Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

சொல்வனம்

சொல்வனம்

சொல்வனம்

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்
சொல்வனம்

ஒரு மரம் வெட்டப்படும்போது... 

ஒரு மேகம் பாதை மாறுகிறது.

காற்றின் மீதில் விஷ ஊசியொன்று

செலுத்தப்படுகிறது.

ஏகாதிபத்திய மனநிலையில்

பறவைகளின் வீடுகள்

இடிக்கப்படுகின்றன.

சூல்கொண்ட கருக்கள்

கலைக்கப்படுகின்றன.

ஒரு நிழல்

படுகொலை செய்யப்படுகிறது.

ஒரு வனம் அழிக்கப்படுகிறது

ஒரு தாயின் முலை அறுக்கப்படுகிறது.

ஒரு சிசு வீறிட்டழுகிறது.

அடுத்த நூற்றாண்டின்

அமிலப் பொழிவுக்கு

அடிக்கல் நாட்டப்படுகிறது.

பிராண வாயுவின் கழுத்தில்

தூக்குக் கயிற்றின் இறுக்கம்

அதிகரிக்கப்படுகிறது.

ஒரு குயில்

ஊமையாக்கப்படுகிறது.

 - சௌவி 

காற்றாகி...

ஈசிச்சேரின் ஆட்டம்

நின்றுபோன மறுநாள்

வாசலில் விழுந்த பேப்பரை

எடுத்துப் போட்டேன் சேரில்.

அதற்காகவே காத்திருந்ததுபோல

பரபரவெனப் பக்கங்களைப் புரட்டி

பிரித்துப்போட்ட காற்று

தாத்தாவாக இருக்கலாம்.

 - கி.ரவிக்குமார் 

அடி நீதானா அந்தக் குயில்...

மனதிற்கு மிகவும் நெருக்கமான பாடலென்று

தொலைக்காட்சிப் பார்க்கச்சொல்லி

தொடுதிரை தூதனுப்பியிருந்தாள் நெடுநாள் தோழி

அட ஆச்சர்யம்... எனக்கும் இது நெருக்கமான பாடலென

மின்னல் வேக மறுமொழியளித்ததில் அவளுக்குச் சம்மதமில்லை.

பின்தொடர்ந்த அவளின் விருப்பமான பாடல்களும்

ப்ரியமென்றாலும் குறுநகையுடன் அனுப்பிய

அதே ஆச்சர்ய குறுஞ்செய்திகளுக்கு

'போடா, நீ பொய் சொல்ற’ என

சிவந்த முகஉணர் சித்திரங்களைப் பரிசளித்தாள்.

திரையில் ஒளிர்ந்துகொண்டிருந்த

இசைஞானியின் ஆறுதலான பாடலை அனுப்பிவைத்தேன்

என் விருப்பமான பாடலைக் கேட்டவளிடம்.

சிறிதும் தாமதமில்லாமல் அலைபேசி பூத்தது

சில பூங்கொத்துகளுடன் இதய ஸ்மைலிகளை.

கடிகையில் பன்னிரண்டைத் தாண்டிவிட்ட

இந்தப் பின்னிரவின் ஏகாந்த வேளையில்

மலேசியா வாசுதேவனின் பரவசமானக் குரல்

இப்போது குதூகலமாக ஒலிக்கத் தொடங்குகிறது  

'அடி நீதானா அந்தக் குயில்’.

 - தர்மராஜ் பெரியசாமி 

புல்ஷிட்...

ட்ஸ்சக் என்ற ஓசையுடன் திறந்த

பெப்சியின் தகரக்குப்பிக்கு

ஒரே முறை ஐபேடில் இருந்து நிமிர்ந்தாள்

ரயில் தன் போக்கில் விரைந்துகொண்டிருந்தது

நிறுத்தங்கள் வந்து போயின

அவள் ஐபேடில் இருந்து நிமிர்வதாக இல்லை

அருகே இருந்தவர் இறங்கியபோது

ஐபேடைவிட்டு ஐபோனுக்கு மாறியபடியே நகர்ந்து

எனக்கு இடம்கொடுத்தாள்

போனோடு உறவாடியபடியே பயணித்தாள்

திரும்பிப் பார்க்காமலேயே

தனது நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டாள்

பெப்சி தீர்ந்துபோனது

அச்சம் மடம் நாணமென்ற

புல்ஷிட் எதுவுமே தெரியாத

அழகான ஒருத்தியைப் பற்றி

வேறென்ன கவிதையை எழுதிவிட முடியும்?

 - ஷான்