
பச்சையிலிருந்து சிவப்புக்கு
மாறுகிறது - பதிமூன்றாவது சுற்றில்
வென்றுவர அறுபது வினாடிகள்
அவருக்கு ஒதுக்கப்படுகிறது.
துழாவி நகர்ந்து எரிச்சல் முகங்களின்
இடையே
அந்தப் பார்வையற்றவர் வான் நோக்கி
குழிந்திருந்த துண்டை ஏந்தியபடி
வறண்ட சாரீரத்தில்
“காணா இன்பம் கனிந்ததேனோ...”
பாடுகிறார் – வரிகளினிடையே நட்சத்திரங்கள்
குட்டிக்கரணம் அடித்து விழுகையில்
கூப்பிய கரங்களுடன் ஹாரன்களுக்கு வழிவிட்டு
மரத்தடிக்கு நகர்கிறார் - கடவுள்
கிளைகளை அசைக்க பழுப்பு இலைகளும்
பூக்களும் உதிர்கின்றன அந்த நட்சத்திரங்களின் மீது.
பதினான்காவது சுற்றுக்குள் நுழையும் முன் - விநாடிகள்
அறுபதிலிருந்து தொண்ணூறுக்கு மாறியிருக்கிறது.
கடவுளால் செய்யக்கூடியதெல்லாம்
அவ்வளவுதான்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism