உண்மையையும், நேர்மையையும் காலம் முழுவதும் வழுவாமல் தழுவி வாழ்ந்த காந்தியவாதி கணேசமூர்த்தி கண்மூடி விட்டார் என்ற செய்தி கிடைத்ததும் அதிர்ந்து போனார் சிவராமகிருஷ்ணன். தன்னலத்தின் நிழல்படாமல் மண்ணலம் காப்பதற்காகவே தங்களை முற்றாக அர்ப்பணித்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை கால நடையில் அருகி வருவது அவருக்குக் கவலையளித்தது.

கல்லுப்பட்டிக் காந்தி ஆசிரமத்தில் ஐம்பதாண்டுகள் கைம்மாறு கருதாமல் உழைத்துத் தேய்ந்த உன்னதமான தோழர் கணேசமூர்த்தி, தான் பிறந்த கல்லக்குடி மண்ணிலேயே கடைசியில் காலமாகி விட்டார். தன்னுடைய அழகிய அந்தரங்கமான ரகசியங்களை அறிந்து வைத்திருந்த ஒரே உயிர்த்தோழரையும் சிவராமகிருஷ்ணன் இன்று இழந்து விட்டார். காந்தியப் பாதையில் இவரை இழுத்து வந்து கல்லுப்பட்டி ஆசிரம வாழ்க்கையில் இணைத்து வைத்த கணேசமூர்த்தியோடு சேர்ந்து பணியாற்றிய காலத்தில் நிகழ்ந்தவை அனைத்தும் ஒன்றுவிடாமல் நெஞ்சில் நிழலாடின. கண்களில் ஈரம் கசிந்தது.

தமிழகத்தில் சிவராமகிருஷ்ணனின் குரல் ஒலிக்காத குக்கிராமமே இல்லை. ஆனால், கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் ஒருமுறை கூட அவர் கல்லக்குடியில் கால்பதித்ததில்லை. அதற்கான காரணத்தை அறிந்து வைத் திருந்த தோழரின் இறுதிப்பயணத்தில் பங்கேற்பதற்காக அவர் கல்லக்குடிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் நேர்ந்து விட்டது. அடிமனதில் ஆழமாகச் சுவடு பதித்திருக்கும் அந்த அழகிய ரகசியத்தின் ரணங்கள் தரும் வலி கல்லக்குடியில் கால்வைக்கும் போது கடுமையாகக் கூடிவிடும் என்ற நிலையிலும் வேறு வழியின்றி சிவராமகிருஷ்ணன் புறப்பட்டு விட்டார்.

ஈமக்கடன்கள் முடிந்து விட்டன. ஊரே ஒன்று திரண்டு அந்த உத்த மரின் இழப்புக்கு இரங்கி நின்றது. கணேசமூர்த்தியின் சடலம் கரிந்து சாம்ப லாகும் தருணம் கனத்த நினைவுகளுடன் கூட்டம் கலைந்தது. ஒரு நாளாவது இருந்து விட்டுப் போக வேண்டும் என்று காந்தியத் தோழர் காத்தமுத்து வற்புறுத்தியபோது, சிவராமகிருஷ்ணனால் மறுக்க முடி யவில்லை.

காத்தமுத்துவின் வீட்டுத் திண்ணை யில் காற்றாடப் பாய் விரித்துப் படுத்த வருக்கு இரவுமுழுவதும் உறக்கம் வரவில்லை. ஆயிரம் நினைவுகள் அடுக்கடுக்காக அலைமோதின. முப்பத் தைந்து ஆண்டுகளாய் வெளியே யாரும் கேட்க முடியாமல் நெஞ்சுக்குள் ஒலித் துக் கொண்டிருந்த நிசப்தசங்கீதம், இந்த இரவில் சலங்கையின் ஒலியாய் வெளியே கேட்டது.

திடுக்கிட்டு விழி திறந்தார் சிவராம கிருஷ்ணன். இருட்டின் கருமையில் எதுவும் புலப்படவில்லை. செவிகளில் கேட்ட சலங்கையின் சப்தம் தன் மனம் மீட்டும் மாயச்சங்கீதம் என்பது புரிந்து விட்டது. புரண்டு படுத்தார். திண்ணை யின் அருகில் ஜல் ஜல் என்று சலங்கை ஒலிக்க யாரோ நடந்து வந்து பக்கத்தில் நிற்பதுபோல் உணர்ந்தவர், எழுந்து அமர்ந்தார். கடியாரம் பார்த்தார். மணி நான்கு. மெல்ல எழுந்தார். துண்டைத் தோளில் போட்டபடி வீதியில் இறங்கி நடக்கத் தொடங்கினார்.

விளக்குகள் கூட எரியாமல் வெறிச் சோடிக் கிடந்த வீதியில் சிவராம கிருஷ் ணன் நடந்து சென்றபோது தொலை தூரத்தில் ஒரு நாயின் குரைப்புச் சத்தம் கேட்டது. ஊரின் உறக்கம் இன்னமும் கலையவில்லை. அவர் நடந்த வீதி, கல்லக்குடி ரயில் நிலையத்தில் வந்து முடிந்தது. இதே கல்லக்குடி ரயில் நிலையத்தில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மார்கழி மாதப் பனிக்கால வைகறைப் பொழுதில் தன் பெற்றோருடன் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸில் வந்திறங்கிய காட்சி அவரு டைய நினைவுத் திரையில் படம்போல் விரிந்தது.

புலர்காலைப் பொழுது பூப்பதற்கு முன்பே கல்லக்குடி ரயில் நிலையத்தில் நுழைந்த ரயிலில் இருந்து சிவாவும் அவனுடைய பெற்றோரும் மட்டும் இறங்கினர். பிளாட்பாரத்தில் இருந்த ஒரு தேநீர்க் கடையின் மங்கலான வெளிச்சத்தில் இரண்டு ஆட்கள் நின்று பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. சில்வண்டுகளின் ரீங்காரம் 'ஙொய்’ என்று செவிகளை நிறைத்தது. வானம் அடர்த்தியாய் இருண்டு கிடந்தது. ஒரு நட்சத்திரம் கூட கண்ணுக்குப் படவில்லை. 'அம்மா... யாராவது பொழுது விடிவதற்கு முன்பு பெண் பார்க்கப் போய் வாசலில் நிற்பார்களா?’ என்று சிரித்தான் சிவா.

'இப்பொழுது நாம் என் நண்பர் கைலாசம் வீட்டுக்குத்தான் போகிறோம். அங்கே குளித்து முடித்து எட்டு மணிக்கு மேல்தான் பெண் பார்க்கிறோம். கைலாசம் ஏற்கெனவே தகவல் தந்திருப்பார்’ என்று அப்பா விளக்கினார். சந்தையில் மாடு தேடுவது போன்று, வீடு வீடாய்ப் பெண் தேடுவதை விரும்பாதவன் சிவா. ஒரு பெண்ணைப் போய்ப்பார்ப்பதும், அவள் நெஞ்சில் ஆசையை அரும்பச் செய்து, இரக்கமின்றிப் பின் நிராகரிப்பதும், கொடியில் சிரிக்கும் பூவைப் பறித்துக் கால்களில் போட்டு மிதிப்பதை விட மிகவும் கொடுமையானது என்று தன் நண்பர்களிடம் சொல்பவன் அவன். 'ஆணாதிக்கத்தின் மோசமான வன்முறை வடிவமே பெண்பார்க்கும் படலம்’ என்று அடிக்கடி பேசும் சிவாவை அழைத்து வருவதற்கு அம்மா நிரம்பச் சிரமப்பட வேண்டியிருந்தது.

'ஒரேயொரு பெண்ணைத்தான் நான் நேரில் வந்து பார்ப்பேன். கறுப்போ, சிவப்போ, அவளைத்தான் மனைவியாக ஏற்பேன். நன்றாக யோசித்து முடிவு செய்துவிட்டு என்னைக் கூப்பிடுங்கள், வருகிறேன்’ என்று சிவா நிபந்தனை போட் டதை அம்மா மறுக்கவில்லை. 'பெண் ஆண்டாள் போல் இருப்பாள்’ என்று கைலாசம் எழுதிய கடிதத்தை அவள் நம்பினாள். சிவாவின் நிபந்தனைக்குத் தலையசைத்தவள். 'எல்லாம் நல்லபடி நடக்க வேண்டும்’ என்று ஆண்டவனை வேண்டிக் கொண்டாள்.

வந்தவர்களைப் பெண்ணின் தந்தை வேல்முருகன் வாசலில் நின்று வர வேற்றார். வரவேற்பறையில் காந்தி புன்னகை புரிந்தபடி சுவற்றில் படமாய்க் காட்சியளித்தார். வேறெந்தப் படங்களும் அங்கு இல்லை. வீடு புனிதமான ஒரு கோயில் போல் இருந்தது. வீட்டுப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்ததில் அழகும் நேர்த்தியும் வெளிப்பட்டதைச் சிவா பார்த்தான். தேவையற்ற பொருள் ஒன்று கூட அங்கு இல்லை. சம்பிரதாய வார்த்தை விசாரிப்பு முதலில் முடிந்தது. வேல்முருகன் மனைவி சிந்தியா தேநீர் தந்து உபசரித்தார். 'கஸ்தூரியை அழைத்துக் கொண்டு வா’ என்று மனை வியிடம் வேல்முருகன் சொன்னார்.

கஸ்தூரி, தலைகுனிந்தபடி வந்து நின்றாள். விட்டுவிட்டு அளவாக ஒலிக்கும் வீணையின் நாதம் போன்று அவளுடைய பாதச்சங்கிலி ஒலித்து ஓய்ந்தது. முதற்பார்வையிலேயே சிவாவின் நெஞ்சம் முழுமையாகப் பறிபோனது. நிர்மலமான ஆகாயத்தைப் போன்று பளிச்சிட்ட அவளது பவித்திரமான முகத்தைக் கண்டதும் உடல் முழுவதும் பரவசம் படர்ந்தது. எந்தப் போலிப் பூச்சும் இல்லாமல் இயற்கை தந்த அழகோடு இயல்பாய், எளிமையாய் வந்து நின்றவள் அனைவரையும் கை குவித்து வணங்கியதே ஒரு நளினமான அபிநயமாய் சிவாவுக்குத் தோன்றியது.

'நான் ஒரு காந்தியவாதி. பொய்யான வாழ்க்கையைப் புறந்தள்ளியவன். கஸ்தூரி எங்கள் ஒரே மகள். இந்த மண்ணின் மரபுகளோடு இவளை வளர்த் திருக்கிறோம். பொறுப்பான பெண். பாரதியின் பாடல்களை அழகாகப் பாடுவாள். கைலாசம் உங்களைப் பற் றியும் தம்பியைப் பற்றியும் நிறைய சொல்லியிருக்கிறார். அரசுக்கல்லூரியில் தம்பி ஆசிரியராக இருப்பதில் மகிழ்ச்சி. நீங்கள்தான் முதலில் கஸ்தூரியைப் பார்க்க வந்திருக்கிறீர்கள். எல்லாம் நல்லபடியாக அமைந்தால் சந்தோஷம்’ என்று மென்மையாகப் பேசினார் வேல் முருகன்.

'கஸ்தூரி... உனக்குப் பிடித்த ஒரு பாரதியார் பாட்டைப் பாடேன்...’ என்று கைலாசம் சொன்னதும் சிவா அவசரமாக மறுத்தான். 'பெண்ணுக்குப் பாடத் தெரியுமா, ஆடத்தெரியுமா என்று பரீட்சை வைக்க நாங்கள் வரவில்லை. பெண் பார்க்கும் சம்பிரதாயமே எனக்குப் பிடிக்காது. அம்மாவின் வற்புறுத்தலுக்காக நான் வந்தேன். பெண்ணை எனக்குப் பிடித்திருக்கிறது’ என்று கொஞ்சமும் கூச்சமில்லாமல் சிவா சொன்னதும், அதுவரை தலை குனிந்து அமர்ந்திருந்த கஸ்தூரி மெள்ள விழியுயர்த்தி வியப்புடன் பார்த்தாள்.

'பரவாயில்லை தம்பி. பரீட்சைக்குப் படிப்பது தண்டனை. விருப்பத்துக்குப் படிப்பது சுகமில்லையா? பாடத் தெரிந் தவர்கள் பாடுவதில் ஒரு தவறுமில்லை. கஸ்தூரி... நீ பாடம்மா’ என்றார் வேல் முருகன். கஸ்தூரி தயக்கத்துடன் அம் மாவைப் பார்த்து மௌனமொழி பேசினாள். 'பாடு’ என்று அம்மா காதில் கிசுகிசுத்தார். அறையில் சிறிதுநேரம் அமைதி. 'நின்னைச் சரணடைந் தேன் கண்ணம்மா’ என்று கஸ்தூரி பாடியபோது அவள் குரலில் இருந்த இனிமையும், பாட்டில் காட்டிய பாவமும் அனைவரையும் கிறங்கடித்தது. உடம்பின் ஒவ்வோர் எலும்பும் உருகிக் கரைவதுபோல் உணர்ந்து சிலிர்த்தான் சிவா. அவன், அவளிடம் பூரணமாகச் சரணடைந்து விட்டான்.

கஸ்தூரி தன் தாயுடன் உள்ளே சென்று விட்டாள். வேல்முருகன் கைலா சத்தைப் பார்த்து. 'எல்லாவற்றையும் சொல்லிவிட்டீர்களா?’ என்று கேட்டார். 'அதிலொன்றும் பிரச்னை இல்லை. சொல்லித்தான் தீரணும்னா நீங்களே சொல்லுங்களேன்’ என்றார் கைலாசம் சிரித்தபடி. வேல்முருகன் ஒரு கணம் காந்தி படத்தை உற்றுப் பார்த்தார். பிறகு, சிவாவின் தந்தையிடம், 'எனக்குச் சாதிப்பிரிவுகளில் நம்பிக்கை இல்லை. நான் மட்டும்தான் உங்கள் சமூ கம். என் மனைவி ஒரு கிறித்துவ தலித். இருவரும் ஒரே கல்லூரியில் படித்தோம். ஒருவருக்கொருவர் பிடித்திருந்தது. கணவன் - மனைவி ஆனோம். சாதிகெட்ட குடும்பத்தில் கை நனைச்சிட்டோமே என்று நாளை நீங்கள் யோசித்துவிடக் கூடாது. ஊரும் உறவும் எனக்கு முக்கியம் இல்லை. கஸ்தூரி வாழப்போவது உங்கள் வீட்டில். நீங்கள் நினைப்பதுதான் எனக்கு முக்கியம்’ என்றார்.

அப்பாவுக்கு அதுவொரு பிரச் சனையாகவே படவில்லை. 'ஐயா, யாரும் இந்த ஜாதியில்தான் பிறக்க வேண்டும்னு வரம் வாங்கிக்கொண்டு வருவதில்லை. இன்னார்க்கு இன்னார் என்று முதலிலேயே கடவுள் முடிச்சுப் போட்டுத்தான் அனுப்பி வைக்கிறான். அதை யாரும் மாற்ற முடியாது. இந்தப்பேச்சை இத்துடன் விடுங்கள். பெண்ணைக் கூப்பிட்டுப் பையனைப் பிடிச்சிருக்கான்னு ஒரு வார்த்தை கேட்டால் நல்லது. அதற்குப்பிறகு ஆகவேண்டியதைப் பார்க்கலாம்’ என்று அப்பா சொன்னதும் நெகிழ்ந்து போனார் வேல்முருகன். 'எவ்வளவு பெரிய மனசு!’ என்று பரவசமான சிந்தியா மகளை மீண்டும் அழைத்து வந்தார். இதழ்க்கோடியில் இனிமை சேர்க்கும் ஒரு வேதக்கன்னியின் தெய்வீகப் புன்னகையுடன் 'பிடிச்சிருக்கு’ என்று சொல்லித் தலையசைத்தாள் கஸ்தூரி. காற்சலங்கையின் சத்தம் திரும்பவும் சிவாவின் காதில் சுநாதமாய் ஒலித்தது.

