ரா.அ.பத்மநாபன் அனுபவங்கள்

இன்று நாம் பார்க்கும் பாரதியின் மீசை முறுக்கிய படத்தைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு பிரபலப்படுத்தியவர் பாரதி அறிஞர் ரா.அ.பத்மநாபன். தமிழ் இலக்கியங்களைத் தேடித் தேடிப் பதிப்பித்தவர் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதன் என்றால், இவர் பாரதியைப் பற்றிய தகவல்களை, புகைப்படங்களைத் தேடிய 'பாரதி’ பித்தர்.

95 வயதைத் தாண்டிய பத்மநாபனை சந்தித்தபோது, பாரதியைப் பற்றி உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டார்.

''பாரதி குறித்த ஆய்வுகளில் ஈடுபாடு ஏற்பட்டது எப்படி?''

''பாரதியின் புகைப்படம் எதுவும் யாரிடமும் இல்லாத நேரம். அவருடைய கவிதையைப் பலரும் தெரிந்து வைத் திருந்தார்கள். ஆனால், அதை எழுதியவர் எப்படி இருப்பார் என்று பலருக்கும் தெரியாது. அவர் மீசை வைத்திருப்பார். முண்டாசு கட்டி இருப்பார் என்றெல்லாம் சொல்லக் கேள்விதான். யாரோ சிலரிடம் அவர் படம் இருந்திருக்கலாம். அதைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு ஏற்பட்டது. 1933-ல் நான் ஆனந்த விகடன் அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த சமயம் புதுவை சர்வோதயத் தலைவர் ஏ.எஸ்.ஆர்.சுப்ரமணியம் அதுவரை கிடைத்திராத முழுஅளவு பாரதியார் படத்தைக் கொண்டு வந்தார். அதுதான் பாரதியைப் பற்றி எனக்குக் கிடைத்த முதல் ஆவணம். புதுவைக்கு அவரைத் தேடிப்போனபோது பாரதி, செல்லம்மா, குழந்தைகள் எல்லோரும் இருக்கும் படம் ஒன்று கிடைத்தது. பாரதி ஆர்வம் அதிகமானது. அதை, ஹிந்துஸ்தான் என்ற வாரப்பத்திரிகையில் முதன்முதலாக வெளியிட்டேன். அப்போதுதான் தமிழ கத்தில் பலரும் பாரதியின் குடும்பப் படத்தைப் பார்த்தனர்.

மீண்டும், புதுவை சென்று இன்னும் பல படங்களைச் சேகரித்தேன். குயில் பாட்டுத் தோப்பு அதில் ஒன்று. இவற்றை எல்லாம் சேர்த்து 'சித்திர பாரதி’ என்ற பெயரில் ஒரு நூலை அமுத நிலையம் பதிப்பகம் மூலம் வெளியிட்டேன். பல பாராட்டுகள் வந்தன.''

''அதிகம் தகவல் கொடுத்து உதவியவர்கள் யார்?''

''புதுவை அன்பர்களும் கடையம் அன்பர்களும். குறிப்பாக நீலகண்ட பிரம்மச்சாரி, குவளைக்கண்ணன், பாரதியின் துணைவியார் செல்லம்மா ஆகியோர் பல அரிய தகவல்களைத் தந்து உதவினர். தகவல் திரட்டுவதற்காக புதுவை, கடையம் தவிர அம்பாசமுத்திரம், எட்டயபுரம் போன்ற பல ஊர்களுக்கும் சென்று விஷயங்கள் சேகரித்தேன்.''

''குவளைக்கண்ணன், நீலகண்ட பிரம்மசாரி, செல்லம்மா போன்றவர்கள் எந்த அளவுக்கு உதவியாக இருந்தார்கள்..?''

''பாரதியின் இல்லம், அவரது திருமண சம்பவங்கள், காசி நிகழ்வுகள் பற்றியும்... எட்டயபுரம் சமஸ்தானத்தில் அவர் மனம் ஒன்றாமல் வேலை செய்தது பற்றியும் விவரமாகச் சொன்னார்கள். ஒரு கோழையைப் போல, வெள்ளையர் அரசுக்குப் பயந்து பாரதியார் புதுச்சேரியில் பதுங்கிக் கொண்டார் என்று நான் முதலில் நினைத்திருந்தேன். அந்த எண்ணம் எத்தனை பெரிய தவறு! புதுவையில் இருந்தபோதும் சுதந்திரதாகம் பாரதியின் மனதில் கொழுந்துவிட்டு எரிந்தது. அங்கிருந்து சுதந்திர வேட்கைக்கான பல சிலிர்ப்பான செயல்களைச் செய்தார். அதையெல்லாம் இவர்களை நான் சந்தித்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். உலகுக்கும் பகிர்ந்து கொண்டேன். அதையெல்லாம் சித்திரபாரதி நூலில் பதிவு செய்திருக்கிறேன்.''

பாரதி நூற்றாண்டின்போது சித்திர பாரதி இரண்டாம் பதிப்பு வந்தது.

'பாரதியைக் குறித்து முரண்பட்ட தகவல் எதையாவது எதிர்கொண்டீர்களா?''

