Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்
தலையங்கம்

‘விகடன் தடம்’ எனும் புதிய முயற்சிக்கு தமிழ் மக்கள் தந்திருக்கும் மகத்தான வரவேற்புக்குத் தலை வணங்குகிறோம். சாத்தியமுள்ள அனைத்து தகவல் தொடர்புசாதனங்கள் வழியாக வாழ்த்துகளை, பாராட்டுகளை, விமர்சனங்களைப் பகிர்ந்த ஒவ்வொருவருக்கும் அன்பும் நன்றியும்.
தமிழ் கலை, இலக்கிய, பண்பாட்டு வெளியில் அறம் தவறாத சுதந்திரமான நடையில் தடம் பதித்துச் செல்லவே விரும்புகிறோம்.

தலையங்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாட்டார் ஆய்வாளர் தொ.பரமசிவனின் நேர்காணல், மண்ணின் கவிஞன் மு.சுயம்புலிங்கம் கவிதைகள் குறித்த லிபி ஆரண்யாவின் பார்வை, நவீன வாழ்வியலில் தமிழ் மொழியின் யதார்த்த இருத்தலையும் அடையவேண்டிய மாற்றங்களையும் பேசும் மகுடேசுவரனின் முன்வைப்பு, இந்தியத்துவம் எனும் ஒற்றைக் கலாசார உருவாக்கத்தில் தமிழ் எதிர்கொள்ளும் மொழியரசியலைப் பேசும் சுகுணா திவாகரின் கட்டுரை, தமிழ் வெளியில் ஓவியம் சிற்பம் போன்ற நுண் கலைகளின் வரலாற்றுச் சாதனைகள் குறித்த சி.மோகனின் வரைவு, ‘போக்கிரி’ என்ற சொல்லுக்குப் பின்னே சு.வெங்கடேசன் அகழ்ந்துகாட்டும் ரத்தக்கவிச்சி மிக்க வரலாறு, ‘பல்கலைக்கழகம் என்றால்?’ விளக்கும் அ.மார்க்ஸின் கட்டுரை, திருவண்ணாமலை கலை இலக்கியச் செயல்பாடுகளில் தன் நினைவுகளை விரிக்கும் பவா செல்லதுரையின் பதிவு, அ.முத்துலிங்கம், குட்டி ரேவதி இருவரின் சிறுகதைகள், புதிய அனுபவத்துக்குள் தள்ளும் கவிதைகள் என இவ்விதழ் உங்களுக்கு இன்னும் நெருக்கமானதாக இருக்கும்.

இனிதான பயணம் தொடர...

இணைந்து  தடம் பதிப்போம்.

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism