தாத்தா இங்க ஒரு மலை

இருந்துச்சே எங்க?

கொள்ளை அடிச்சிட்டாங்கப்பா...

தாத்தா இங்க ஒரு ஆறு

இருந்துச்சே அது?

காணாப்போயிடுச்சுப்பா...

தாத்தா இங்க இருந்த நிலங்கள் எல்லாம்..?

பாரு கட்டடங்கள் பெருத்துப் போச்சு,

நிலங்கள் செத்துப் போச்சு!

சிட்டுக்குருவிகள் எங்க தாத்தா?

எல்லாம் புத்தகத்துல படமா இருக்கு.

பறந்த காலம் பறந்தே போச்சு!

மண்புழுவப் பாக்கணும் போல இருக்கு தாத்தா...

அட போப்பா, மனுஷனையே பாக்க முடியுமான்னு

சந்தேகமா இருக்கு...

மண்புழுவுக்கு எங்க போக?

நீண்ட மௌனம்...

இருவரும் நடந்தனர்.

தாத்தாவிடம் இன்னும் சொல்வதற்கு

இருந்தன, இழந்த கதைகள்.

பேரன்தான் கேட்பதை

நிறுத்திக் கொண்டான்.

காரணம் - அவன் புரிந்துகொண்டான்!

தாத்தா இங்க ஒரு மலை

இருந்துச்சே எங்க?

கொள்ளை அடிச்சிட்டாங்கப்பா...

தாத்தா இங்க ஒரு ஆறு

இருந்துச்சே அது?

காணாப்போயிடுச்சுப்பா...

தாத்தா இங்க இருந்த நிலங்கள் எல்லாம்..?

பாரு கட்டடங்கள் பெருத்துப் போச்சு,

நிலங்கள் செத்துப் போச்சு!

சிட்டுக்குருவிகள் எங்க தாத்தா?

எல்லாம் புத்தகத்துல படமா இருக்கு.

பறந்த காலம் பறந்தே போச்சு!

மண்புழுவப் பாக்கணும் போல இருக்கு தாத்தா...

அட போப்பா, மனுஷனையே பாக்க முடியுமான்னு

சந்தேகமா இருக்கு...

மண்புழுவுக்கு எங்க போக?

நீண்ட மௌனம்...

இருவரும் நடந்தனர்.

தாத்தாவிடம் இன்னும் சொல்வதற்கு

இருந்தன, இழந்த கதைகள்.

பேரன்தான் கேட்பதை

நிறுத்திக் கொண்டான்.

காரணம் - அவன் புரிந்துகொண்டான்!