கி(லி)ளி ஜோசியம்

“காலம் கூடிவரும். ஜெயித்தால் மந்திரி பதவி தேடிவரும். இல்லையேல்…” என்று ஜோசியக்காரர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கூண்டுக்குள் சென்றது கிளி.

- அஜித்

குமுறல்

அதான் ``ஆங்ரி பேர்டு, டெம்பிள் ரன்னு ஏகப்பட்ட கேம்ஸ் வந்துடுச்சே... இன்னும் ஏன்டா தெருவுல கிரிக்கெட் விளையாடி கண்ணாடியை உடைக்கிறீங்க?'' என்று புலம்பினார் வீட்டின் உரிமையாளர்!

- செ.விமல் குமார்

தேவை!

`வேலைக்கு ஆட்கள் தேவை' என்ற போர்டை மாட்டி பத்து நாட்கள் ஆகியும் யாரும் வராததால், அதையே இந்தியில் எழுதி மாட்டினார் ஹோட்டல் முதலாளி தமிழ்வாணன்.

- கோபிநாதன்.

வணக்கம்

இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனுக்குள் நுழைந்ததும் உட்கார்ந்தபடி வணக்கம் வைத்தான் கைதி. அவனை ஜாமீனில் எடுக்கவந்த அரசியல்வாதிக்கு எழுந்து வணக்கம் வைத்தார் இன்ஸ்பெக்டர்!

- பாப்பனப்பட்டு வ.முருகன்

கேள்வி

பிளாட்பாரத்தில் வசிக்கும் செல்வி, தேர்தல் அறிக்கையைப் படித்துவிட்டு தன் அம்மாவிடம் கேட்டாள், “செல்போன் கொடுத்தா நாம எப்படிம்மா சார்ஜ் போடுறது?”

- தங்க நாகேந்திரன்

ஸீட்

``உங்க பையனுக்கு ஸீட் வேணும்னா அஞ்சு கிலோமீட்டருக்குள்ள வீடு இருக்கணும். ரெண்டு கிலோ மீட்டர்ல நம்ம அப்பார்ட்மென்ட் இருக்கு, பார்க்கிறீங்களா?'' என்றார் பள்ளித் தாளாளர்.

- எஸ்கா

பேர ஒப்பீடு

தேர்தலில் ஜெயித்த வேட்பாளர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தவுடன் கேட்டுக்கொண்டார்கள், ``நீங்க ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீங்க?''

- வேம்பார் மு.க.இப்ராஹிம்

விழிப்புஉணர்வு

தேர்தல் விழிப்புஉணர்வு படத்தில் நடித்த ஹீரோ, வாக்குப்பதிவு நாளில், சுவிட்ஸர்லாந்தில் டூயட் பாடிக்கொண்டிருந்தார்.

- ஜெ.கண்ணன்

செல்ஃபி 2.0

``குரூப் செல்ஃபிகுள்ள ஒரு பேய். இதுதான் சார் படத்தோட ஒன்லைன்.''

- தமிழ்வேல்

நவீனம்

தன் ஐந்து வயது மகனிடம் செல்போனைக் கொடுத்துவிட்டு ஒரு வயது செல்ல நாயை வாக்கிங் அழைத்துச் சென்றார் தந்தை.

- சங்கர்.ஜி

அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய ‘நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ரூ. 500. உங்கள் கதைகளை 10secondstory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!