ஞாயிற்றுக்கிழமை

கறிக்குழம்பாகி மதியப் பசி தீர்க்க

வாசலில் இன்னமும்

உயிரோடு படுத்திருக்கிறது கோழி.

மஞ்சளும் அருவாமனையும் அருவாளும்

செய்யப்போகும் கொலையை நினைத்தாலும்

சலனமின்றித் தயாராக அமர்ந்திருக்கின்றன

முற்றத்துத் திண்ணையில்.

அப்பா செய்தித்தாளில்

அம்மா சமையலறையில்

தங்கை துணி துவைப்பில்

தம்பி தொலைக்காட்சியில்

நான் அலைபேசியில்

அழகான ஞாயிற்றுக்கிழமை

தன் கோரப்பற்களைக் காட்டிக் காட்டி

பயமுறுத்துகிறது.

மௌனமாய்ப் படுத்தபடியிருக்கும்

கால்கள் கட்டப்பட்ட கோழியுடன்

பேரென்ன... உன் பேரென்ன

எனக் கேட்கிறான் மோனிக்குட்டி.

மோப்பம் பிடித்துவிட்ட காகமொன்று

நெல்லி மரத்தின் மேலமர்ந்து கரைகிறது.

எவற்றையும் கண்டுகொள்ளாமல்

வைக்கோல் போரில் வைக்கோல் திருடுகிறது

ஒற்றைச் சிட்டுக்குருவி.

எதையும் சொல்லாது நானும்

எதையும் சொல்லாது நீயும்

பாரமேறி அழுத்திக்கொண்டிருக்கிறது

எதையும் சொல்லாத

இந்த ஞாயிற்றுக்கிழமை.

- சௌவி

கதைசொல்லி 'டெடிபியர்கள்’

ஒற்றை மகளைக்

கட்டிக்கொடுத்த வீடுகளில்

மகள் ஆடிய ஊஞ்சல்களில்

நிச்சயம்

ஒரு 'டெடிபியர்’

ஆடிக்கொண்டிருக்கும்.

அந்த மகளைப் பற்றிய

கதைகளைச்

சொல்லிக்கொண்டு.

- ஆர்.ஜவஹர் பிரேம்குமார்

நல்ல வெயில்

தர்பூசணி வெட்டி

கோடையைத் திறந்துவைத்தார்

சாலையோர வியாபாரி

தாம்சனின் அணு மாதிரியை

சிறுசிறு துண்டுகளாகக்

கூறுபோட்டார்

மண்டை பிளந்திருந்த

பழத்தின் சிவந்த முகத்தில்

விதைகள் ஆயிரங்கண்களாக

நீர் வடிந்திருந்தது.

வெட்டிய பழமொன்றின்

கீற்றைக்

கவ்விச் சுவைத்து

தாம்சன் சொன்ன

எலெக்ட்ரான்களைத் துப்பியபடி

'’என்னா வெயில்...' என்று

சலித்துக்கொண்டேன்.

'நல்ல வெயில் சார்...'

என்றார் வியாபாரி.

- மு.மகுடீசுவரன்

ஞாயிற்றுக்கிழமை

கறிக்குழம்பாகி மதியப் பசி தீர்க்க

வாசலில் இன்னமும்

உயிரோடு படுத்திருக்கிறது கோழி.

மஞ்சளும் அருவாமனையும் அருவாளும்

செய்யப்போகும் கொலையை நினைத்தாலும்

சலனமின்றித் தயாராக அமர்ந்திருக்கின்றன

முற்றத்துத் திண்ணையில்.

அப்பா செய்தித்தாளில்

அம்மா சமையலறையில்

தங்கை துணி துவைப்பில்

தம்பி தொலைக்காட்சியில்

நான் அலைபேசியில்

அழகான ஞாயிற்றுக்கிழமை

தன் கோரப்பற்களைக் காட்டிக் காட்டி

பயமுறுத்துகிறது.

மௌனமாய்ப் படுத்தபடியிருக்கும்

கால்கள் கட்டப்பட்ட கோழியுடன்

பேரென்ன... உன் பேரென்ன

எனக் கேட்கிறான் மோனிக்குட்டி.

மோப்பம் பிடித்துவிட்ட காகமொன்று

நெல்லி மரத்தின் மேலமர்ந்து கரைகிறது.

எவற்றையும் கண்டுகொள்ளாமல்

வைக்கோல் போரில் வைக்கோல் திருடுகிறது

ஒற்றைச் சிட்டுக்குருவி.

எதையும் சொல்லாது நானும்

எதையும் சொல்லாது நீயும்

பாரமேறி அழுத்திக்கொண்டிருக்கிறது

எதையும் சொல்லாத

இந்த ஞாயிற்றுக்கிழமை.

- சௌவி

கதைசொல்லி 'டெடிபியர்கள்’

ஒற்றை மகளைக்

கட்டிக்கொடுத்த வீடுகளில்

மகள் ஆடிய ஊஞ்சல்களில்

நிச்சயம்

ஒரு 'டெடிபியர்’

ஆடிக்கொண்டிருக்கும்.

அந்த மகளைப் பற்றிய

கதைகளைச்

சொல்லிக்கொண்டு.

- ஆர்.ஜவஹர் பிரேம்குமார்

நல்ல வெயில்

தர்பூசணி வெட்டி

கோடையைத் திறந்துவைத்தார்

சாலையோர வியாபாரி

தாம்சனின் அணு மாதிரியை

சிறுசிறு துண்டுகளாகக்

கூறுபோட்டார்

மண்டை பிளந்திருந்த

பழத்தின் சிவந்த முகத்தில்

விதைகள் ஆயிரங்கண்களாக

நீர் வடிந்திருந்தது.

வெட்டிய பழமொன்றின்

கீற்றைக்

கவ்விச் சுவைத்து

தாம்சன் சொன்ன

எலெக்ட்ரான்களைத் துப்பியபடி

'’என்னா வெயில்...' என்று

சலித்துக்கொண்டேன்.

'நல்ல வெயில் சார்...'

என்றார் வியாபாரி.

- மு.மகுடீசுவரன்