''பாரதி கொள்கை அளவில் காந் தியத்தை ஆதரிக்கவில்லை என்று ஒரு தவறான எண்ணம் இருந்தது. அது சரியல்ல. அவர் சுதந்திரத்துக்காக பாடு பட்ட எல்லோரையுமே ஆதரித்தார்.''

''பாரதிதாசனை நீங்கள் சந்தித்து இருக்கிறீர்கள்? அவர் என்ன சொன்னார்?''

''புரட்சிக்கவி பாரதிதாசனைப் புதுவையில் சந்தித்தேன். தனக்கு பாரதி யிடம் எப்படி ஈடுபாடு ஏற்பட்டது என் பதைக் கூறினார். பாரதியின் சமத்துவ நோக்கமே தன்னை பாரதிதாசனாக மாற்றியது என்றும் கூறினார்.''

''பாரதியின் பத்திரிகை உலகம், அரசியல் உலகம், ஆசிரியப் பணி, கவி உலகம் ஆகியவற்றை நேரடியாக ஆராய்ந்த வகையில் உங்களுக்கு பிரமிப்பானது எது?''

''பாரதியின் பத்திரிகை உலகமும் கவி உலகமும் என்னை பிரமிக்க வைத்தவை. அரசியலைப் பற்றி கனிவோடும் கவனத் தோடும் செய்திகளை வெளியிட்டு இருக்கிறார். அவர், பள்ளி ஆசிரியராக இருந்தது பற்றி அதிக தகவல்கள் கிடைக்கவில்லை. பாரதி பணி செய்த பள்ளியில் யாரையும் சந்திக்கவில்லை. அவர் அங்கு மிகச்சில மாதங்களே இருந்தார். அதனால், அங்கு சென்று தகவல் திரட்டும் பணியில் ஈடுபட வில்லை.''

''பாரதியைப் பற்றி உலகுக்குத் திரட்டித் தந்தவர் என்பதற்கான அங்கீகாரம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறதா?''

''அந்தப் பணியே பெருமையான விஷ யம்தான். அதற்கான அங்கீகாரம் என்று எதையும் எதிர்பார்க்கவில்லை. எனக்குக் கிடைத்த பலன் என்றால் சில பட்டப் பெயர்கள் கிடைத்ததைச் சொல்லலாம். வேறு எதுவும் இல்லை.''

''சித்திரபாரதி நூலை வெளிக்கொண்டு வந்த அனுபவம்?''

''சித்திரபாரதி வெளியிடுவதற்காக பாரதி பிறந்த எட்டயபுரம் மற்றும் திருநெல்வேலி, கடையம் போன்ற பல ஊர்களுக்கும் என் சொந்தச் செலவில் சென்று வந்தேன். நானே புகைப் படங்கள் எடுத்தேன். சித்திரபாரதி நூலில் வெளியிட்டேன். இரண்டாம் பதிப்பு வெளியாகும் நேரத்தில் நான் விழுப்புரத்தில் வசித்து வந்தேன். விழுப்புரத்திலிருந்து ரயிலுக்கு சீசன் டிக்கெட் எடுத்து தினமும் சென்னைக்கு சென்றுதான், அந்த இரண்டாம் பதிப்பை வெளியிட்டேன். நூலை வெளியிட பொள்ளாச்சி மகாலிங்கமும் உதவினார். என் மனைவி, குழந்தைகள் யாவரும் ஆய்வு செய்ய பக்க பலமாக இருந்த னர். முக்கியமாக, என் மனைவி மைதிலிக்குப் பெரும்பங்கு உண்டு.''

''பத்திரிகையாளராகப் பணிபுரிந்த அனுபவங்களைச் சொல்லுங்கள்?''

''முதலில், 'ஆனந்த விகடன்’ பத்திரிகையில் துணை ஆசிரியராக வேலை பார்த்தேன். எஸ்.எஸ்.வாசன் அவர்கள் வேலை விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக இருப்பார். அந்தக் கண்டிப்பு ரொம்பவும் பிடித்தது. அதன்பிறகு சுதேசமித்திரன், அனுமன் ஆகிய இதழ்களில் பணியாற்றினேன். பின்னர், தினமணி கதிர் ஆசிரியர் குழுவில் இருந்தபோது சில முக் கியமான எழுத்தாளர்களை நான் அறிமுகப்படுத்தியுள்ளேன். இன்றைய பத்திரிகைகளில் சினிமா செய்தி கள்தான் நிறைய வருகிறது. தேவையற்ற வதந்திகளுக்கு முக்கியத்துவம் அளிக் கப்படுகிறது. இதையெல்லாம் கொஞ் சம் தவிர்க்கலாம் என்பதே அந்த நாள் பத்திரிகையாளன் என்ற முறையில் என் கருத்து.''

''பாரதிக்கு அரசு இன்னும் செய்ய வேண்டியது என்னவென்று நினைக்கிறீர்கள்?''

''அவருடைய வாழ்க்கை வர லாற்றை கல்லூரிகளிலும் பள்ளி களிலும் பாடமாகக் கொண்டு வர வேண்டும்.''