பாளையங்கோட்டை, 7-ம் திகதி,

மார்ச், 1938. திங்கள்கிழமை

மகாகனம் பொருந்திய திருநெல்வேலி ஜில்லா ஸ்ரீமான் டிஸ்ட்ரிக்ட் பாரஸ்ட் ஆபீசர் துரை அவர்களின் திவ்ய சமூகத்துக்கு,

இப்பவும் திருநெல்வேலி ஜில்லா, இசக்கிக் குளம் தாலுக்கா, முத்தண்ணம்பாளையம் பிர்க்கா, வேடபட்டி கிராமம், மச்சுவீடு ரங்கமன்னார் மகன் ஆளவந்தார் சமர்ப்பித்துக்கொள்ளும் விண்ணப்பம் யாதெனில்,

நமஸ்காரம். இப்பவும் நான் பாளையங்கோட்டை குயின் விக்டோரியா பாடசாலையில் இங்கிலீஷ் பாடத்தையும் விஞ்ஞான பாடத்தையும் மூன்றாம் பாரத்துப் பிள்ளைகளுக்குப் போதனை செய்து வரும் உபாத்தியார் ஆவேன்.

நிற்க. இப்பம் இந்தக் கடுதாசை சமூகத்துக்கு விண்ணப்பிக்கும் காரணமாகப்பட்டது யாதெனில்,

நான் சமீப காலமாக மரவட்டை என்று சொல்லத் தகுந்த, ஊருகின்ற ஒரு ஜாதிப் பூச்சிகளின் ஜீவசரிதம் சம்பந்தமான சமாச்சாரங்களில் கவனம் பண்ணி வருகிறேன். அப்பேர்க்கொத்த அநேகம் பூச்சிகள் மாஞ்சோலைக்கும் மேல் இருக்கப்பட்ட வனாந்திரங்களில் சஞ்சாரம் பண்ணுவது துரையவர்களின் சமூகத்துக்குத் தெரிந்திருக்கும்.

அந்த வட்டாரத்தில் கன்னிகட்டியில் இருக்கப்பட்ட பாரஸ்ட் பங்களாவில் வருகிற ஏப்ரல் மாசம் 2, 3 ஆகிய திகதிகளில் ரெண்டு நாளைக்கு அடியேன் தங்கி என்னுடைய ஆராய்ச்சியைப் பண்ணுவதற்குத் தோதாக துரையவர்கள் பெர்மிஷன் கொடுக்க வேணுமாய் நமஸ்காரம் பண்ணிக் கேட்டுகொள்கிறேன்.

வேணும் சுபம்.

அடியேன்,

ஆர்.ஆளவந்தார்

டிஸ்டிரிக்ட் பாரஸ்ட் ஆபீஸ், திருநெல்வேலி, 23-ம் திகதி, மார்ச், 1938. புதன்கிழமை

மிஸ்டர் ஆர்.ஆளவந்தார்,

தங்களது கோரிக்கை கவனமுடன் பரிசீலிக்கப்படுகிறது. வனத்துக்கோ வன உயிரினங்களுக்கோ எந்தவிதமான சேதாரத்தை ஏற்படுத்தாமலும், ரெஸ்ட் ஹவுஸை சுத்தமாக வைத்திருக்கும்படிக்கும் உமக்கு எடுத்துச் சொல்லி, நீங்கள் விண்ணப்பம் செய்தபடிக்கு ஏப்ரல் மாசம் 2, 3 இரண்டு திகதிகளில் கன்னிகட்டி ரெஸ்ட் ஹவுஸின் சூட் நெம்பர் 2-ல் தங்கிக்கொள்ள உத்தரவு இதன் மூலம் அளிக்கப்படுகிறது. ரெஸ்ட் ஹவுஸ் புஸ்தகத்தில் பதிந்து, தங்கும் கட்டணத் துகையான ஆறு அணாவை பங்களா வாச்சர் மாதப்பன் வசம் கொடுத்து முறையான சர்க்கார் கைச்சாத்து பெற்றுக்கொள்ள வேண்டியது என்பதை அறியவும்.

ஓ.எம்.கிங்ஸ்லி டேவிட்சன்,

டிஸ்ட்ரிக்ட் பாரஸ்ட் ஆபீசர்

பாளையங்கோட்டை, 5-ம் திகதி, ஏப்ரல், 1938. செவ்வாய்க்கிழமை.

ஸ்ரீமான் டிஸ்ட்ரிக்ட் பாரஸ்ட் ஆபீசர் துரை அவர்களின் திவ்ய சமூகத்துக்கு,

அடியேனுடைய விண்ணப்பத்துக்குச் செவி சாய்த்துத் துரை அவர்கள் பெர்மிஷன் கொடுத்து ஆதரித்ததற்கு நன்றி.

நான் மேற்படி பாரஸ்ட் பங்களாவுக்குப் போயிருந்த சமயம் அங்கு யாதொரு வாச்சரோ வேறு எவருமோ இல்லையாகப்பட்டதால், நான் வேறு வழியின்றிக் கட்டடத்தைச் சுற்றிப்பார்க்கும் காலை, பின்வாசல் கதவு சரியாக மூடப்படாமல் பாதி திறந்தே கிடந்ததைக் கண்ணுற்றேன். மூணு மணிக்கூறு தாமசம் செய்தும் ஒருத்தரும் வராததால் நான் பின்வாசல் வழியாக உட்புகுந்து சூட் 2-ல் ஏப்ரல் மாசம் 2, 3 திகதிகளில் தங்கி, ரெண்டு நாட்கள் மரவட்டை ஆராய்ச்சி செய்து, தங்கள் ஆக்ஞைப் பிரகாரம் ஏதொன்றுக்கும் யாதொரு ஹானியுஞ் செய்யாமல் பின்வாசல் கதவை பழையபடிக்கே மூடி வைத்துத் தெய்வ அருளாலே என்னூருக்கு வந்து சேர்ந்தேன். தங்கின காலத்துக்கு உண்டான துகையான 6 அணாவை கனம் பாரஸ்டர் வகையறாக் கணக்கில் திருநெல்வேலி சர்க்கார் கஜானாவில் கட்டி இருக்கிறேன். இத்துடன் அந்தக் கைச்சாத்து அடக்கம்.

வேணும் சுபம்.

அடியேன்,

ஆர்.ஆளவந்தார்

டிஸ்டிரிக்ட் பாரஸ்ட் ஆபீஸ், திருநெல்வேலி, 11-ம் திகதி, ஏப்ரல், 1938. திங்கள்கிழமை.

மெமோ

பெ.மாதப்பன், த/பெ. பெத்தண்ணன்,

பாரஸ்ட் பங்களா வாச்சர்,

கன்னிகட்டி.

நடப்பு ஏப்ரல் மாசம் 2, 3 ஆகிய ரெண்டு திகதிகளில் சர்க்கார் டூட்டிக்கு ஆஜராகாமல் ஏன் இருந்தீர் என்பதற்கான சமாதானத்தையும் உம்மீது ஆபீஸ் சட்ட திட்டங்களின்படி ஏன் ஆக்ஷன் எடுக்கக் கூடாது என்பதற்கான ஜவாப் என்ன என்பதையும் இந்தத் தாக்கீது உமக்குக் கிடைத்த 3 நாளைக்குள் தெரிவிக்க வேண்டியது. இல்லாத பட்சத்தில் உமது தரப்பில் நியாயம் ஏதும் இல்லை என்று முடிவு பண்ணி, சட்டதிட்டங்களில் சொல்லியபடி எக்ஸ் பார்ட்டி ஆர்டர் போடப்படும் என்பதை அறியவும்.

ஓ.எம்.கிங்ஸ்லி டேவிட்சன்,

டிஸ்ட்ரிக்ட் பாரஸ்ட் ஆபீசர்

மாஞ்சோலை, 14-ம் திகதி, ஏப்ரல், 1938. வியாழக்கிழமை.

