குழந்தைகளே வாருங்கள்

வெளியே செல்லலாம்

ஆலங்கட்டி மழை

எப்படி இருக்கு.

ம்.

தொப்பி கூட இல்லை

குளிர்ந்த மழைநீர் உடலின் மேல்

அதனாலென்ன பரவாயில்லை

இது எப்படி?

என்ன பேச்சக் காணம்.

கவிதைகள் பிடிக்கலியா.

கவிதைகள் பிடிக்குது.

அப்புறம்..?

உன்னோட கைபேசியிலேருந்து பெய்யற இந்த வார்த்தைகளும் இல்லேன்னா... என்னெ நனைக்க வேறு ஏதுடா மழ..!

ஏய்... என்னாச்சு?

ஒண்ணுமில்ல.

ஒண்ணுமில்லன்னா..?

நேத்துகூட அலுவலகம் முடிஞ்சி பேருந்துல வர்றப்ப திடீர்னு மழ. கன்னத்துல... கண்ணுல சுளீர் சுளீர்னு மழ. சன்னலுக்கு வெளியே கை நீட்டி உள்ளங்கையில் மழைவாங்கி ரசிக்கிறேன்.

'யாரும்மா அது? பாத்தா படிச்ச பொண்ணாட்டம் இருக்கற. மழையடிச்சா சன்னல மூடணும்னு தெரியாது. பச்சபுள்ள மேல மழ. சுரம் கிரம் வந்தா நீயா தூக்கிட்டு அலைவ?'

சட்டுன்னு சன்னல் கண்ணாடிய எறக்கிட்டேன். வழக்கமான அந்த ஆத்துப் பாலத்த கடக்கறப்போ அந்தி சூரியப் பின்னணியில பழைய பாலத்துல மொளச்சிருக்கிற ஆலஞ்செடியப் பாத்துப் பேசிட்டுப் போற வாய்ப்பு நேத்திக்குக் கெடைக்கலடா. இந்த நேரத்துல நீ 'வெளியே வா... ஆலங்கட்டி மழ'ன்னு வெறுப்பு ஏத்துற! வளந்துட்டா... பெண்ணுகளுக்கு மழயும்... ம்கூம். ஒனெக்கென்ன...

சரி வா போலாம்.

எங்க?

காட்டுக்கு.

காட்டுக்கா?!

ஆமா.

திமிரா? ஏய்! நான் ஒரு பொண்ணு.

ம்... மரியாதைக்குரிய ஓர் அதிகாரி.

ஆமா... மரியாதைக்குரிய... பெரிய்ய மரியாதைக்குரிய... சிரிச்சுப் பேசிட்டா சேத்துப் பேசுறானுங்க. ஒதவிக்கு வர்ற மாதிரி ஒடலுக்கு வர்றானுங்க. பேரப்புள்ளய கொஞ்ச வேண்டிய வயசுல பேதலிச்சு நிக்கிறானுக... வாங்குன லஞ்சத்துல வண்டியில போலாமாங்குறானுங்க.

உடல்... உடல்... உடல்...

சரி சரி... அதெல்லாம் விடு. நாம போறம்!

அப்பா அம்மா..?

வீட்டுக்கு வர்றேன். நான் பேசிக்கறேன்.

ஒன்னெ யாருன்னே தெரியாது. பெங்களூர்லேருந்து வர்ற. உங்கூட போ அப்படின்னு வந்து வண்டி ஏத்தி விடறாரு! எப்பிடிடா எங்க அப்பாவ...

நெறய பேசியிருக்கறம்.

நம்பவே முடியல... காட்டுக்குள்ள... பாறையில... நிலா வெளிச்சத்துல...

ஆமா... இந்தக் காட்டுக்குள்ள இப்பொ நாம ரெண்டு பேரு மட்டுந்தான். ஆனா இந்த மடுவுல தண்ணி குடிக்க புலி வரலாம். காட்டெரும வரலாம். மான் வரலாம். மரை வரலாம்.

வரட்டும்... வரட்டும்.

பயம் வரலியா?

பயம் விட்டுருச்சி.

அப்போ.

மடுவுல எறங்கி குளிக்கவா?

ஆழம் பாத்துட்டு சொல்லவா?

பெண்ணுக்கு ஆழம் தெரியாதா?

சரி சரி எறங்கு... வாலு.

அய்ய்யோ... எவ்வளவு சில்லுன்னு இருக்கு தெரியுமா. வாடா, வந்து நீயும் நீச்சலடி. நீச்சலடிச்சுகிட்டே நிலா பாக்கறது... நிலாவை பாக்கறது என்ன... நிலா குடிக்கறது எவ்வளவு சுகமா இருக்கு தெரியுமா?

ஏய்... மழ... மழ!

எப்படி... திடீர்னு?

எப்பவுமே இங்க இப்படித்தான்.

மடுவுல நின்னுகிட்டு... மழையில

நனைஞ்சிகிட்டு...

ஏய்... மழ இருட்டுல அந்தக் காட்டு மல்லியப் பாரு! பளிச்சின்னு வெள்ளை வெளேர்னு... பறிச்சிட்டு வர்றியா?

உடல் பறிக்கறது ஆயிடாதா?

ம்கூம். மழ பறிக்கறதாதான் ஆகும். இப்போ நாம ஆண் இல்ல... பெண் இல்ல... காத்து... மழ... நிலா... காடு.

மழ வலுக்குதே...

வலுக்கட்டும்.

அறைக்குப் போயிடலாமா?

ராத்திரின்னா... மழன்னா... சுவர்... சன்னல்... கதவு... தாழ்ப்பாள்... கட்டில்... தலையணை... இதுங்கதானா... இதுங்க மட்டுந்தானா... வரமாட்டேன். வரவே மாட்டேன். போ. போடா. வெளியே வா. ஆலங்கட்டி மழன்னு அழச்சிட்டு வந்துட்டு... இப்போ... அறைக்குப் போலாமா... ஆம்பளக் குரல்... ஆம்பளக் குரல். மழ வலுக்கட்டும். நல்லா... நல்லா... இன்னும் வலுக்கட்டும். சன்னல சாத்துன்னு இங்கவந்து எவன் என்னெ அதட்ட முடியும்? இப்போ நான் நிலா குட்டி. மழைத்துளி ஒவ்வொண்ணும் என்னோட சின்னச் சின்ன சிறகுங்க. இப்போ நான் பறக்கறேன். எந்த வேலிகளுமில்லாத பெரு வெளியில பறக்குறேன். அறைக்கு வேணான்டா. வேணாம். விடிய விடிய இந்த மடுவிலேயே என்னை ஆச தீர நீச்சலடிக்க விடுடா.

காட்டெருமக தண்ணி குடிக்க வருதுக. பாறையோட பாறையா அசையாம படுத்துக்க. அதுக குடிச்சிட்டுப் போகட்டும். அப்புறம் நீந்தலாம்.

பாறையில மல்லாந்து படுத்ததும்... மழ... உடல்ல பட்டுத் தெறிக்கத் தெறிக்க எப்படி இருக்குத் தெரியுமா?

எப்படி இருக்கு?

பாறையில படுத்து நனஞ்சிப் பாரு!

ம்கூம்... நீ சொல்லு.

ம்கூம்... நீ அனுபவி.

ம்கூம்... சொல்லு.

ம்கூம்... உன்னோட அனுபவம் ஒனக்கு. என்னோட அனுபவம் எனக்கு. உன் உடல் மேல மழ வேற. என் உடல் மேல மழ வேற. பாற மேல மழவேற. மடு மேல மழ வேற.

இந்தா நீ கேட்ட காட்டு மல்லி!

இவ்வளவா!

ஆமா... இது காட்டு மல்லியில்ல. நிலா மழைத் துளிகள்.

போதும்... போதும்... மொத்தமும் கொட்டாதடா. மூச்சுத் திணறுது.

கொட்டுவேன். அப்படித்தான் கொட்டுவேன். மூச்சுத் திணறட்டும். நாளைக்கு அலுவலகம் போற பேருந்துல போகும்போது நெறஞ்சு வழியும் நெரிசல்லயும்... காட்டுக் கத்தலா அலறும் பாட்டுச் சத்தத்திலுமா வர்றப்போற மூச்சுத் திணறல் கிடையாது இது. ம்... இது... முழு சுதந்திரத்திற்கு முந்தையதான மூச்சுத் திணறல். இதையும் அனுபவி. நீ நீயாக அனுபவி.

புறப்படலாமா?

ம்...

பேருந்தின் கூட்ட நெரிசலில் எவரைப் பற்றியும் கவலைப்படாமல் என் மடியில் படுத்துத் தூங்கிக்கொண்டு வந்தவனின் தலையில் இன்னும் மழைத்துளிகள் இருப்பதான ஈரத்தில் முடியைப் பிடித்துச் சிலுப்பி எழுப்பி... பாலம் கடக்கையில் அந்தி சூரியனின் பின்னணியில் பழைய பாலத்து என் ஆலஞ்செடியை அடையாளங் காட்டியபடியே என் கைபேசியில் ஒரு குறுஞ்செய்தி கொடுத்தேன். அவன் கைபேசியில் அதனைப் படித்தான்.

தனித்த பொழுதில்

தொடுவதைத்

தவிர்த்தாய்

நெரிசல் பொழுதில்

தொட்டிடத்

தவித்தாய்

இப்போதுதானடா

அங்கீகரித்தேன்

உன்னை.

உற்றுப் பார்த்தான்.

உற்றுப்பார்த்தேன்.

நான்கு மழைத்துளிகள்!