பால்

``இந்தப் பால்காரன், `பசும்பால்’னு சொல்லி எந்தப் பாலைக் கொடுக்கிறானோ தெரியலை?’’ என்று சொல்லிக்கொண்டே தன் குழந்தையின் ஃபீடிங் பாட்டிலில் பாலை ஊற்றினாள்... சமீபத்தில் அம்மாவாகியிருந்த கோமதி!

- நெய்வேலி தேன்ராஜா

படிந்த பேரம்

நாற்பதில் இருந்து ஐம்பது தொகுதிகளாக உயர்த்தியும் படியாத கூட்டணி பேரம், நான்கே பெட்டிகளில் படிந்தது!

- அஜித்

ஸ்டார்நைட்

``ரஷ்யாவுல ஒரு பாட்டுக்கு நயனோடு டான்ஸ் ஆடுறேன்” - சந்தோஷமாகச் சொல்லிக்கொண்டிருந்தான் மனைவியிடம், ஹீரோவாக நடிக்க முயற்சித்து வாய்ப்பு கிடைக்காமல் குரூப் டான்ஸரான கோவிந்த்!

- பெ.பாண்டியன்

முள்

``கால்ல சின்னதா ஒரு முள்ளு குத்திருச்சு.

ஒரு வாரம் ஆச்சு... அடியெடுத்துவைக்க முடியலை...’’ என்று டாக்டரிடம் முனகினான் லாடம் அடிப்பவன்!

- தங்க.நாகேந்திரன்

புறக்கணிப்பு

பெட்டி வாங்கிய பின்னர் தலைவர், தொண்டர்களிடம் கூறினார், ``இந்தத் தேர்தலில் பணம் விளையாடும் என்பதால், நாம் தேர்தலைப் புறக்கணிப்பதைத் தவிர வேறு வழி இல்லை!”

- வேம்பார் மு.க.இப்ராஹிம்

எட்டு... ஏழரை

8 போட்டு லைசென்ஸ் வாங்கியவன், புது பைக்கை புக் செய்யும்போது சொன்னான்... ``கூட்டல் எண் 8 வராம பாத்துக்கோங்க!’’

- ஹரி கிருஷ்ணன்

பரவசம்

ஓவியப் பிச்சைக்காரன் வரைந்திருந்த பிள்ளையார் படத்தைப் பார்த்து, காசு போட்டவர்களைவிட கன்னத்தில் போட்டுக்கொண்டவர்களே அதிகம்!

- பர்வீன் யூனுஸ்

ஜன்னல்

``ஜன்னலைத் திற... காற்று உள்ளே வரட்டும்’’ என்று கிராமத்தில் அப்பா கூறிய அதே நேரத்தில், “ஜன்னலை நல்லா மூடு...

ஏ.சி வெளியில போயிடும்’’ என்றான் மகன் அப்பார்ட்மென்ட்டில்!

- நந்த குமார்

சிச்சுவேஷன் சாங்

அசல் கிராமத்துக் கதையைச் சொல்லிய இயக்குநரிடம், ``பாடல் கம்போஸிங்கை லண்டனில் வைத்துக்கொள்ளலாம்’’ என்றார் அந்தப் புதுமுக இசையமைப்பாளர்!

- பாலூர் பிரேம்பிரதாப்

அங்கீகாரம்

வேறு ஜாதி பையனுடன் ஓடிப்போன தன் மகளை, குழந்தைகளுடன் பார்த்த அப்பா, சில நிமிட யோசனைக்குப் பின்னர் அந்த போட்டோவுக்கு லைக் போட்டார் ஃபேஸ்புக்கில்!

- பொ.குமரேசன்

அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய ‘நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ` 500. உங்கள் கதைகளை 10secondstory @vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!