அம்மாவின் முறைக்காகக் காத்திருந்தேன்
பிரபல மருத்துவமனையில்
முப்பது அகவையை விருப்பமின்றி நெருங்கியும் தாண்டியும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பெண்களிருவர் தங்கள் சிறுவயது மகள்களுடன் அருகில்.
நெருக்கத்தில் பூத்திருந்த அவ்விரு மலர்களையும்
பார்த்திருக்கப் பிடித்ததெனக்கு.
அகன்ற திரையில் லூஸான விவாதங்களைக்
காண்பதைவிடவும்.

அம்மாக்களின் பிடியிலிருந்து லாகவமாகக் கீழிறங்கி
சக்கர நாற்காலி ஏற்றி இறக்கும் சரிவில்
சரிந்து விளையாடிய பின்
ஓடிக்கொண்டும் பிடித்துக்கொண்டும் இருந்த மலர்களைப்
புன்னகையுடன் வருடிச்சென்றாள் இளந்தாதி ஒருவள்
இருவாட்சி மணம் கமழும் வரவேற்பறையில்.
கவனம் கலைந்த பெற்றோர்கள் பதறிச் சென்று
வரமறுத்த குழந்தைகளை 'அமைதியா இரு’ எனக் கண்டித்து
அவரவர் மடியிருத்தித் திரையில் மூழ்கினர் மீண்டும்.
இருவாட்சியின் இதழ்கள் இப்போது வாடிப்போயிருந்தன
மேலும் மருத்துவமனையின் கசந்த நெடி
மெள்ளக் கசியத் தொடங்கியிருந்தது
காத்திருப்பறை முழுவதும்.