Published:Updated:

கு.அழகிரிசாமி - தமிழ்ச் சிறுகதைத் தரத்தை இந்திய அளவுக்கு உயர்த்தியவர்..! கதை சொல்லிகளின் கதை பாகம் 18 பார்ட் -2

கு.அழகிரிசாமி - தமிழ்ச் சிறுகதைத் தரத்தை இந்திய அளவுக்கு உயர்த்தியவர்..! கதை சொல்லிகளின் கதை பாகம் 18 பார்ட் -2
News
கு.அழகிரிசாமி - தமிழ்ச் சிறுகதைத் தரத்தை இந்திய அளவுக்கு உயர்த்தியவர்..! கதை சொல்லிகளின் கதை பாகம் 18 பார்ட் -2

கு.அழகிரிசாமி - தமிழ்ச் சிறுகதைத் தரத்தை இந்திய அளவுக்கு உயர்த்தியவர்..! கதை சொல்லிகளின் கதை பாகம் 18 பார்ட் -2

                                                                                                             முந்தைய பாகங்கள்:

பாகம்-2- ஆ.மாதவய்யா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பாகம்-5- மௌனி

பாகம்-6 - கு.பா.ரா

                                                                                                       பாகம்-12- ந. சிதம்பர சுப்ரமணியன்

பாகம் - 13 - எஸ்.வி.வி

பாகம்- 15.1  கல்கி

பாகம்-15.2 கல்கி

                                                                                                                    பாகம்- 16 - ராஜாஜி

                                                                                                                   பாகம் -17- அநுத்தமா

                                                                                                                 பாகம்-18.1- கு.அழகிரிசாமி

கலைமகள் 1959

கு.அழகிரிசாமியின் எல்லாக் கதைகளும் கரிசல் காட்டின் எளிய, பசித்த மனிதர்களைப் பற்றியும் சென்னைவாழ் கீழ், நடுத்தர வர்க்கத்து மனிதர்களைப் பற்றியுமே பேசுபவை. எளிய நேரடியான மொழியில் வட்டார சொற்களையும் கைக்கொண்டு, தன் உலகங்களை வாசக மனதில் கட்டி எழுப்புபவர்.

``வாசகர்களைத் தன் அறிவு மேம்பாட்டில் மருட்டாத, இயல்பான, சினேகமான, தொனி கு.அழகிரிசாமியின் இலக்கியத் தொனி. கு.அழகிரிசாமியின் பாத்திரங்கள் நாமே. நம்மையல்லால் வேறு யாரையும் அவர் எழுதவில்லை. நம்மை நமக்குக் காட்டுவதல்லால் இலக்கியத்தின் பெரிய சாதனைதான் வேறு என்ன?” - என்று பிரபஞ்சன் கூறும்போது பலத்த ஆமோதிப்பை நாம் வெளிப்படுத்துகிறோம்.

உலகமே கொண்டாடும் அழகிரிசாமியின் இன்னொரு கதை `அன்பளிப்பு’ குழந்தைகளின் மன உலகத்தை அழகிரிசாமியைப் போலத் துல்லியமாகப் படம் பிடித்தவர்கள் வேறு யாருமில்லை. ராஜா வந்திருக்கிறார், தம்பி ராமையா, அன்பளிப்பு, இருவர் கண்ட ஒரே கனவு, குமாரபுரம் ஸ்டேஷன் எனப் பல கதைகள் அதற்கு உதாரணம்.அன்பளிப்பு கதையில் வரும் ஏழைச் சிறுவன் சாரங்கனின் பெயரை அன்றைய வாசகர்கள் பலரும் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்தனர். எழுத்தாளர் சுந்தர ராமசாமி தன் பேரனுக்குச் சாரங்கன் என்று பெயர் சூட்டினார்.

``மறுநாள் ஞாயிற்றுக்கிழமைதானே என்று,  இரவு வெகுநேரம் கண்விழித்துப் படித்துக் கொண்டிருந்து விட்டேன். சனிக்கிழமை இரவு படுத்துக் கொள்ளும்போது மணி இரண்டிருக்கும். எவ்வளவு கால தாமதமாகித் தூங்கப் போனாலும், தூக்கம் வருவதற்கு மேற்கொண்டு ஒரு அரைமணி நேரமாவது எனக்கு ஆகும். எனவே இரண்டரைக்குத்தான் தூங்க ஆரம்பித்திருப்பேன். சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கும்போது, முதுகில் நாலைந்து கைகள் வந்து பலமாக அடிக்க ஆரம்பித்து விட்டன. அடிகளால் ஏற்பட்ட வலியை விட, அவற்றால் ஏற்பட்ட ஓசை மிகப் பெரியதாக இருந்தது. தூக்கம் கலைந்து கண் விழிப்பதற்குள், வலதுபுஜத்தில் எறும்பு கடிப்பதுபோல இருந்தது.

