பங்கு 

10 செகண்ட் கதைகள்

``இது உனக்கு, இது எனக்கு, இது கோயிலுக்கு, இது போலீஸுக்கு'' - பணத்தைப் பங்கு பிரித்தார்கள், கொள்ளையர்கள்!

- அஜித்

அம்மா

கோபத்தில் அம்மாவைத் திட்டிவிட்டு, வெளியே செல்ல பைக் எடுத்தபோது அம்மா சொன்னாள்...

10 செகண்ட் கதைகள்

``ஹெல்மெட் எடுத்துக்கிட்டியா?’’

 - ரமேஷ்

இது இலவச வழி அல்ல!

10 செகண்ட் கதைகள்

டிராஃபிக் சிக்னலில் `நோ ஃப்ரீ லெஃப்ட் டர்ன்’-ல் திரும்பியவனை நிறுத்தி, 500 ரூபாய் கறந்துவிட்டார் போலீஸ்காரர்!

- நந்த குமார்

அன்புடன் அழைக்கிறோம்...

``டாடி... அக்கா மேரேஜுக்கு என் ஃப்ரெண்ட்ஸ் முப்பது பேரைக் கூப்பிடணும்’’ என்ற மகனிடம்,

10 செகண்ட் கதைகள்

``அப்ப எக்ஸ்ட்ரா ஐம்பது இன்விட்டேஷன் பிரின்ட் பண்ணவா?’’ - கேட்டார் அப்பா.

``வேணாம் டாடி... வாட்ஸ்அப்ல இன்வைட் பண்ணிடுறேன்’’ என்றான் பையன்!

- பர்வீன் யூனுஸ்

சந்தேகம்

10 செகண்ட் கதைகள்

`தேர்தல்ல ஸீட் கிடைக்குமா?’ என்ற சந்தேகத்தில் காத்திருந்தவருக்கு ஸீட் கிடைத்ததும், `ஓட்டு கிடைக்குமா?’ என்ற புது சந்தேகம்

வர ஆரம்பித்தது!

 - ஜிடி.ரமேஷ்குமார்

ஞாபகம் வரா(ரு)தே...

10 செகண்ட் கதைகள்

காணாமல்போன ஆட்டோகிராஃப் புத்தகத்தைத் தேடி எடுத்து, வாட்ஸ்அப்பில் புதுப்பிக்க நினைத்தேன். `ஆருயிர் நண்பனுக்கு...’, `என்றும் உன்னை மறவாத...’ என எழுதியிருந்தவர்கள் யாருமே இன்று ஞாபகத்தில் இல்லை!

- பெ.பாண்டியன்

பாதுகாப்பு!

10 செகண்ட் கதைகள்

பாதுகாப்பு, தரம், உறுதி போன்றவற்றை தீர ஆராய்ந்து வாங்கிய ஹெல்மெட்டை பைக்கின் பின்புறம் மாட்டிக்கொண்டு, ஹாயாகப் பறந்துசென்றான்!

 - பாலூர் பிரேம்பிரதாப்.

நலமா?

``நல்லா இருக்கீங்களா?’'

10 செகண்ட் கதைகள்

``ஓ... நல்லா இருக்கேன்!’'

 - சிகிச்சைக்கு வந்தவர்கள், ஒருவரையொருவர் நலம் விசாரித்துக்கொண்டார்கள்!

- கே.அருணாசலம்

விளம்பரம்... வியாபாரம்!

251 ரூபாய் ஸ்மார்ட்போன், லட்சக்கணக்கில் விற்றுத் தீர்ந்தது. `ஏர் வாய்ஸ்' உரிமையாளர், ஸ்மார்ட்போன் அதிபரிடம் சொன்னார்...

10 செகண்ட் கதைகள்

``புதுசா பத்து லட்சம் சிம் கார்டு வித்திருக்கோம், நம்ம பிளான் சக்சஸ்!’

 - ஜெ.கண்ணன்

தலைமை

10 செகண்ட் கதைகள்

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களை இருக்கையில் இருந்து கூட்டத்தொடர் முழுவதும் வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர், முதலமைச்சருக்குப் பயந்தபடி தன் இருக்கையின் நுனியிலேயே அமர்ந்திருந்தார்!

 - ந.கன்னியக்குமார்

10 செகண்ட் கதைகள்

அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய ‘நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ` 500.  உங்கள் கதைகளை 10secondstory @vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு