
தங்கக்கட்டி செங்கனி
லட்டு மாதிரி நகரை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஜிலேபிபோல சிரிக்குது விளைமீன்
பாதுஷா மாதிரி புரண்டு கிடக்குது
முட்டை நண்டு என்று
கூவிக் கூவி வியாபாரம்செய்யும்
அப்பாவின் கையில்
செதில்கள் குத்திக் குத்தி
தட்டை முறுக்கு ஓட்டைகளாக
இருக்கின்றன ரத்தம் கசியும் புண்கள்.