கண் மூடிக் கிடப்பவள்

வெண்கரடி பொம்மையை

அருகில் வைத்தபடி தூங்குவாள் தினமும்.

அம்மாவோடு சண்டைபோடும் நாட்களில்

அப்பாவின் மடியில்.

இன்னும் சில நாட்களில் தங்கையோடும்

கல்லூரி விடுமுறை தினங்களில்

அக்கா குழந்தைகளோடும் சேர்ந்து

அரட்டையடித்தபடி தூங்கிவிடுவாள்.

நேற்றைய இரவில் பேருந்தில்

தனியாக ஜன்னல் கம்பியின் மேல்

சாய்ந்து தூங்கியவள்

இப்போது கண் மூடிக் கிடக்கிறாள்

முட்புதருக்குள்.

- கிருத்திகா தாஸ்

வேலை

தினம் காலையில்

பூக்கடையைத் திறந்துவைப்பவளின்

புன்னகையைக் காண்கையில்

சற்றுப் பொறாமையாக இருந்தது

மாலையில்

பூந்தொட்டிகளை ஒவ்வொன்றாக

கடைக்குள்

எடுத்து வைத்துக்கொண்டிருந்தவளின்

முகத்தை

ஒருநாள் பார்க்கும் வரையிலும்.

- அருண் காந்திநாதன்

சிறு மலர்

என் இதயத்தின்

அடியாழத்தை நோக்கி

விழுந்துகொண்டே இருக்கிறது

ஒரு சிறு மலர்.

இதயத்தின் மையிருட்டில்

அதன் இதழ்கள்

மினுங்குவதைப் பார்த்தபடி இருக்கிறேன்

என் இதயத்தின்

அடியாழத்தில்தான்

அதை வாங்கிக்கொள்ள

தரை என்று

ஒன்றுமில்லையே

இனி எங்குதான் விழும்

அந்தச் சிறு மலர்?

- கார்த்திக் திலகன்

நாலாங்கிளாஸ் முழுப்பரிட்சை லீவு

பருத்திக் காட்டுக்குள்ள தட்டுக்குச்சி ஒடிச்சிக்கிட்டு

உச்சிவெய்யில்ல வாரப்ப

நடக்கவும் முடியாம, ஒதுங்க நெகிலில்லாம

காலெல்லாம் பத்திக்கிட்டு சுடுறப்ப

திரிஞ்ச கழுத மேல தாவி ஏறி

செஞ்ச சவாரி

இன்னும் ஞாபகத்துல திரிஞ்சுட்டே கிடக்கு

எட்டு கமான் பாலத்து மேல நின்னு

தலைக்குப்புற பல்டி அடிச்சு

மூச்சடக்கி முங்கு நீச்சல் போட்டு

அடி வேத்தை அள்ளியாந்து

மண்ணுப்புள்ளையார் புடிச்சிவெச்சி

எருக்கம் பூ மாலை சாத்தி கும்பிட்டது

இன்னும் மனசுல சாமியா கிடக்கு

அய்யாவுபிள்ள தோட்டத்துக் கொய்யாக்காய

திருட்டுத்தனமா பொறிச்சாந்து

உப்பு மௌகாத்தூளை ரொப்பி

கொய்யாவ வகுந்து நறுக்குன்னு கடிச்ச ருசி

இன்னும் உள்நாக்குல ஒட்டிக் கிடக்கு

சிறு நெல்லிக்கா மரமேறி காலால உலுக்கியுட

கிளிப்பச்சை நிற மழை பேஞ்சதுபோல

விழுந்த காய்களைப் பொறுக்கித் தின்னதும்

அப்புறமா குடிச்ச தண்ணி சர்க்கரையா இனிச்சதும்

இன்னும் தொண்டைக்குள்ள ஈரமா கிடக்கு

லீவெல்லாம் முடிஞ்சுபோய்

புதுசா தச்ச டிராயர் சட்டைகள பல தடவ போட்டுப்பாத்து

புதுப் புத்தக வாசத்தை பல தடவ மோந்து பாத்து

பாஸான சந்தோஷமும் புகு வகுப்பு பரவசமும்

புது வாத்தியார் குரலும்...

எல்லாம் சேந்து இருந்தாலும்

என்னிக்கும் மனசுல லீவு நாளே வெளிச்சமா இருக்கு!

- ஸ்ரீ நிவாஸ் பிரபு

நிலவொளியில் பனித்துளிகள்

நிலம் வாங்கினேன்

வெண்டை, கீரை

வசிக்க.

பத்து மாதம் சுமந்தவளை

நான் சுமக்கிறேன்

மண் குடுவைக்குள்.

விற்ற நிலம்

வாழ்கிறது சட்டையில்

வாழைக் கறை.

காட்டுக்குள் லாரி

லாரிக்குள் காடு

வெட்டிய மரங்கள்.

நடுக் கழுத்தில்

நெல்மணிகள்

அறுபட்ட கோழி.

- துரை.நந்தகுமார்

கண் மூடிக் கிடப்பவள்

வெண்கரடி பொம்மையை

அருகில் வைத்தபடி தூங்குவாள் தினமும்.

அம்மாவோடு சண்டைபோடும் நாட்களில்

அப்பாவின் மடியில்.

இன்னும் சில நாட்களில் தங்கையோடும்

கல்லூரி விடுமுறை தினங்களில்

அக்கா குழந்தைகளோடும் சேர்ந்து

அரட்டையடித்தபடி தூங்கிவிடுவாள்.

நேற்றைய இரவில் பேருந்தில்

தனியாக ஜன்னல் கம்பியின் மேல்

சாய்ந்து தூங்கியவள்

இப்போது கண் மூடிக் கிடக்கிறாள்

முட்புதருக்குள்.

- கிருத்திகா தாஸ்

வேலை

தினம் காலையில்

பூக்கடையைத் திறந்துவைப்பவளின்

புன்னகையைக் காண்கையில்

சற்றுப் பொறாமையாக இருந்தது

மாலையில்

பூந்தொட்டிகளை ஒவ்வொன்றாக

கடைக்குள்

எடுத்து வைத்துக்கொண்டிருந்தவளின்

முகத்தை

ஒருநாள் பார்க்கும் வரையிலும்.

- அருண் காந்திநாதன்

சிறு மலர்

என் இதயத்தின்

அடியாழத்தை நோக்கி

விழுந்துகொண்டே இருக்கிறது

ஒரு சிறு மலர்.

இதயத்தின் மையிருட்டில்

அதன் இதழ்கள்

மினுங்குவதைப் பார்த்தபடி இருக்கிறேன்

என் இதயத்தின்

அடியாழத்தில்தான்

அதை வாங்கிக்கொள்ள

தரை என்று

ஒன்றுமில்லையே

இனி எங்குதான் விழும்

அந்தச் சிறு மலர்?

- கார்த்திக் திலகன்

நாலாங்கிளாஸ் முழுப்பரிட்சை லீவு

பருத்திக் காட்டுக்குள்ள தட்டுக்குச்சி ஒடிச்சிக்கிட்டு

உச்சிவெய்யில்ல வாரப்ப

நடக்கவும் முடியாம, ஒதுங்க நெகிலில்லாம

காலெல்லாம் பத்திக்கிட்டு சுடுறப்ப

திரிஞ்ச கழுத மேல தாவி ஏறி

செஞ்ச சவாரி

இன்னும் ஞாபகத்துல திரிஞ்சுட்டே கிடக்கு

எட்டு கமான் பாலத்து மேல நின்னு

தலைக்குப்புற பல்டி அடிச்சு

மூச்சடக்கி முங்கு நீச்சல் போட்டு

அடி வேத்தை அள்ளியாந்து

மண்ணுப்புள்ளையார் புடிச்சிவெச்சி

எருக்கம் பூ மாலை சாத்தி கும்பிட்டது

இன்னும் மனசுல சாமியா கிடக்கு

அய்யாவுபிள்ள தோட்டத்துக் கொய்யாக்காய

திருட்டுத்தனமா பொறிச்சாந்து

உப்பு மௌகாத்தூளை ரொப்பி

கொய்யாவ வகுந்து நறுக்குன்னு கடிச்ச ருசி

இன்னும் உள்நாக்குல ஒட்டிக் கிடக்கு

சிறு நெல்லிக்கா மரமேறி காலால உலுக்கியுட

கிளிப்பச்சை நிற மழை பேஞ்சதுபோல

விழுந்த காய்களைப் பொறுக்கித் தின்னதும்

அப்புறமா குடிச்ச தண்ணி சர்க்கரையா இனிச்சதும்

இன்னும் தொண்டைக்குள்ள ஈரமா கிடக்கு

லீவெல்லாம் முடிஞ்சுபோய்

புதுசா தச்ச டிராயர் சட்டைகள பல தடவ போட்டுப்பாத்து

புதுப் புத்தக வாசத்தை பல தடவ மோந்து பாத்து

பாஸான சந்தோஷமும் புகு வகுப்பு பரவசமும்

புது வாத்தியார் குரலும்...

எல்லாம் சேந்து இருந்தாலும்

என்னிக்கும் மனசுல லீவு நாளே வெளிச்சமா இருக்கு!

- ஸ்ரீ நிவாஸ் பிரபு

நிலவொளியில் பனித்துளிகள்

நிலம் வாங்கினேன்

வெண்டை, கீரை

வசிக்க.

பத்து மாதம் சுமந்தவளை

நான் சுமக்கிறேன்

மண் குடுவைக்குள்.

விற்ற நிலம்

வாழ்கிறது சட்டையில்

வாழைக் கறை.

காட்டுக்குள் லாரி

லாரிக்குள் காடு

வெட்டிய மரங்கள்.

நடுக் கழுத்தில்

நெல்மணிகள்

அறுபட்ட கோழி.

- துரை.நந்தகுமார்