Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

சொல்வனம்

சொல்வனம்

சொல்வனம்

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்
சொல்வனம்

சூரியனை மேய்ப்பவள் 

பிசுக்கேறிய கேசத்துடன்

தன்னையே நொந்தபடி

தனியே பேசித் திரியும்

அந்த நடுத்தர வயதுப்பெண்

தன் தீராத சோகத்தின்

கதவுகளைத்

திறந்துவிடும்படியும்

ஏதோ ஒரு

பெயரை உச்சரித்தபடியும்

காற்றின் வெளியைத் தட்டிக்கொண்டிருக்கிறாள்.

அழாத அழுகைகள்

கிடக்கும் உண்டியலென

அவள் விழிகள் உருண்டு கொண்டேயிருக்கின்றன

நண்பகலில்

அனுமதியில்லாமல்

தன் அழுக்கு மூட்டைக்குள்

நுழைந்த சூரியன் மீது

நிழலை அள்ளி வீசி எறிந்து

கடுஞ்சினம்கொண்டவள்

ஆற்றாமையின் வலிகளோடு

வாழ்வை இந்தத் தெருக்களில்

நடந்தே கடத்துகிறாள்

பின் வாஞ்சையோடு சூரியனைக் கூட்டிக்கொண்டு

மேற்கு நோக்கி

நடக்கத் தொடங்கியிருந்தாள்.

  -  நிலாகண்ணன் 

முன்னேர்

வீட்டிற்கும் களத்திற்கும்

இடைவெளி வெகு தூரமில்லை

மண் சாலையை பொன்னிறகால்

போத்தியதுபோல இருக்கும்

சிதறிகிடக்கும் வைக்கோல்கள்

எடுத்துச் சேகரித்தால்

பசுவிற்கு ஒரு மாதத்துக்கான உணவாகும்

கடந்து செல்லும் உழவர்களின்

காலடியோசை கேட்டு பறக்காத

நெல்மணி பொறுக்கும் குருவிகள்

விருந்தினர் வீட்டில் உண்பதுபோல்...

இல்லை என்று சொல்லாமல்

உதவியவர்கள் எல்லாம் வறுமையால்

இடுகாட்டில் தஞ்சம்...

எல்லாமும் மாறிவிட்டது

எங்களூரில்...

போக்குவரத்துக்காகப்

போடப்பட்ட தார்சாலைதான்

அநேகமாக விவசாயத்துக்குக் காட்டப்பட்ட

முதல் கறுப்புக்கொடியாக இருக்கலாம்.

 - அ.கோ.விஜயபாலன் 

அகாலவேளை ஞானம் 

ஸ்டான்லி குப்ரிக்

ஒரு சாயலில் அல்டிமேட் ஸ்டாரேதான்

என அடித்துப் பேசினார்

செல்கடை சித்தப்பு

கொஞ்சம் உருட்டி முழித்தபின்

அர்விந்த் சுவாமி மாதிரியும் தெரியுது

என்று சறுக்கினார்

கொஞ்சமே கொஞ்சம் போதை கிறக்க

லோலிட்டா நபாக்கோவ்தான்

க்ளாக்வொர்க் ஆரஞ்ச் ஆண்டனி பர்கஸ்தான்

ஆண்டனிதான் பாட்ஷாதான்

என்று அகாலவேளை ஞானம் வழிந்து

விக்கிப்பீடியாவையே திக்கித் திணறடித்தார்

மறுநாள் மேட்னிஷோவில்

கையில் இடைத்தீனியுடன் அமர்ந்து

முத்துக்கு முத்தாக

சொத்துக்குச் சொத்தாகவென

மூக்கை சிந்திக்கொண்டிருந்தார்.                                                      

 - சச்சின்