``தூங்குமூஞ்சி மாமா!….’’

``மணி ஏழரையாகிவிட்டது….”

``எழுந்திருக்கிறீர்களா, பலமாகக் கிள்ளவா”

``முகத்தில் ஜலத்தைக் கொண்டுவந்து தெளித்துவிடுவோம். இன்னும் இரண்டு நிமிஷத்துக்குள்  எழுந்துவிட வேண்டும்...” 

இப்படியே பல குரல்கள் பேசிக் கொண்டிருந்தன. பேச்சின் நடுவே இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து `சிரிடா சிரி’ என்று சிரித்தார்கள். கண் விழித்துவிட்டேன்.

``யார் அது? உம்! இதோ வருகிறேன். தூக்கத்திலே வந்து….” என்று அதட்டிக்கொண்டே எழுந்து உட்கார்ந்தேன். ஒரு பையனைத் தவிர, அதாவது சாரங்கராஜனைத் தவிர, மற்ற எல்லாக் குழந்தைகளும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

``கடிகாரத்தைப் பாருங்கோ மாமா. மணி எட்டு ஆகப் போகிறது. இன்னும் தூங்கு மூஞ்சி மாதிரி தூங்கிக் கொண்டு…” - என்று சொல்லி விட்டுச் சிரித்தாள் சித்ரா. ``அது இருக்கட்டும், விடிந்ததும் எங்கே இப்படிப் பட்டாள ‘மார்ச்’ பண்ண ஆரம்பித்துவிட்டது?” என்று கேட்டேன்.

``இரவில் வெகு நேரம் கண் விழித்தால் உடம்புக்குக் கெடுதல் என்று எங்கள் பாடப் புத்தகத்தில் போட்டிருக்கிறது, மாமா’’ என்றான், இதுவரையில் மௌனமாக இருந்த சாரங்கராஜன்.

``நான் படித்த பாடப் புத்தகத்திலும் அப்படித்தான் போட்டிருந்தது! என்ன செய்வது?” என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஆனால், சிறுவன் சாரங்கனிடம் அவ்விதம் சொல்லாமல், ``நாளை முதல் சீக்கிரமாகவே தூங்கி விடுகிறேன். கண் விழிக்கவில்லை” என்றேன். அவனுக்குப் பரம சந்தோஷம், அவன் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டதற்காக...

மறு நிமிஷத்தில், எல்லோருமாகச் சேர்ந்து ஒருமிக்க, ``என்ன புத்தகம் கொண்டு வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.

``ஒரு புத்தகமும் கொண்டு வரவில்லை!”

``பொய், பொய், சும்மா சொல்கிறீர்கள்!”

``நிஜமாக, ஒரு புத்தகமும் கொண்டு வரவில்லை”

``நேற்று புத்தகம் கொண்டு வருவதாகச் சொன்னீர்களே!”

``நேற்றுச் சொன்னேன்…”

``அப்புறம் ஏன் கொண்டு வரவில்லை?”

``புத்தகங்கள் ஒன்றும் வரவில்லை. வந்திருந்தால்தான் கொண்டு வந்திருப்பேனே.”

``பிருந்தா... மாமா பொய் சொல்கிறார்; கொண்டு வந்து எங்கேயாவது ஒளித்து வைத்திருப்பார். வாருங்கள், தேடிப் பார்க்கலாம்” என்றாள் சித்ரா.

அவ்வளவுதான், என்னுடைய அறை முழுவதும் திமிலோகப் பட்டது. ஒரே களேபரம். சித்ரா மேஜையைத் திறந்து உள்ளே கிடக்கும் பெரிய காகிதங்களையும், துண்டுக் காகிதங்களையும், கடிதங்களையும் எடுத்து வெளியே எறிந்தாள். துழாவித் துழாவிப் பார்த்தாள். மேஜையில் புத்தகம் எதுவும் இல்லாது போகவே, அதிலிருந்து சாவிக்கொத்தை எடுத்துப் பெட்டியைத் திறந்து தேட ஆரம்பித்துவிட்டாள்.

பிருந்தாவும், சுந்தரராஜனும் பீரோவைத் திறந்து புத்தகங்களை எடுத்துக் கண்டபடி கீழே போட்டார்கள்.

சின்னஞ் சிறு குழந்தையான கீதா கீழே உட்கார்ந்து, இறைந்து கிடக்கும் ஆங்கிலப் புத்தகங்களை அர்த்தமில்லாமல் திறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

சித்ரா பெட்டியில் உள்ள சலவைத் துணிகளை எடுத்து வெளியே போட்டாள். என்னுடைய பழைய டைரிகள், எனக்கு வந்த பழைய கடிதங்கள், இரண்டொரு புத்தகங்கள் – எல்லாம் ஒரே குப்பையாக வந்து வெளியே விழுந்தன.