மகா கனம் நிரம்பிய துரை அவர்கள் சமூகத்துக்கு, மாஞ்சோலை பெத்தண்ணன் மகன் பங்களா வாச்சர் மாதப்பன் மண்டிபோட்டுத் தெண்டனிட்டு எழுதிக் கொள்வது. நான் நடப்பு ஏப்ரல் மாசம் 1-ம் திகதி சாயுங்காலம் வரைக்கும் டூட்டி பார்த்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பி விட்டேன். அன்றைய தினம் என்னுடைய பாரியாள் பொன்னுத்தாய்க்குப் பெரிய மாரி (அம்மை) போட்டுப் படுகிடையாக இருந்தாள். பெரிய மாரி போட்ட வீட்டில் இருந்து கடுதாசு எழுதினாலும் நோய் பரவும் என்பதால் கடுதாசு எழுதக் கூடாது என்று இருக்கிறபடியாலும், பெரிய மாரி போட்டுத் தலை முழுகாமல் பந்துக்கள் இருந்தால் சர்க்கார் ஆபீசுக்கு வரலாகாது என்றும் திட்டம் இருக்கிறபடியால் நான் வீட்டிலேயே இருந்துவிட்டேன். அல்லாமல் எனக்கு சர்க்கார் டூட்டியை உதாசீனஞ் செய்யும் யோஜனை கிஞ்சித்தும் இல்லை என்பதை சமூகத்துக்கு மன்றாடித் தெரிவித்துக் கொள்கிறேன். என்மீது எந்தக் குத்தம் குறையும் இல்லை. பிறகு, நான் 4-ம் திகதி போய்ப் பார்த்தபோது நம்முடைய பாரஸ்ட் பங்களாவின் பின்வாசல் திறந்து போட்டிருப்பதையும் உள்ளே இருந்த ஈட்டி என்று சொல்லப்படக் கூடிய தோதகத்தி மரத்திலான சாய்மான சேர் ஒன்று களவு போயிருப்பதையுங் கண்டு கிலேசமாகி மேற்படி சமாசாரங்களை சமூகத்தின் கெவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

மேலும் என்மீது பிராது கொடுத்த வேடபட்டி கிராமம், மச்சுவீடு ரங்கமன்னார் மகன் வாத்தி ஆளவந்தார் துராக்கிரமாக பாரஸ்ட் பங்களாவுக்குள் ஆஜராகி இங்கிருந்த சர்க்கார் சொத்தாகிய சேரைக் களவாண்டு சென்றிருக்கிறார் என்ற தகவல் எனக்குக் கிடைத்திருக்கிறது.

எனவே, களவாணி ஆளவந்தார் மீது ஆக்ஷன் எடுக்கும்படியாகவும் காணாமல் போன தோதகத்தி சேரையும் கைப்பற்ற வேணுமாய்த் தெண்டனிட்டு முறை யிடுகிறேன்.

எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதாகையால் இந்த சமாதானத்தைத் தண்டக்காரன் இன்னாசிமுத்து மூலம் எழுதிப் படிக்கக் கேட்டு, சரியென்று இடதுகைப் பெருவிரல் ரேகை வைத்து சமூகத்துக்கு அனுப்புகிறேன்.

உங்களுடைய ஊழியன்,

பெ.மாதப்பன், பங்களா வாச்சர்

திருநெல்வேலி.

டிஸ்டிரிக்ட் பாரஸ்ட் ஆபீஸ், திருநெல்வேலி, 19-ம் திகதி, ஏப்ரல், 1938.

செவ்வாய்க்கிழமை.

திருநெல்வேலி டவுன் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கவனத்துக்கு,

இத்துடன் கன்னிகட்டி பாரஸ்ட் பங்களா வாச்சர் பெ.மாதப்பன் எமக்குக் கொடுத்திருக்கிற பிராதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். திருநெல்வேலி ஜில்லா, இசக்கி குளம் தாலூக்கா, முத்தண்ணம்பாளையம் பிர்க்கா, வேடபட்டி கிராமம், மச்சுவீடு ரங்கமன்னார் மகன் ஆளவந்தார் மீது லீகல் ஆக்ஷன் எடுத்துக் களவுபோன தோதகத்தி சேரையும் கைப்பற்றி சர்க்கார் கணக்கில் சேர்க்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் நம்பிக்கையுள்ள,

ஓ.எம்.கிங்ஸ்லி டேவிட்சன்,

டிஸ்ட்ரிக்ட் பாரஸ்ட் ஆபீசர்.

பாளையங்கோட்டை, 9-ம் திகதி, மே, 1938. திங்கள்கிழமை.

டிஸ்ட்ரிக்ட் பாரஸ்ட் ஆபீசர் அவர்களுக்கு, பாளையங்கோட்டை உபாத்தியாயர் ஆர்.ஆளவந்தார் எழுதிக்கொள்வது.

தங்களது ஊழியன் வாச்சர் மாதப்பன் டூட்டிக்கு வராமல் இருந்ததை நான் அம்பலப்படுத்தி விட்டேன் என்ற வன்மத்தில் என்மீது திருட்டுப்பழி சுமத்தி இருந்தான். நீரும் அதைச் சரிவர விசாரிக்காமல் கனம் சர்க்கிள் இன்ஸ்பெக்டரை ஏவி, என் மீது களவுக்குற்றம் பதிவு பண்ணி இருக்கிறீர். நான் எனது பந்து மித்ர ஜனங்களின் துணையுடன் நான்கைந்து நாட்கள் அலைந்து திரிந்து நடந்த உண்மைகளை விஜாரித்தும் நேரில் பார்த்தும் தெரிந்துகொண்டேன்.

நான் தங்கிப்போன பிறகு பங்களாவுக்கு வந்த மாதப்பன், தான் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில், பங்களாவில் இருந்த தோதகத்தி சேரை பக்கத்துக் கிராமமான சீதாளப்பாடியில் வாசம் பண்ணுகிற அருக்காணி என்கிற வைதவ்யப் பெண் வீட்டில் மறைத்து வைத்திருக்கிறான். அவளுக்கும் மாதப்பனுக்கும் தொடுப்பு இருக்கிற காரணத்தால் அவளும் களவுப் பொருளைத் தனது வீட்டில் மறைத்து வைக்கச் சம்மதித்திருக்கிறாள்.

விஜாரித்து இத்தனையும் தெரிந்து கொண்டு, கனம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சமூகத்தையும் நேரில் அழைத்துச் சென்று மேற்படி அருக்காணி வீட்டில் இருந்து சேரைக் கைப்பற்றவும் உதவி செய்திருக்கிறேன். மாதப்பன் மீது கனம் சர்க்கிளார் கேஸும் ரெஜிஸ்டர் பண்ணி இருக்கிறார்.

நிற்க.

நீர் சரிவர விஜாரிக்காமல் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று என் மீது களவுப் பிராது கொடுத்து, என் ஹிருதயத்தில் மாளாத வேதனையை ஏற்படுத்திவிட்டீர். பந்து மித்ரர்கள் கொஞ்ச நாளாகிலும் என்னைத் துராத்மாவாகவே நினைத்து விட்டார்கள். எனக்கு நீர் செய்த தீம்புக்குப் பர்த்தியாக ரூபாய் 100 மான நஷ்ட ஈடாகக் கொடுக்க வேண்டும் என்பதற்கான லாயர் நோட்டீசும் இத்துடன் அனுப்பி இருக்கிறேன்.

இப்படிக்கு,

ஆளவந்தார்.

டிஸ்டிரிக்ட் பாரஸ்ட் ஆபீஸ், திருநெல்வேலி, 12-ம் திகதி, மே, 1938. வியாழக்கிழமை.

வைஸ்ராய், செயின்ட் ஜார்ஜ் கோட்டை, மதராஸ். அவர்களின் கனிவான கவனத்துக்கு,

மரியாதைக்குரிய அய்யா!

மிஸ்டர் ஆர்.ஆளவந்தார் கேஸ் தொடர்பான அத்தனை ரெக்கார்டுகளையும் இத்துடன் இணைத்துத் தங்களது மேலான பார்வைக்கு அனுப்புகிறேன். என்னுடைய முழுக் கவனத்தையும் செலுத்தி இந்தக் கேஸை நான் கையாளவில்லை என்பதால் என்னுடைய பணியை நான் ராஜினாமா செய்கிறேன்.

என்னுடைய செட்டில்மென்ட் துகையில் இருந்து ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்) மிஸ்டர் ஆர்.ஆளவந்தார் கோரியபடி அவரிடம் ஒப்படைக்கவும். மீதி செட்டில்மென்ட் துகைகள் ஏதேனும் இருப்பின் கன்னிகட்டி பாரஸ்ட் பங்களாவுக்கு பர்னிச்சர்கள் வாங்கிப்போட அதைப் பயன்படுத்திக்கொள்ளவும்.

இதையே எனது ராஜினாமாவாக ஏற்றுக்கொள்ளவும்.

இங்கிலாந்து ராணியின் புகழ் ஓங்கட்டும்.

கீழ்ப்படிதல் உள்ள,