நிச்சயதார்த்தம் நிகழ்வதற்கு இரு வீட்டு உறவுகளும் சிவாவின் இல்லத்தில் கூடியிருந்தனர். முதலில் சிவாவின் பெரியப்பா வாய் திறந்தார். 'என் தம்பி எங்களிட ஒரு வார்த்தை சொல்லாமல் அவனாகவே முடிவு செய்து நிச்சய தார்த்தம் வரை வந்துவிட்டான். அவன் பிள்ளை. அவனோட விருப்பம். ஆனால், நான் விசாரித்ததில் நீங்கள் ஜாதி கெட்டவர்கள் என்று தெரிந்தது. ஜாதி கெட்ட குடும்பத்தில் சம்பந்தம் பேசுவது எங்களுக்கு வழக்கமில்லை. இந்தக் கல்யா ணத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இதை உங்களிடம் நேரில் சொல்லத்தான் நாங்கள் வந்தோம். நீங்கள் வேறிடம் பார்ப்பதுதான் உங்கள் பெண்ணுக்கு நல்லது’ என்று கோபக்குரலில் அவர் கொந்தளித்தைப் பார்த்து அப்பா அதிர்ந்து போனார். வேல்முருகனின் முகம் இருண்டுவிட்டது. அவர் அப் பாவைப் பார்த்தார். சிவாவைப் பார்த்தார். யாரும் வாய்திறக்காமல் இருந்ததைக் கண்டு அவருடைய இதயம் வலித்தது. விருட்டென்று எழுந்தார். மனைவியிடம் கண் ஜாடை காட்டிவிட்டு வெளியேறினார்.

அந்த நாளை சிவராமகிருஷ்ணனால் எப்படி மறக்க முடியும்? கல்லக்குடி ரயில் நிலையம் அருகில் நின்றவர், அங்கிருந்து கழிவிரக்க நினைவுகளுடன் கைகோத்தபடி முத்தைய்யர் தெருவைத் தேடி நடையைத் தொடர்ந்தார். அங்குதான் கஸ்தூரியின் வீடு இருந்தது. காலத்தின் நீண்ட இடைவெளியில் இன்று அந்த வீடு எப்படியிருக்கும்? வேல்முருகன் உயிரோடு இருப்பாரா? யாருடைய தோள்களில் கஸ்தூரி மாலையாக விழுந்திருப்பாள்? இந்த விவரங்களை அறிந்து இப்போது ஆகப் போவது என்ன? பல்வேறு கேள்விகளில் உள்மனம் ஊசலாடியது. வேல்முரு கன் வீட்டில் இரண்டாவது முறை கஸ்தூரியைக் கண்ட சம்பவத்தைச் சிவ ராமகிருஷ்ணன் சிந்தித்தபடி நடந்தார்.

நிச்சயதார்த்தம் நின்றுவிட்டது. 'தியாகு.... காலங்காலமாகப் பெரியவர்கள் பின்பற்றிவந்த ஜாதிஆசாரம் பழைய கட்டுமானத்தோடு காப்பற்றப்படணும். அதில் சேதாரம் வரக்கூடாதுடா. போயும் போயும் கழுநீர்ப் பானையில் கைநனைக்கப் பார்த்தியே. நம்ம குலத்தில் பெண்ணா இல்லை? போகட்டும் விட்டுத்தொலை’ என்று தந்தையிடம் உபதேசம் செய்த பெரியப்பாவின் குரல்வளையைப் பிடித்து நெரிக்க வேண்டும்போல் சிவாவின் கை பரபரத்தது. தந்தைக்காக அவன் அமைதி காத்தான்.

வேறொரு பெண்ணை இனி நெஞ்சில் வைத்து உருக சிவாவால் முடியாது. கஸ்தூரியைப் பார்த்த நாள்முதல் இந்தப் பிறவியில் அவள்தான் தன்மனைவி என்று அவன் திடம் கொண்டுவிட்டான். ஒரு வாரம் கடந்தது. கஸ்தூரியின் பெண்மைப் பேரழகும், பாதச்சங்கிலியின் பண்ணிசையும், 'நின்னைச் சரண்டைந்தேன்’ பாடலில் குழைந்த பாவமும் ஒரேயொரு கணம்கூட அவன் நினைவிலிருந்து விலகவே இல்லை. பெற்றோருக்குத் தெரியாமல் கல்லக்குடிக்குப் புறப்பட்டு விட்டான்.

