உன் முத்தம் பெறும் நினைவு

வெயில் காலத்தில் பெய்யும் அரிய மழையை ரசிப்பது போன்றது

உன் இதழ்களில் என் இதழ்கள்

தலையை தன் கூட்டுக்குள் மறைத்துக்கொண்டிருக்கும்

நத்தை வடிவம் போலாக வேண்டும்

பிரிக்கவியலா இதழ்கள்

பெரும் காமத்தில் நடைபோடத் தொடங்குவதை

எண்ணிக் களிக்கிறேன் தெரியுமா

நாம் சந்திக்கும் கணங்களில்

நிசப்தத்தில் உறைந்திருக்கும் நம் உதடுகள்

வாத்தியங்கள் இசைக்காத இசைவெளியில்

முத்த மீட்டல்களை மீட்டும்

உன் சம்மதத்தில் பேரழிவு வெள்ளமென

பெருக்கெடுக்கும் கற்பனைகளில் விரிந்து மிதக்கும் நான்

மது பருகாமலேயே மதுவுண்ட கிறக்கத்தில்

உன் அருகாமை நிகழத் தவித்திருக்கிறேன்

உனைக் காணும் பேராவலில் செயலற்று விக்கித்துப்போன

என்னுள் விழித்துக்கொள்ளும் ஆண்மையை

வானவில்லின் நிறங்களில் அழகாக்குகிறேன்

நீ பார்க்கும் பொழுதுகளில் எவ்விதத் தடையுமற்று

ஒரு தாயைப்போல நீ அள்ளிக்கொள்ள

குழந்தையைப் போன்ற பரிவிலிருக்கிறேன்

எந்தக் கணத்திலும் நீ வெறுக்காதிருக்கவே

உன் மெல்லிய மனதில் மனதைக் கோக்கப்போகிறேன்

இரவு வந்துகொண்டிருந்தபோது

நீயாக விடியப்போகும் பொழுதின் பரவசங்களில்

புணர்ந்த உணர்வில் மிதந்தலைகிறேன் என்னுள்

திடீரென்று வந்த உன் அழைப்பு

என் ஏக்கங்களை மண்மூடிப் புதைக்க

கொடுக்கப்படாத நம் முத்தங்கள்

வீழ்கின்றன எரி நட்சத்திரங்கள்போல.