வாசகி சிறுகதை

ஏறத்தாழ 36 ஆண்டுகள் பணியாற்றியாகி விட்டது. சாதாரண ஆசிரியராக சேர்ந்து, பதவி உயர்வுகளைப் பெற்று, இப்போது கல்வி அதிகாரியாக ஓய்வு பெறுகிறார் சிவராமன்!

இனி, உயர் அதிகாரிகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை; பள்ளிகளை ஆய்வு செய்து, ஆசிரியர்களின் வயிற்று எரிச்சலை கொட்டிக் கொள்ள வேண்டாம்; ஒரு நாள்கூட விடுமுறை எடுக்க முடியாமல் அவதிப்பட வேண்டியதில்லை... நினைக்க நினைக்க நெஞ்சம் மகிழ்ச்சியில் துள்ளியது சிவராமனுக்கு!

பிரிவு உபசார கொண்டாட்டங் கள் முடிந்து, இரவில் தன் நிலைக்கு திரும்பியிருந்தது அந்த வீடு.

''என்னங்க... மேற்கொண்டு எங்கே வேலைக்குப் போகப் போறீங்க?'' என்றாள் மீனாட்சி.

''இன்னும் யோசிக்கல. நாளைக்கு சொல்றேன்'' என்று மட்டும் சொன்னார். மீனாட்சி உறங்கிவிட, அவருக்கோ தூக்கம் தூரமாகியிருந்தது.

'இன்னமும் நம்மை வேலைக்குப் போகச் சொல்றாளே... எதுக்கு? கை நிறைய ஓய்வூதியம் கிடைக்கும். வங்கியில பொறுப்பான பதவியில இருக்குற மீனாட்சியோட சம்பளமும் வரும். நம்ம ஒரே பையன், திருமணம் முடிஞ்சு வெளிநாட்டுல கை நிறைய சம்பாதிக்கிறான். சென்னையில சொந்த வீடு

இருக்கு. தவிர, ரெண்டு ஃப்ளாட் வாங்கி வாடகைக்கு விட்டிருக்கோம். இதுக்கு மேலயும் சம்பாதிக்கச் சொல்றாளே? ஓடிக் களைச்ச உடம்பு இது. எல்லாத்துக்குமா சேர்த்து ஓய்வு எடுக்கலாம்னா... மனசாட்சி இல்லாம கேட்கறாளே?’ - ஆதங்கம் கொப்பளிக்க, நள்ளிரவு தாண்டியே தூக்கம் விழுங்கியது அவரை.

கொஞ்சம் தாமதமாகவே படுக்கையிலிருந்து எழுந்தவர், ''மீனாட்சி... உங்கிட்டே பேசணுமே'' என்றார்.

''ஆஹா... முடிவு பண்ணிட்டீங்களா..! என்ன வேலைக்குப் போகப் போறீங்க?'' என்று மீண்டும் அந்தக் கேள்வியிலேயே நின்றாள்.

''தேவைக்கு அதிகமா செல்வம் இருக்கு. இதுக்கு மேலயும் எதுக்கு என்னைச் சம்பாதிக்கச் சொல்றே? இனியும் நான் வேலைக்குப் போய் கஷ்டப்படணுமா? இந்த உடம்பைப் பத்தி உனக்கு அக்கறையே இல்லையா?'' - படபடவென அவர் பொரிய, பதறித் தடுத்தாள் மீனாட்சி.

''சம்பாதிச்சுட்டு வந்து கொடுக்கறதுக்காக நான் வேலைக்குப் போகச் சொல்லல...''

கோபம் கலைந்து, குழப்பம் சூழ்ந்தது சிவராமனை.

''ஆமாங்க! இதுநாள் வரைக்கும் உங்க உடம்புல எந்த வியாதியும் இல்ல. நேரத்துக்குச் சாப்பிட்டதும், சுறுசுறுப்பா இயங்கினதும்தான் அதுக்குக் காரணம். அதைத் தொடர வேண் டாமா..? வேளாவேளைக்குச் சாப்பிட்டு, தூங்கி எழுந்துனு ஓய்வு எடுக்கறது, ஒரு மாசத்துக்குச் சுகமா இருக்கும். ஆனா அதுக்கு அப்புறம்..? பொழுதை எப்படிக் கடத்துறதுனு தெரியாம தள்ளாடுவீங்க. எனக்கு இன்னும் நாலு வருஷம் சர்வீஸ் இருக்கு. அதுவரை இந்த நாலு சுவருக்குள்ள, தனிமையை உங்களால தாங்க முடியாது. முதல்ல மனசு சுணங்கும். நேரத்துக்குச் சாப்பிடாம, நிம்மதியான தூக்கம் இல்லாமனு அது எதிரொலிக்கும். அப்புறம் உடம்பும் சுணங்கும். வேலைக்கு நடுவுல எடுக்கற ஓய்வுதான் சுகம். ஓய்வையே வேலையா எடுத்தா, அது துன்பம்!''

சிவராமனிடமிருந்து குறுக்கீடு எதுவும் இல்லை.

''அதனாலதான் சொல்றேன். ஏதாவது ஒரு டியூஷன் சென்டர்ல கேட்டு, ஸ்கூல் பசங்களுக்கு இலவசமா டியூஷன் எடுங்க. வேலைக்குப் போன மாதிரியும் இருக்கும், பொழுதுபோன மாதிரியும், உடம்பை சுறுசுறுப்பா வெச்சுக்கிட்ட மாதிரியும் இருக்கும், நாலு குழந்தைகள படிக்க வெச்ச திருப்தியும் கிடைக்கும். இடையில் எங்கேயும் போக, வர விரும்பினா, தாராளமா லீவ் எடுத்துக்கலாம். இப்ப என்ன சொல்றீங்க...?''

- மீனாட்சியின் வார்த்தைகளில் வயோதிகப் பாடம் கற்றுக்கொண்ட மாணவராக நின்றிருந்தார், ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி சிவராமன்!