Published:Updated:

பொன்னி நெகிழி தொழிற்சாலை!

கவிதை: வலங்கைமான் நூர்தீன், ஓவியம்: ராஜ்குமார் ஸ்தபதி

பிரீமியம் ஸ்டோரி

முப்போகம் விளைஞ்ச பூமிதான் 

மழை பொய்த்து நதிகள் வற்றியபோதும்

நீர்மூழ்கி மோட்டார் உபயத்தில்

ஒரு போகத்திலும் கையைக் கடிக்காத

விளைச்சலையே தந்தது.

பட்டணத்து நண்பர் போட்ட தூபத்தில்

மிச்சமிருந்த ஜோடி உழவுக்காளைகளையும்

ஒரு காராம்பசுவையும் சந்தைக்கு ஓட்டிவிட்டு

லகரங்கள் கைமாற பத்து ஏக்கர் நிலத்தை

ஓரிரவில் ரியல் எஸ்டேட்டுக்கு தாரைவார்த்து

மறுயிரவில் குடும்பத்தோடு நகரம் நகர்ந்தார்.

பொன்னி நெகிழி தொழிற்சாலை!

ஏரியைத் தூர்த்து உருவாக்கிய

தொழிற்பேட்டையில்

சூட்டோடு சூடாக

வயல் விற்ற காசு உருக உருகத்

தொடங்கிவிட்டார் தன் நெடுநாள் கனவான

நெகிழி தொழிற்சாலையை

மகள் பொன்னியின் பெயரில்.

இனி அவரது நிறுவனத்திலிருந்தும்

தயாரிக்கப்படலாம்

பிளாஸ்ட்டிக்கில் அரிசி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு