Published:Updated:

ஜொலிக்குதே லபா..லபா!

ஜொலிக்குதே லபா..லபா!
பிரீமியம் ஸ்டோரி
ஜொலிக்குதே லபா..லபா!

அறிமுகம் / ரேவதி , படங்கள்/ச.இரா.ஸ்ரீதர்

ஜொலிக்குதே லபா..லபா!

அறிமுகம் / ரேவதி , படங்கள்/ச.இரா.ஸ்ரீதர்

Published:Updated:
ஜொலிக்குதே லபா..லபா!
பிரீமியம் ஸ்டோரி
ஜொலிக்குதே லபா..லபா!
ஜொலிக்குதே லபா..லபா!

களோட கல்யாணத்துக்கு குறைஞ்சது 20 பவுனாவது போடணும்’ என்று ஆசைப்பட்டவர்கள் இப்போது, '10 பவுனுக்காவது வழி இருக்கிறதா?’ என்று ஏங்கித் தவிக்கிறார்கள். காரணம், தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துகொண்டே இருக்கிறது.   

பெரிய பெரிய நகை போட்டுப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட வாடிக்கையாளர்கள் இப்போது நகைக் கடைப் பக்கம் போகவே பயப்படுகிறார்கள். இவர்களின் ஆசையை நிறைவேற்ற வந்துள்ளன, குறைந்த எடையில் பெரிய சைஸ் நகைகள். இது பற்றிய தகவல்கள் அறிந்துகொள்ள பிரபல தங்க நகைக் கடை உரிமையாளர்கள் சிலரை சந்தித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனந்த பத்மநாபன் (மேனேஜிங் டைரக்டர், ஜி.ஆர்.தங்கமாளிகை):

ஜொலிக்குதே லபா..லபா!

''ஏழை எளிய மக்கள் வாங்க முடியாத அளவுக்கு தங்கம் விலை ஏறிக்கிட்டேதான் இருக்கு. திடீர்னு சவரனுக்கு ரூ. 200 ஏறினால், அடுத்த ஒரு வாரத்தில் ரூ 150 குறைகிறது. இப்படி ஏற்றமும், இறக்கமும் இருந்தாலும், படிப்படியாக தங்கத்தின் விலை கூடிக்கொண்டேதான் வருகிறது. இப்போது எந்த ஒரு சேமிப்பைக் காட்டிலும் தங்கத்தில் சேமிக்கறதுதான் பெஸ்ட்ன்னு ஆகிப்போச்சு. நெக்லஸ் வாங்க விரும்பும் நடுத்தரவர்க்கத்தினர், அவர்களது ஆசைகளை மனதுக்குளே பூட்டி வைத்தார் கள். இவர்களுக்காகவே எடை குறைந்த தங்கத்தில் நெக்லஸ், ஆரம், ஹியரிங், வளையல்  ஆகியவற்றை விற்பனை செய்கிறோம். அதனால் பட்ஜெட்டுக்கு ஏற்ற மாதிரி, லைட் வெயிட் நகைகளுக்கு இப்போது மதிப்பு கூடிவிட்டது. தைரியமாக வெளியில் போட்டுட்டு போக முடியும். பார்க்கவும் 'ரிச்’ லுக்காக இருக்கும். கிளாஸிக், சம்கி ஜுவல்ஸ்தான் எங்களோட இப்ப லேட்டஸ்ட் டிரென்ட். கஸ்டமர்கள் இதை வாங்கிட்டு ரொம்பவும் திருப்தியாகப் போறதைப் பார்க்கிறது சந்தோஷமா இருக்கு.''  

ஜொலிக்குதே லபா..லபா!
ஜொலிக்குதே லபா..லபா!

கிரண் குமார் (மேனேஜிங் டைரக்டர், லலிதா ஜுவல்லரி, சென்னை):  ''தங்கம் விலை ஏறினதால், எந்த நகைக் கடையிலும் தராத ஒரு சலுகையா சேதாரத்தை ரொம்பவே கம்மி பண்ணியிருக்கோம். வளையலுக்கு 4 முதல் 8 சதவிகிதம்.  செயினுக்கு 3 சதவிகிதம் முதல் ஆரம்பிக்கறது. இம்ப்போர்ட் பண்ற எக்ஸ்க்ளூசிவ் டிஸைன் நகைகள்னா 9 சதவிகிதம் சேதாரம் கம்மி பண்றோம். இப்படி எங்குமே தராத சலுகையைத் தர்றதால, வாடிக்கையாளர்களும் பெருகிட்டே இருக்காங்க. பார்க்க கிராண்டா, அதே சமயம் லைட் வெயிட்டா இருக்கிற நகைகளை 'லபா’ டிஸைன்ஸ்னு சொல்லுவோம். மூணு பவுன்ல எங்ககிட்ட ஆரமே இருக்கு. பார்த்தா ஆறு பவுன் மாதிரி இருக்கும். இந்த நகைகளை ராஜ்கோட், கொல்கத்தாலேர்ந்து வரவழைக்கிறோம். இதுதான் அதிகம் விற்பனை ஆகுது.''  

பிரின்சன் ஜோஸ் (சேர்மன் - மேனேஜிங் டைரக்டர், பிரின்ஸ் ஜுவல்லர்ஸ்):

ஜொலிக்குதே லபா..லபா!

''அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சியால் தங்கம் விலை ஜாஸ்தியாகத்தான் வாய்ப்பு இருக்கு. இந்த வருடம் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை 32 சதவிகிதம் அதிகரிச்சு இருக்கு. இப்ப கோல்டுதான் பெஸ்ட் இன்வெஸ்ட்மென்ட். இந்த மாதிரி நேரத்தில்தான் வெயிட்லெஸ் நகைகளைத் தேடி மக்கள் வர்றாங்க.

ஜொலிக்குதே லபா..லபா!
ஜொலிக்குதே லபா..லபா!

லைட் வெயிட் நகை களை அறிமுகப்படுத்தினது நாங்கதான். இந்த நகைகள்ல கேரளா டை வொர்க் பண்ணி, புதுமையான கலெக்ஷன்ஸ் கொண்டுவர்றோம். அந்த கால ஆன்டிக் நகைகளுக்கு எப்பவும் வரவேற்பு உண்டு. அந்த டிஸைனை எல்லாம் லைட் வெயிட் நகைகள்ல புகுத்தி, வெரைட்டியா கொண்டு வந்திருக்கோம். ஒரு பவுனில் நெக்லஸ், ஒண்ணரை பவுனில் ஜோடி வளையல், இரண்டு பவுனில் செயின், கால், அரை பவுனில் தோடுனு ஐந்து பவுன்களில் ஒரு பெண்ணுக்கான அத்தனை நகைகளும் கிடைச்சிடும். அதனால்தான் இத்தனை வரவேற்பு.''

இனி எல்லோரும் லைட் வெயிட் நகைககளில் ஜொலிக்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism