Published:Updated:

பறவையே வாழ்ந்திருக்கலாம்!

கவிதை: இளம்பிறை

பிரீமியம் ஸ்டோரி
பறவையே வாழ்ந்திருக்கலாம்!

ண்டாக கால் குடையும் 

வலிபொறுக்க முடியாது

கண்மூடிக் கிடக்கிறேன்.

உறங்கிவிட்டேன் எனப்

பேசிக்கொள்கிறார்கள் சகோதரிகள்

காலையில் கோலமிடச் சென்றபோது

வாசலில் சிறகொடிந்த

பறவையொன்று செத்துக்கிடந்ததாகவும்

அதன்பின் நான் விபத்துக்குள்ளான

செய்தி வந்ததாகவும் கூறுகிறாள் தங்கை

அந்தப் பறவை எனக்குப் பதிலாக

உயிர்விட்டிருப்பதாகவும்

ஆயுள் எனக்கு கெட்டியென்றும்

தழுதழுத்தக் குரலில் சொல்கிறாள் அக்கா.

சகோதரிகளே...

வெளியெங்கும் பறந்து

விரும்பிய இரையுண்டு

அலகில் குச்சி சுமந்து கட்டிய

ஆசைக் கூட்டில்

காற்றோடு கண்ணுறங்கி

ஒவ்வொரு நாளும்

செங்கதிரில் குளித்து சிறகசைத்திருந்த

அந்தப் பறவையைக் காட்டிலும்

பெரிதாக என்ன வாழ்ந்துவிடப்போகிறேன் நான்

எனக்குப் பதிலாக

பறந்துகொண்டிருந்திருக்கலாம்

அந்தப் பறவையே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு