Published:Updated:

விடை சொன்னால் க்ரீம் பிஸ்கட்!

விடை சொன்னால் க்ரீம் பிஸ்கட்!
பிரீமியம் ஸ்டோரி
விடை சொன்னால் க்ரீம் பிஸ்கட்!

IQ கதைகள்- சுப.தமிழினியன், ஓவியங்கள்: பிள்ளை

விடை சொன்னால் க்ரீம் பிஸ்கட்!

IQ கதைகள்- சுப.தமிழினியன், ஓவியங்கள்: பிள்ளை

Published:Updated:
விடை சொன்னால் க்ரீம் பிஸ்கட்!
பிரீமியம் ஸ்டோரி
விடை சொன்னால் க்ரீம் பிஸ்கட்!
விடை சொன்னால் க்ரீம் பிஸ்கட்!

தாத்தா வீட்டில் விடுமுறையை ஜாலியாகக் கொண்டாடினாலும் வினோத்துக்கு ஒரு குறை. ஐ.க்யூ கேள்விகளைக் கேட்க அப்பா அருகில் இல்லையே என்பதுதான் அது. அதைத் தாத்தாவிடம் சொல்ல,

“உன் அப்பாவையே இந்த மாதிரி கேள்விகளைக் கேட்டவன் நான். உன்னைக் கேட்க மாட்டேனா” என்று சிரித்துக்கொண்டே கேட்டார் தாத்தா. வினோத் மகிழ்ச்சியானான்.

வினோத்தின் கண்களை மூடச் சொல்லி, சில்லறை நாணயங்களை அவன் சட்டைப் பையில் போட்டுவிட்டு, “உன் பையில் போட்டிருப்பதைப் பார்க்காமல், எவ்வளவு ரூபாய் இருக்குனு சொல், தொட்டுக்கூட பார்க்கக் கூடாது” என்றார் தாத்தா. 

விடை சொன்னால் க்ரீம் பிஸ்கட்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ஐ... கொண்டாட்டம்தான். ஆனா, பாக்காமலும் தொடாமலும் எப்படிச் சொல்றதாம்? எதுனா க்ளூ குடுங்க”னு வினோத் கேட்டான்.

சரி, கவனமா கேளு, இப்போ உன் பாக்கெட்டுக்குள்ள நாலுவிதமான மதிப்புள்ள ரூபாய்கள் இருக்கு, மொத்தம் எட்டு நாணயங்கள். ஒவ்வொரு மதிப்பிலும் இரண்டு நாணயங்கள் இருக்கு. மொத்தம் எவ்வளவு ரூபாய் உன் பாக்கெட்டில் இருக்குனு சொல்லு பார்ப்போம் என்றார் தாத்தா.

“அட, இது ஈஸி தாத்தா, இதுதானே விடை” என்று சரியாகச் சொன்னான் வினோத்.

 தாத்தா கொடுத்த நாணயங்களைச் செலவுசெய்ய கடைக்கு வந்தார்கள். தாத்தா, கடைக்காரரிடம் பேசிக்கொண்டே, தராசில் சில பிஸ்கட் பாக்கெட்டுகளை எடுத்து வைத்தபடி கவனமாகப் பார்த்துக்கொண்டே இருந்தார். மொத்தமாக எட்டு பிஸ்கட் பாக்கெட்டுகளை எடுத்து வைத்ததும், கடைக்குள்ளே வினோத்தைக் கூப்பிட்டார்.

விடை சொன்னால் க்ரீம் பிஸ்கட்!

“தாத்தா, எனக்கு இந்த பிஸ்கட்டே பிடிக்காது. அதுவும் எட்டு பாக்கெட்டா? க்ரீம் வைத்த பிஸ்கட்தான் என் ஃபேவரைட். அதுன்னா, எண்பது பாக்கெட்கூட ஓகேதான்” என்று தாத்தாவை வம்புக்கு இழுத்தான் வினோத்.

சரி, இந்த எட்டு பிஸ்கட் பாக்கெட்டும் க்ரீம் பிஸ்கட்டா மாறணும்னா, நான் ஒரு கேள்வி கேட்பேன். அதுக்கு சரியாக பதில் சொல்லணும்” என்று தாத்தாவும் வம்பிழுத்தார்.

“தாத்தா, எந்தக் கேள்விக்கும் அசராம அரை நிமிஷத்தில் பதில் சொல்லிடுவேன். நீங்க எதுக்கும் க்ரீம் பிஸ்கட் ஸ்டாக் இருக்கானு கேட்டுட்டு, கேள்வியைக் கேளுங்க” என்றான் வினோத்.

“அதையும் பார்ப்போம், இந்த எட்டு பிஸ்கட் பாக்கெட்ல, ஒரு பிஸ்கட் பாக்கெட் மட்டும் எடை கம்மியானது, அது எதுன்னு கண்டுபிடி. இந்தத் தராசை மூன்று முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்’’ என்றார் தாத்தா. 

‘ஓ... அப்படிப் பிரிச்சா ஆறு முறை ஆகிருமே, இப்படிப் பிரிக்கலாமா? மூணு முறைக்குள்ளயே கண்டுபிடிக்கணும்னா, இப்படிப் பிரிக்கணும்’னு ஏதேதோ கணக்குப் போட்டுப் பார்த்துட்டு, வேலையை ஆரம்பித்தான். மூன்றாவது முறையிலேயே சரியா பதில் சொல்லிட்டு, சைகையிலேயே க்ரீம் பிஸ்கட் கேட்டான் வினோத்.

க்ரீம் பிஸ்கட்டுகளைச் சாப்பிட்டுக்கொண்டே, ரெண்டு பேரும் தென்னந்தோப்புக்கு வந்தார்கள். தாத்தாவும் ஒரு க்ரீம் பிஸ்கட் வாங்கிச் சாப்பிட்டார். ‘நல்லா இருக்கே’ என்று சொல்லிவிட்டு, தரையில் ஒரு வட்டத்தை வரைந்தார் தாத்தா. “இதில், நீ மூணு கோடுகளை வரையணும். ஆனா, வட்டத்துல ஏழு துண்டுகள் வரணும்.” என்றார்.

‘ஏழு துண்டுகளா... எப்படிப் பார்த்தாலும் ஆறுதானே வருது’ வினோத் குழம்பிப்போனான்.

விடை சொன்னால் க்ரீம் பிஸ்கட்!

“ஏழு துண்டுகள் வரணும்னா, நீ கொஞ்சம் மாத்தி யோசிக்கணும் அவ்ளோதான்’’ என்று தாத்தா சொன்னதும், ஒரு க்ரீம் பிஸ்கட்டை முழுதாக வாயில் போட்டுக்கொண்டு யோசித்தான். சூப்பரான ஐடியா கிடைத்தது. “தாத்தா இப்பப் பாருங்க” என்று மூன்று கோடுகள் போட்டு, வட்டத்தை ஏழு துண்டுகளாக்கி, தாத்தாவை அசத்தினான் வினோத்.

க்ரீம் பிஸ்கட்டுகளை அதிகமாகச் சாப்பிட்டதால், தாகம் எடுக்க ஆரம்பித்தது. தாத்தா தென்னந்தோப்பில் இருந்த இளநீரை வெட்டிக் கொடுத்தார். அதைக் குடித்துவிட்டு, விடுகதைகள் போட்டுக்கொண்டே வீடு வந்து சேர்ந்தார்கள்.

விடைகள்:

1. ஒரு ரூபாய் -2, இரண்டு ரூபாய் -2, ஐந்து ரூபாய் -2,     10 ரூபாய்-2. மொத்தம் 36 ரூபாய்.

2. முதல் முறை, தராசின் இரண்டு தட்டுகளிலும் நான்கு, நான்கு பாக்கெட்டுகளை வைத்து, எந்தப் பக்கம் மேல இருக்கோ, அந்த நான்கையும் இரண்டாம் முறை நிறுக்கும்போது, இரண்டு இரண்டாகப் பிரித்து, தட்டுகளில் வைக்க வேண்டும். அதில் எந்தத் தட்டு மேலே இருக்கிறதோ, அந்த இரண்டையும் மூன்றாம் முறை நிறுக்கும்போது,  தனித்தனியாக தட்டில் வைத்தால், எடை குறைவான பிஸ்கட் பாக்கெட் இருக்கும் தட்டு மேலே சென்று விடும்.

விடை சொன்னால் க்ரீம் பிஸ்கட்!