில் பரவி, உலகமே அழியப்போகுது. உடனே அந்த மூட்டைகளைக் கைப்பற்றி கடலில் போடணும்” என்கிறார்.

கோயம்பேடுக்குப் பறந்துவரும் அவர்கள், வியாபாரிகள் வேடத்தில் இருந்த தீவிரவாதிகளோடு  பயங்கர சண்டை போடுகிறார்கள். தீவிரவாதிகள் அழிந்துவிட, மூட்டைகளை கடலில் போடுகிறார்கள்.

‘‘சிண்ட்ரல்லா உனக்கு வேறு மூட்டைகளை வாங்கித்தர்றோம். அந்த மூட்டைகளை நானே வண்டியில் ஏற்றிவைக்கிறேன்” என்கிறார் ஹல்க்.

‘‘அதுக்கு கூலி தர மாட்டேன். என் அரண்மனைக்கு வாங்க. விருந்துவைக்கிறேன்’’ எனச் சிரித்தாள் சிண்ட்ரல்லா. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism