சே குவேரா, இறுதியில் விடுதலையாகிறார்!

பொலிவியக் காடுகளில் மறைந்து வாழ்ந்த சே குவேரா

இப்போதெல்லாம் சர்வசாதாரணமாக எம் மாநகரத்தில் தென்படுகிறார்.

மதுபானக்கடையில் இருந்து வெளியே வரும்போது

வியர்வையில் நசநசத்துத் தள்ளாடியபடி வரும் அவர்

'ஏய்... ரெட் டீ ஷர்ட் நாயே, சொல்லிட்டு வந்துட்டியா?' எனும்

தன்னைக் குறித்த காரோட்டியின் வசவுகளை

வழக்கமான புன்னகையுடன் கடந்து செல்கிறார்.

பெட்டிக்கடையில் நின்று அவன் புகைக்கையில்

ட்ரேட் மார்க் சுருட்டோடு உடனிருக்கும் அவர்

ஹெல்மெட் அணிந்து பைக்கில் விரைகையில்

எதிர்க்காற்றில் நெஞ்சோடு ஒட்டிக்கொள்கிறார்.

ஒரு குறுகிய சாலையில் இளம்பெண்ணின்

கழுத்துச் சங்கிலியை அவன் களவாட முயல்கையில்

சற்றே பதற்றமடைந்து,

சங்கிலியை ஒரு கையால் பற்றியபடி

அவள் மறுகையால் பிடித்திழுத்ததில் கிழிந்து

அவள் கைக்குள் சென்றுவிட்ட சே குவேரா

இப்போது விட்டு விடுதலையாகிச் சிரிக்கிறார்!

- சேயோன் யாழ்வேந்தன்

அடுப்பங்கரைக் கண்ணீர்

ருசியாகச் சாப்பிட்டுப் பழகிய நாக்கு

ருசியற்ற நாட்களில்

தடித்த வார்த்தைகளை உதிர்க்கிறது

முள்ளென மாறி

எதிரில் இருப்போரைக் குத்துகிறது

நிர்வாண வார்த்தைகளைத் துப்பி ரசிக்கிறது

ருத்ரதாண்டவம் ஆடுகிறது

அசிங்க முகம் காட்டுகிறது

இதே கைகள் ஆக்கிப்போட்ட

ஆனந்த ருசிகளை மறந்துவிடுகிறது

கடைசியில்

எல்லாவற்றையும் தண்ணீரால் கழுவிக்கொண்டு

எதுவும் தெரியாமல் நகர்ந்துவிடுகிறது

அடுப்பங்கரையில் பெய்யும் மழையில்

நனையாமல்!

- சௌவி

அவர்களுக்கும் பெயர் உண்டு!

செந்தில்நாதன்

வேலைக்குச் சேர வந்திருந்தார்

செந்தில்நாதனை

அவர்தான் செந்தில்நாதன்

என நிரூபணம் செய்ய

அடையாள அட்டை கேட்டார்கள்

அதில்

செந்தில்நாதன் என்றே இருந்தது

இப்போது வருகைப் பதிவேட்டிலும்

செந்தில்நாதன் என்றுதான்

ஒப்பம் இடுகிறார்.

அந்த செந்தில்நாதனை எனக்குத் தெரியும்

அவரைப் போல் வேறொரு செந்தில்நாதனை

உங்களுக்கும் தெரியும்.

ரொம்பவே யோசிக்க வேண்டாம்

உங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில்

நேற்று பேசத் தொடங்கிய

குழந்தை முதல் எல்லோரும்...

'வாட்ச்மேன்...' எனக்

கத்திக் கூப்பாடு இடுகிறீர்களே,

அவர் ஓடிவரும்போது பாருங்கள்.

சட்டையில்...

செந்தில்நாதன் என்ற வில்லை

வலியோடு ஒட்டிக்கிடக்கலாம்.

- ராம் வசந்த்

சே குவேரா, இறுதியில் விடுதலையாகிறார்!

பொலிவியக் காடுகளில் மறைந்து வாழ்ந்த சே குவேரா

இப்போதெல்லாம் சர்வசாதாரணமாக எம் மாநகரத்தில் தென்படுகிறார்.

மதுபானக்கடையில் இருந்து வெளியே வரும்போது

வியர்வையில் நசநசத்துத் தள்ளாடியபடி வரும் அவர்

'ஏய்... ரெட் டீ ஷர்ட் நாயே, சொல்லிட்டு வந்துட்டியா?' எனும்

தன்னைக் குறித்த காரோட்டியின் வசவுகளை

வழக்கமான புன்னகையுடன் கடந்து செல்கிறார்.

பெட்டிக்கடையில் நின்று அவன் புகைக்கையில்

ட்ரேட் மார்க் சுருட்டோடு உடனிருக்கும் அவர்

ஹெல்மெட் அணிந்து பைக்கில் விரைகையில்

எதிர்க்காற்றில் நெஞ்சோடு ஒட்டிக்கொள்கிறார்.

ஒரு குறுகிய சாலையில் இளம்பெண்ணின்

கழுத்துச் சங்கிலியை அவன் களவாட முயல்கையில்

சற்றே பதற்றமடைந்து,

சங்கிலியை ஒரு கையால் பற்றியபடி

அவள் மறுகையால் பிடித்திழுத்ததில் கிழிந்து

அவள் கைக்குள் சென்றுவிட்ட சே குவேரா

இப்போது விட்டு விடுதலையாகிச் சிரிக்கிறார்!

- சேயோன் யாழ்வேந்தன்

அடுப்பங்கரைக் கண்ணீர்

ருசியாகச் சாப்பிட்டுப் பழகிய நாக்கு

ருசியற்ற நாட்களில்

தடித்த வார்த்தைகளை உதிர்க்கிறது

முள்ளென மாறி

எதிரில் இருப்போரைக் குத்துகிறது

நிர்வாண வார்த்தைகளைத் துப்பி ரசிக்கிறது

ருத்ரதாண்டவம் ஆடுகிறது

அசிங்க முகம் காட்டுகிறது

இதே கைகள் ஆக்கிப்போட்ட

ஆனந்த ருசிகளை மறந்துவிடுகிறது

கடைசியில்

எல்லாவற்றையும் தண்ணீரால் கழுவிக்கொண்டு

எதுவும் தெரியாமல் நகர்ந்துவிடுகிறது

அடுப்பங்கரையில் பெய்யும் மழையில்

நனையாமல்!

- சௌவி

அவர்களுக்கும் பெயர் உண்டு!

செந்தில்நாதன்

வேலைக்குச் சேர வந்திருந்தார்

செந்தில்நாதனை

அவர்தான் செந்தில்நாதன்

என நிரூபணம் செய்ய

அடையாள அட்டை கேட்டார்கள்

அதில்

செந்தில்நாதன் என்றே இருந்தது

இப்போது வருகைப் பதிவேட்டிலும்

செந்தில்நாதன் என்றுதான்

ஒப்பம் இடுகிறார்.

அந்த செந்தில்நாதனை எனக்குத் தெரியும்

அவரைப் போல் வேறொரு செந்தில்நாதனை

உங்களுக்கும் தெரியும்.

ரொம்பவே யோசிக்க வேண்டாம்

உங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில்

நேற்று பேசத் தொடங்கிய

குழந்தை முதல் எல்லோரும்...

'வாட்ச்மேன்...' எனக்

கத்திக் கூப்பாடு இடுகிறீர்களே,

அவர் ஓடிவரும்போது பாருங்கள்.

சட்டையில்...

செந்தில்நாதன் என்ற வில்லை

வலியோடு ஒட்டிக்கிடக்கலாம்.

- ராம் வசந்த்