பிரீமியம் ஸ்டோரி

பர்தா பெண்ணின் 

பரிபூரண ஓவியம்

பர்தா பெண்ணை வரைவது

அத்தனை எளிது.

அவளது அலங்காரங்களில்

கவனம் செலுத்தவேண்டியதில்லை

அவளது ஆடை நிறம் குறித்த குறிப்புகள் எதுவும் தேவையில்லை.

பர்தா பெண்ணின் கைகள் மட்டும்

தொலைவிலிருந்தும் தெரியலாம்ஞ்

ஒரு குழந்தையைப் பற்றியபடியோ

புத்தகங்களை மார்போடு அணைத்தபடியோ

தாயின் தோழியின் கரம் பற்றியோ

கணவனின் கரம் பற்றியோ

எதுவோ ஒன்றாய்ஞ்  

முக லாவண்யங்களுக்கும்

உணர்ச்சிகளுக்கும்

முக்கியத்துவமில்லை என்றாலும்

கண்களுக்கான சிறு இடைவெளியில்

அவள் காண்கிற உலகின் வண்ணங்களை உங்களால் இனம்காண முடிந்தால்

ஒரு பரிபூரண பர்தா பெண்ணை

ஓவியமாக்கிவிட முடியும்.

 - நர்மதாகுப்புசாமி

கடவுள்

சற்று முன்தான் கடவுளைப் பார்த்தேன்

சரியாக ராயப்பேட்டை ஹைரோடில்

கொஞ்சமாக அழுக்குப் படிந்த

வெள்ளை வேட்டி சட்டையில்,

’பசிக்கிறது நாலு இட்லி வாங்கித் தா’ என்றார்

அமைதியாக உண்டவர்

கண்ணீரைத் துடைத்தவாறு

கையெடுத்து

எனை வணங்கிச் சென்றார்.

- ராஜ்குமார் நடராஜ் 

சொல்வனம்

பேரன்பு கொண்ட...

மைக்கின் பொத்தல்கள் அடைத்துக்கொள்கின்றன

மாவட்டச் செயலாளரின்

எச்சில் தெறிக்கும் பேச்சில்

ஐந்தாண்டு கால

ஹிட்லர் ஆட்சி

ஐந்தாண்டு கால

கொடுங்கோல் ஆட்சி

ஐந்தாண்டு கால

அடக்குமுறை ஆட்சியென

வார்த்தைஜாலத்துக்கு

நேரம் ஒதுக்கி செருமி செருமி

அக்வாஃபீனாவை அண்ணாத்துகிறார்.

நொடிக்கொரு

நகைச்சுவைத் துணுக்குச் சொல்லி

தான் மட்டும் சிரித்து

ஒன்றியம் பகுதியென

மேடையில் வீற்றிருப்பவர்களையும்

சிரிக்கவைக்க முயலும்

மாவட்டத்துக்கு

ரெண்டு இன்னோவா

நாலு கோழிப்பண்ணை

மூணடுக்கு மாடி

இன்க்லூடிங் அஞ்சி பொட்டபுள்ள...

சட்டமன்றத் தேர்தலுக்கு

ஒத்திகைபார்த்து

பெட்டி மாற்றிக்கொண்டதோடு

பொதுக்கூட்டம் முடிந்தது.

- வினையன்

வாக்குமூலம்

இந்தச் சமூகத்துக்கு

நான் இறுதியாகக்

கூறவிரும்பும் செய்தி எதுவெனில்

சொல்வனம்

இனிவரும் காலங்களில்

சொல்லும்படியாக

எந்தவொரு முக்கியச் செய்தியும்

இருக்கப்போவதில்லை’

என்பதே.

அ.கார்த்திகேயன்

ஓவியம்: ஜி.ராமமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு