நீள்வட்டம்...

பிராய்லருக்குப் புரிவதில்லை

ஒரு கோழிமுட்டையின் வாழ்வு

அடைகாக்கும் கோழிக்கு அதிர்ஷ்டமிருந்தால்

பிள்ளைமுகம் பார்க்கும்

இல்லையென்றால்

பிள்ளை, பொடித்த வெங்காயம் சேர்த்து

ஆவி பறக்கும் ஆம்லெட்டாகிச் சுவைதீர்க்கும்

அவித்து இறக்கி ஆடை நீக்கினால்

இளமங்கையின் தளுக்குக்காட்டிச் சிரிக்கும்

பத்து மணி தாண்டி

பாண்டியன் கபே பக்கம் வந்தால்

முட்டைப் பொடிமாஸாகி

பங்காளிகளுக்கு நாவினிக்கும் சைட்டிஷ்ஷாகும்

பாலைவனத்துக் கையளவு நீரென

ஹாஃப்பாயிலாக மிதந்து நின்று

நாவூறும் வெற்றிலையாகும் சிலருக்கு

இவை எதுவுமறியாமல் கண்ணாடிப் பெட்டிக்குள்

தீயில் சுழலும் பிராய்லர் முண்டம் உணருமா

வாழ்க்கை ஒரு வட்டமென்றால்

கோழிமுட்டைக்குக் கொஞ்சம் நீள்வட்டம்தானென்று.

- சச்சின்

போலச் சிறக்குமொரு வாழ்வு...

காடுபோல ஒரு காடு செய்திருக்கிறார்கள்

நதிபோல ஒரு நதி

குன்றுபோல ஒரு குன்று

கடல்போல ஒரு கடல்

புலிபோல ஒரு புலி

மீன்போல ஒரு மீன்

குளம்போல ஒரு குளம்

பூபோல ஒரு பூ

காற்றுபோல இருந்த காற்றில்

மனிதர்கள்போல இருந்த மனிதர்கள்

உலவி அலைந்து

வீடுபோல இருந்த வீடு திரும்பினர்.

காசுபோல இருக்கும் காசு கொடுக்காமல்

காசேதான் கொடுக்கவேண்டியிருந்தது.

- உமாமோகன்

முனீஸ்வரன் கோயில் தாயத்து...

நறுக்கிய பனையோலையை

கூட்டல்குறிபோல் அமர்த்துக

அதன் மத்தியில் குத்தி

வெளிப்படும் காரைமுள் கூர்முனையை

உலர் சோளத்தக்கையில் செருகுக

இப்போது சுளுவாக

ஒரு காற்்றாடியைத் தயார்பண்ணும்

வித்தையைக் கற்றீர் நீங்களும்

அதிவேகமாகச் சுழலும்

அக்காற்றாடியை ஏந்திக்கொண்டு

வீசும் காற்றுக்கு எதிர்திசையில்

விரைந்தோடும்போது

ஒரு கிராமத்துச் சிறுவனாகி

முனீஸ்வரன் கோயில் முன்னர்

மூச்சிரைக்க நிற்கும்

உங்களுக்குத் தாயத்தொன்று

பரிசளிக்கப்படுகிறது

மற்றும்

அது கைவசம் இருக்கும் வரை

ஒரு மயிரும் செய்யாது

பிசாசுகளும் பூதங்களும்

என்று அறிவுறுத்தப்படுகிறீர்

அதை ருசுப்படுத்தும்விதமாக

சோளம் திணை சாமை

குதிரைவாலி அரிசி கொள்ளு

உள்ளிட்ட சிறுதானியங்களுடன்

ஒரு ராட்சதப் பேரங்காடிக்குள்ளிருந்து

கனத்தப் பையுடன் வெளியேறுகிறது

ஒரு பெருமாநகரத்து மத்தியதரம்.

- வெ.வெங்கடாசலம்

நீள்வட்டம்...

பிராய்லருக்குப் புரிவதில்லை

ஒரு கோழிமுட்டையின் வாழ்வு

அடைகாக்கும் கோழிக்கு அதிர்ஷ்டமிருந்தால்

பிள்ளைமுகம் பார்க்கும்

இல்லையென்றால்

பிள்ளை, பொடித்த வெங்காயம் சேர்த்து

ஆவி பறக்கும் ஆம்லெட்டாகிச் சுவைதீர்க்கும்

அவித்து இறக்கி ஆடை நீக்கினால்

இளமங்கையின் தளுக்குக்காட்டிச் சிரிக்கும்

பத்து மணி தாண்டி

பாண்டியன் கபே பக்கம் வந்தால்

முட்டைப் பொடிமாஸாகி

பங்காளிகளுக்கு நாவினிக்கும் சைட்டிஷ்ஷாகும்

பாலைவனத்துக் கையளவு நீரென

ஹாஃப்பாயிலாக மிதந்து நின்று

நாவூறும் வெற்றிலையாகும் சிலருக்கு

இவை எதுவுமறியாமல் கண்ணாடிப் பெட்டிக்குள்

தீயில் சுழலும் பிராய்லர் முண்டம் உணருமா

வாழ்க்கை ஒரு வட்டமென்றால்

கோழிமுட்டைக்குக் கொஞ்சம் நீள்வட்டம்தானென்று.

- சச்சின்

போலச் சிறக்குமொரு வாழ்வு...

காடுபோல ஒரு காடு செய்திருக்கிறார்கள்

நதிபோல ஒரு நதி

குன்றுபோல ஒரு குன்று

கடல்போல ஒரு கடல்

புலிபோல ஒரு புலி

மீன்போல ஒரு மீன்

குளம்போல ஒரு குளம்

பூபோல ஒரு பூ

காற்றுபோல இருந்த காற்றில்

மனிதர்கள்போல இருந்த மனிதர்கள்

உலவி அலைந்து

வீடுபோல இருந்த வீடு திரும்பினர்.

காசுபோல இருக்கும் காசு கொடுக்காமல்

காசேதான் கொடுக்கவேண்டியிருந்தது.

- உமாமோகன்

முனீஸ்வரன் கோயில் தாயத்து...

நறுக்கிய பனையோலையை

கூட்டல்குறிபோல் அமர்த்துக

அதன் மத்தியில் குத்தி

வெளிப்படும் காரைமுள் கூர்முனையை

உலர் சோளத்தக்கையில் செருகுக

இப்போது சுளுவாக

ஒரு காற்்றாடியைத் தயார்பண்ணும்

வித்தையைக் கற்றீர் நீங்களும்

அதிவேகமாகச் சுழலும்

அக்காற்றாடியை ஏந்திக்கொண்டு

வீசும் காற்றுக்கு எதிர்திசையில்

விரைந்தோடும்போது

ஒரு கிராமத்துச் சிறுவனாகி

முனீஸ்வரன் கோயில் முன்னர்

மூச்சிரைக்க நிற்கும்

உங்களுக்குத் தாயத்தொன்று

பரிசளிக்கப்படுகிறது

மற்றும்

அது கைவசம் இருக்கும் வரை

ஒரு மயிரும் செய்யாது

பிசாசுகளும் பூதங்களும்

என்று அறிவுறுத்தப்படுகிறீர்

அதை ருசுப்படுத்தும்விதமாக

சோளம் திணை சாமை

குதிரைவாலி அரிசி கொள்ளு

உள்ளிட்ட சிறுதானியங்களுடன்

ஒரு ராட்சதப் பேரங்காடிக்குள்ளிருந்து

கனத்தப் பையுடன் வெளியேறுகிறது

ஒரு பெருமாநகரத்து மத்தியதரம்.

- வெ.வெங்கடாசலம்