Published:Updated:

மரம்

மரம்
பிரீமியம் ஸ்டோரி
News
மரம்

கவிதை: காளி

மரம்

யாருமற்ற அறையின் தனிமை, 

அதன் சல்லிவேர்களால் இருளில்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

என் மேல் ஈரம் சொட்ட ஊடுருவ

என் அறையெங்கும் இளந்தளிர்

பழுத்த இலைகள் பச்சிலைகள் மொட்டுகளென

ஒரு மரம் உதிர்ந்து ஈரத்தில் அப்பியிருந்தது.

ஆணி வேர் மட்டும் தொலைந்திருந்தது.

அறை முழுவதும் தேடினேன்

காணவே இல்லை.

என் படுக்கையறையில் ஊன்றியிருக்குமென

நான் உத்தேசித்த சமயத்தில்

சல்லிவேர்கள் எனை ஸ்பரிசிக்க

நான் இலைகளெனத் துளிர்த்தெழ

ஆணிவேரினைக் கண்டேன்.

அது என்மேலே ஊன்றப்பட்டு மிதந்துகொண்டிருந்தது

நான் மௌனித்து மரமாகி நின்றேன்.