‘‘சுரேஷ், நான் வேலை விஷயமா நாளைக்கு ஊருக்குப் போறேன்” என்றார் அப்பா.

படித்துக்கொண்டிருந்த சுரேஷ் தலையை உயர்த்தாமலே, ‘‘ம்...’’ என்றான்.

“எந்த ஊருக்குனு கேட்க மாட்டியா?’’ என்றார்.

‘ஆமா, சிங்கப்பூருக்கா போகப்போறீங்க’ என மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.

“சென்னைக்குப் போறேன்டா. திரும்பி வர்றதுக்கு 10 நாள் ஆகும். ஸ்கூல் முடிஞ்சதும் நேரத்துக்கு வீட்டுக்கு வா. தங்கச்சியோடு சண்டை போட்டுக்கிட்டு இருக்காதே சரியா?’’ என்றார்.

இப்போதும் தலையை உயர்த்தாமலே “ம்...” என்றான் சுரேஷ்.

“சென்னையில இருந்து வரும்போது, எனக்கு டோரா பொம்மை வாங்கிட்டு வாப்பா” என்றாள் சுரேஷின் தங்கை ரோஜா, அப்பாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு.

“சரி செல்லம். சுரேஷ் உனக்கு..?’’ என அப்பா கேட்டு முடிக்கும் முன்பே,

“எனக்கு ஒண்ணும் வேணாம்” என சட்டெனப் பதில் சொன்னான்.

சுரேஷ் எட்டாம் வகுப்பு படிக்கிறான். அவன் அப்பா, நகராட்சி துப்புரவுப் பணியில் இருக்கிறார். ரோஜா போல சின்ன வயதாக இருக்கும்போது, சுரேஷும் அப்பாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு கொஞ்சியவன்தான். அப்பாவின் கைப்பிடித்து வெளியே சென்றிருக்கிறான்.

ஆனால், நாளாக நாளாக விலக ஆரம்பித்தான். அதற்குக் காரணம் அப்பா செய்யும் வேலை. பள்ளியில் மாணவர்கள், ‘டேய் குப்பை, டேய் குப்பை’ என அவனை அழைத்து கேலி செய்வார்கள்.

“அப்பா, நீ வேற வேலைக்குப் போப்பா. இதை விட்டுரு” என்று சொல்லிப் பார்த்தான் சுரேஷ்.

“ஏன்டா, உன்னை மத்தவங்க கேலி பண்ணினா, டீச்சர்கிட்டே சொல்லு. ஊரையே சுத்தப்படுத்துற இந்த வேலையைச் செய்றதுல என்னடா கேவலம்? பெருமைப் படணும்டா” என்றார் அப்பா.

அப்போது முதல் அவன் அப்பாவிடம் சரியாகப் பேசுவது இல்லை. அவர் ஏதாவது சொன்னால், அதற்குப் போட்டியாகவே நடந்துகொள்வான்.

அப்பா ஊருக்குப்போன இரண்டாவது நாளே, சுரேஷ் பள்ளிக்குப் போகும்போது கிரிக்கெட் மட்டையையும் எடுத்துக்கொண்டான்.

“அம்மா, அண்ணாவைப் பாரேன்” என்ற தங்கையை முறைத்தான்.

“என்னடா, சாயந்திரம் சீக்கிரம் வீட்டுக்கு வரணும்னு அப்பா சொன்னதை மறந்துட்டியா?’’ என்று கேட்டார் அம்மா.

‘‘வருவேன் வருவேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

பள்ளிமுடிந்ததும் நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு மைதானத்தில் விளையாட ஆரம்பித்தான். அப்பா மீது இருந்த கோபம் எல்லாம் பவுண்டரி, சிக்ஸர்களாகப் பறந்தன.

இருட்ட ஆரம்பித்ததும், “போதும் சுரேஷ், கிளம்பலாம்” என்றான் ஒருவன்.

“லைட் வெளிச்சம்தான் இருக்கே, நான் விளையாடப் போறேன். யார் இருக்கப்போறீங்க?” என்றான் சுரேஷ்.

இரண்டு பேர் மட்டும் இருந்தார்கள். சற்று நேரத்தில் அவர்களும் சென்றுவிட, தனியாகவே பந்தைத் தூக்கிப்போட்டு மட்டையால் தட்டிக்கொண்டிருந்தான். நீண்ட நேரத்துக்குப் பிறகுதான் வீட்டுக்குச் சென்றான்.

‘‘அண்ணா, இவ்வளவு நேரம் எங்கே போனே? அப்பாவை டி.வி-யில காட்டினாங்க’’ என்றாள் ரோஜா குஷியாக.

‘என்ன ஏது’ என சுரேஷ் எதுவும் விசாரிக்கவில்லை. அம்மாவும் சொல்லவில்லை.

அடுத்த நாள் பள்ளிக்குச் சென்றபோதுதான் நண்பர்கள் மடக்கி மடக்கிப் பேசினார்கள். வகுப்பில் ஆசிரியரும் பாராட்டினார். “உன் அப்பா நல்லா பேசினார். அவர் மாதிரி ஆட்களால்தான் நாங்க எல்லாம் ஆரோக்கியமா நடமாடுறோம்’’ என்றார்.

எல்லோரும் தன் அப்பாவை டி.வி-யில் பார்த்திருக்க, தான் பார்க்கவில்லை எனச் சொல்லவும் என்ன பேசினார் எனக் கேட்கவும் வெட்கமாக இருந்தது. அதனால், எல்லாவற்றுக்கும் தலையை மையமாக ஆட்டிவைத்தான்.

மதியமே பள்ளிக்கு லீவு போட்டுவிட்டு வீட்டுக்கு வந்தான். தொலைக்காட்சியின் செய்திச் சேனல்களை மாற்றி மாற்றிப் போட்டுப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்தச் செய்தி மறுபடியும் ஒளிபரப்பாகும் என்கிற நம்பிக்கையில். சென்னையில் வெள்ளம் முடிந்து சில நாட்கள் ஆகியிருந்தது. அது குறித்த செய்திகள் ஓடிக்கொண்டிருக்க, அதோ... அதோ அப்பா.

ஒரு நிருபர் சுரேஷின் அப்பாவிடம் பேசினார். ‘‘சென்னையைச் சுத்தப்படுத்த வந்திருக்கோம். காலைல இருந்து வேலை செய்துட்டு இருக்கோம். எங்களோடு சேர்ந்து நிறைய சமூக சேவகர்களும் இந்த வேலையில் ஈடுபட்டிருக்காங்க’’ என ஆரம்பித்து, சுத்தம் செய்வதில் தங்களுக்கு உள்ள சிரமங்கள் பற்றியும், அதையும் மீறி மக்களின் நலனுக்காக வேலை செய்வது பற்றியும் உருக்கமாகப் பேசினார்.

சுரேஷ், அப்பாவை நினைத்துக்கொண்டான். அவர் ஊர் திரும்பும் நாளில், அப்பாவுக்கு ஒரு பரிசு தர நினைத்தான். அவனிடம் 10 ரூபாய் இருந்தது. கண் தெரியாத ஒருவர் கர்ச்சீஃப் விற்றுக்கொண்டிருந்தார். 10 ரூபாய் கொடுத்து அதை வாங்கிக்கொண்டான்.

வீட்டில் ஒரே சத்தமாக இருந்தது. தங்கை ரோஜாவோடு அப்பா விளையாடிக் கொண்டிருந்தார். அவள் கையில் டோரா பொம்மை இருந்தது. ‘‘வாடா சுரேஷ், உனக்கு கிரிக்கெட் செட் வாங்கிக்கிட்டு வந்திருக்கேன்” என்றார் அப்பா.

சுரேஷ் தயக்கத்துடன் அவர் அருகே சென்றான். ‘‘அப்பா... நம்ம மக்களுக்காக, நம்ம ஊருக்காக வியர்வை சிந்தி உழைக்கும் உங்களுக்கு நானும் ஒரு பரிசு வாங்கி வந்திருக்கேன்” என்றபடி கர்ச்சீஃப்பை நீட்டினான்.

அப்பா, அவனை மகிழ்ச்சியுடன் கட்டிப் பிடித்துக்கொண்டார். அப்பாவின் வாசனை, அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.