Published:Updated:

10 செகண்ட் கதைகள்

10 செகண்ட் கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: ஸ்யாம்

10 செகண்ட் கதைகள்

இ-சினிமா

‘இன்னைக்கு நாலு படம் ரிலீஸா?’ என்ற சேகர், கம்ப்யூட்டரை நோக்கி விரைந்தான் டவுண்லோடு செய்துபார்க்க!

- மல்லிகா குரு

10 செகண்ட் கதைகள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கதை

``பத்து எண்றதுக்குள்ளே உன் கதையை முடிச்சுடுவேன்!''

``அப்போ அதை விகடனுக்கு அனுப்பிடுங்க'' என்று கூறிவிட்டு நடந்தான் ராமு!

- எஸ்.கோபாலன்

10 செகண்ட் கதைகள்

அப்பா

அப்பா-அம்மா விளையாட்டில் அப்பா வேடம் போட்ட சிறுவன், குடித்தவனைப்போல் தள்ளாடி வந்தான்!

- அ.ரியாஸ்

10 செகண்ட் கதைகள்

கன்டெய்னர் காவலர்

 ``நாளைக்கு ஊருக்கு வந்ததும் தந்துடுறேன்ப்பா. இன்னைக்கு திருப்பூர்ல டியூட்டி” - கடன்காரனிடம் போனில் கெஞ்சிக்கொண்டிருந்தார் கன்டெய்னர் பாதுகாப்புக்கு நின்ற காவலர்!

- ரம்யா தேவநாதன்

10 செகண்ட் கதைகள்

ஆர்வம்

லீவு முடிந்து பேரன் போன பிறகு, தாத்தாவும் பார்க்க ஆரம்பித்துவிட்டார் போகோ சேனலை!

- சி.சாமிநாதன்

10 செகண்ட் கதைகள்

நவீன மொய்

கல்யாணச் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு, மொய் எழுதும் இடத்தில் கேட்டான், ‘`கிரெடிட் கார்டு அக்செப்ட் பண்ணுவீங்களா?''

- கி.ரவிக்குமார்

10 செகண்ட் கதைகள்

ஆசீர்வாதம்

கோயில் யானை முன்பு ஆசீர்வாதம் வேண்டி நின்றார், வனவிலங்கு அதிகாரி வரதன்!

- பாப்பனப்பட்டு வ.முருகன்

10 செகண்ட் கதைகள்

விதி

மழைக்கு ஒதுங்க இடம் கிடைக்காமல் கோயிலுக்குள் நுழைந்தது, நேர்த்திக்கடன் ஆடு!

 - பெ.பாண்டியன்

10 செகண்ட் கதைகள்

தரிசனம்

சாமி தரிசனம் காணவந்த நடிகையின் தரிசனம் காண, அலைமோதியது பக்தர்கள் கூட்டம்!

- வீரமணி

10 செகண்ட் கதைகள்

சமையல் ரெடி

சமைத்து முடித்ததும் பரிமாறாமல், பாங்குடன்  படம்பிடித்துக் கொண்டிருந்தாள் வாட்ஸ்அப் குரூப்பில் அனுப்ப!

- பிரகாஷ்

10 செகண்ட் கதைகள்

அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய ‘நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ` 500. உங்கள் கதைகளை 10secondstory @vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!