வேல்முருகன் வீட்டுக் கதவை சிவா தட்டியபோது கஸ்தூரிதான் திறந்தாள். ஆனந்த அதிர்ச்சியில் அவள் முகம் நாணிச் சிவந்தது, 'வாருங்கள்’ என்று வீணையின் குரலிசைந்து உள்ளறைக்குள் ஓடி ஒளிந்தபடியே நின்றாள். வரவேற்பறையில் அமர்ந்து காந்தியின் 'புலனடக்கம்’ படித்துக் கொண்டிருந்த வேல்முருகன் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் முகம் உயர்த்திப் பார்த்தார். தயங்கி தயங்கி உள்ளே வந்து அமர்ந்தான் சிவா.

'முதலில் நீங்கள் எங்களை மன்னிக்க வேண்டும்’. என் பெற்றோர்க்கு எப்போதும் சாதிவெறி கிடையாது. நான் பள்ளிப் பருவத்திலிருந்து பாரதியைப் படித்தவன். சாதி பற்றிய பிரக்ஞையே இல்லாதவன். பெரியப்பா அப்படிப் பேசுவார் என்று நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. நான் உங்கள் மகளை என் மனைவியாக நெஞ்சில் நேர்ந்து கொண்டு விட்டேன். என் பெற்றோர் பெரியப்பாவுக்காகத் தயங்கினாலும், நீங்கள் அனுமதித்தால் கஸ்தூரியை நான் பதிவுத்திருமணம் செய்துகொள்கிறேன். என்ன சொல்கிறீர்கள்?' என்று சிவா கேட்டபோது மகிழ்ச்சி ததும்பும் மனதோடு கஸ்தூரி உள்ளறையிலிருந்து தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் எட்டிப் பார்த்தாள்.

வேல்முருகன் புத்தகத்தை மூடிவிட்டுச் சிறிதுநேரம் மௌனமாக இருந்தபோது, அந்த வீட்டில் மூன்று ஜீவன்கள் நல்ல பதிலை நாடி நெஞ்சுக்குள் பிரார்த்தித்தன. 'தம்பி... நீங்கள் மிகவும் நல்லவர். 'நாம் வரம் வேண்டியா ஒரு சாதியில் பிறக்கிறோம்' என்று இந்த வீட்டில் தத்துவம் பேசிய உங்கள் அப்பா, அவருடைய அண்ணன் அனைவர் நடுவிலும் என்னை அவமானப்படுத்தியபோது எதுவும் பேசவில்லை. அவர், அண்ணனை மீறி நடக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. நீங்கள் பெற்றோரை மீறி என் பெண்ணைத் திருமணம் செய்வதையும் நான் விரும்பவில்லை. உங்கள் இருவருக்கும் இறைவன் முடிச்சுப்போட்டு அனுப்பவில்லை என்றே நான் நினைக்கிறேன். என்னை மன்னிச்சிடுங்க. எல்லாம் விதிப்படி நடக்கும்’ என்று சொல்லியபடி எழுந்து நின்று கைகூப்பி வணங்கினார் வேல்முருகன்.

சிவராமகிருஷ்ணன் முத்தைய்யர் தெருவை அடைந்து, வேல்முருகன் வீட்டைக் கண்டுபிடித்து விட்டார். முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னும் அந்தத்தெரு அப்படியே இருந்த போதிலும் வேல்முருகன் வீட்டின் முகம் மட்டும் மாறியிருந்தது. சுவரில் சுண்ணாம்பு அழிந்து, கதவிலும் கம்பிகளிலும் வண்ணம் தொலைந்து உடல் முழுவதும் சுருக்கம் விழுந்து, இளமையைத் தொலைத்த ஒரு மூதாட்டி போல் காட்சியளித்த அந்த வீட்டின் கதவில் பெரிய பூட்டுப் போட்டப்பட்டிருந்தது. காலத்தின் ஓட்டத்தில் எந்தக் கரையில் யார் ஒதுங்கினார்கள் என்று யாரிடம் போய்க்கேட்பது? சிந்தித்தபடி சிவராமன் அந்த வீட்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். காலம் யாரை எங்கே எப்படி வழி நடத்தும் என்று யார் கண்டது?

கஸ்தூரியின் கரம் பற்றுவதை ஒரு மனிதரின் சாதிவெறி தடுத்ததில் சரிந்து போன சிவராமகிருஷ்ணன் இனிமேல் தன் வாழ்வில் இல்லற சுகத்துக்கு இடமில்லை என்று முடிவெடுத்தார். தான் பணியாற்றிய கல்லூரியில் காந்தியம் பற்றிப் பேசவந்து, தன்னைப் பெரிதாகப் பாதித்த கணேசமூர்த்தி கல்லுப்பட்டி ஆசிரமத்தில் இருப்பதை அறிந்து அவருடன் தொடர்பு கொண்டார். பேராசிரியர் பணியை உதறிவிட்டு வாழ்க்கை முழுவதும் தலித் மக்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபட உறுதி பூண்டு கணேசமூர்த்தியுடன் ஆசிரமத்தின் சேவைகளில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தோழர் சிவராமகிருஷ்ணன் வாழ்வில் அனைத்தையும் துறந்தார். ஆனால், கஸ்தூரியின் நினைவை மட்டும் துறக்க அவரால் முடியவில்லை. யாருக்கும் தெரியாமல் நிலத்துக்கடியில் ஓடும் நீரோட்டம் போல் அவளுடைய அழகிய நினைவுகள் மட்டும் இளமை மாறாமல் அவருக்குள் நிழலாடிக் கொண்டிருக்கிறது. 'கலிப்பகைக்கு நிச்சயிக்கப்பட்ட திலகவதி, அவன் போர்க்களத்தில் மடிந்ததும் வேறொருவனைக் கரம் பிடிக்கவில்லை. கலிப்பகை இருந்து, திலகவதி இறந்திருந்தால் அவன் என்ன செய்திருப்பானோ தெரியாது. நான் ஆண் திலகவதியாக இருந்துவிட்டுப் போகிறேன்’ என்று கணேசமூர்த்தியிடம் ஒருமுறை சொன்னது வேல்முருகன் வீட்டுக்கு முன் நின்றபோது நினைவுக்கு வந்தது.

'நின்னைச் சரணடைந்தேன்’ பாட்டும், கால் சதங்கையின் ஒலியும், நாணத்துடன் சிரித்தபடி அவள் இதழ் திறந்து 'பிடிச்சிருக்கு’ என்று சொன்ன ஒற்றைச் சொல்லும் ஓசையின்றி இப்போதும் சிவராமகிருஷ்ணன் இதயத்தில் நிசப்த சங்கீதமாய் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. முள் இலைகளைக் கடித்து நாக்கில் ரணமாகிப் போனாலும், மீண்டும் அந்த இலைகளிலேயே ஆசை வைக்கும் ஆடு, மாடுகளைப் போல் அவருடைய மனமும் கஸ்தூரியின் நினைவுகளிலேயே திரும்பத் திரும்ப வலம் வருகிறது.

அழுகையும் புலம்பலும் ஆண்மைக்கு அந்நியமானவை என்று அவர் உணர்ந்திருந்தாலும், பூட்டிக் கிடக்கும் வீட்டைப் பார்க்கும்போது விழிகளில் நீர் வழிவதைத் தடுக்க முடியவில்லை. ஒரு தேவதையின் திருக்கோயிலைப் பார்க்கும் பாவனையில் சிவராமன் அங்கேயே கஸ்தூரியின் நினைவுகளுடன் நின்று கொண்டிருக்கிறார். வானம் இருள் கிழித்துக் கொஞ்சம் கொஞ்சமாய் வெளுத்துக் கொண்டிருக்கிறது!