பீரோவைச் சோதனை போட்ட பிருந்தாவும் சுந்தரராஜனும் ஜன்னல்களில் அடுக்கியிருந்த புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கீழே போட்டார்கள்.

சாரங்கன் ஒருவன்தான் என்னோடு அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன் எப்பொழுதுமே குறும்பு பண்ணமாட்டான்; விளையாட மாட்டான். மற்றக் குழந்தைகள் எல்லோரும் ஒரு விதம்; அவன் ஒருவிதம். என்னிடத்தில் பயபக்தியோடு நடந்து கொள்ளும் சிறுவன் அவன் ஒருவன்தான்.

ஜன்னலில் இருந்த புத்தகங்கள் ஒவ்வொன்றாக வந்து விழும் போது, ஒரே சந்தடியும் இரைச்சலுமாய்ப் போய் விடவே, சமையற் கட்டிலிருந்து என் தாயார் ஓடிவந்தார்கள்.”

எப்போதும் மற்ற குழந்தைகளுக்கெல்லாம் பரிசும் புத்தகங்களும் கொடுக்கும் இவர் சாரங்கனுக்கு ஏதும் தருவதில்லை.அவன் கொஞ்சம் பெரிய பையன் என்பதாலோ என்னவோ! அவனுடைய வீட்டுக்குப் போய் சாப்பிட்டதும் இல்லை. மிகவும் ஏழைக்குடும்பம்.உபசரிக்க முடியாத கஷ்டத்தை அவர்களுக்குக் கொடுக்கக் கூடாதல்லவா? ஆனாலும், குழந்தைகள், குழந்தைகள் தாமே. சாரங்கன் ஒருநாள் இவரைக் கைப்பிடியாக தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான். உப்புமாவும் காப்பியும் கொண்டு வந்து வைக்கிறான்.

`இந்தப் பையனுக்கு எதற்கு என் மேல் இவ்வளவு அன்பு? இவன் அன்பு என்னைத் திணறடிக்கிறதே! இது தாங்கமுடியாத அன்பு! தாங்க முடியாத பேதைமை! இரண்டும் சேர்ந்து என்னை குரங்காட்டம் ஆட்டுகின்றன. ஆனால், இவனைக் கோபிக்கக் கூடாது. இவன் இப்போது எனக்குக் கொடுக்கும் தொந்தரவே இவனுடைய அன்பை அளந்து காட்டுகிறது. ஏதோ ஒரு நாள் என்னைக் கஷ்டப்படுத்துவதனாலாவது, இவன் திருப்தியடையட்டும். என்னுடைய முயற்சி எதுவும் இல்லாமல், என்னால் மட்டுமே ஓர் உயிர் சந்தோஷமும், திருப்தியும் கொள்ள முடிகிறது என்றால், அதை எந்தச் சமயத்திலும் தடுக்கக் கூடாது. தடுக்க முயலுவது அமானுஷிகம்’ என்று எண்ணித் தேற்றிக்கொண்டேன்.

சாரங்கன் வெளியே வந்தான். மேஜையைத் திறந்து ஒரு பவுண்டன் பேனாவை எடுத்தான். என் முகத்துக்கு எதிரில் நிற்காமல் என் முதுகுப் புறமாக வந்து நின்று கொண்டான். அங்கே நின்ற வாக்கிலேயே, நான் கையில் வைத்திருந்த சரித்திரப் புத்தகத்தை மெதுவாகப் பிடித்து இழுத்துத் தூரத்தில் வைத்தான். தூங்கும் குழந்தையின் கையிலிருக்கும் கிலுகிலுப்பையை எவ்வளவு ஜாக்கிரதையாகத் தனியே எடுத்து அப்புறப்படுத்துகிறோமோ, அது போல அதை அப்புறப்படுத்தினான். பிறகு அவன் வலது கையால் தன் கால் சட்டையின் பையில் கையை விட்டு எதையோ எடுப்பதுபோல் எனக்கு ஜாடையாகத் தெரிந்தது. அதை என் முன்பாக மேஜைமேல் வைத்தான்.

அது ஒரு டைரி. நான் சுந்தரராஜனுக்கும், சித்ராவுக்கும் அன்பளிப்பாகக் கொடுத்த டைரிகளைப் போன்ற ஒரு டைரி. அதே கம்பெனியில் செய்தது. அதே நிறமுடையது. `அப்புறம் எழுதுங்க’ என்றான்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ``என்ன எழுத...” என்று கேட்டேன்.

``என் பிரியமுள்ள சாரங்கனுக்கு அன்பளிப்பு” என்று எழுதுங்கள்.

குழந்தைகளிடம் பேதம் காட்டக்கூடாது என்பதை மட்டுமின்றி, குழந்தமையின் சகல பரிணாமங்களையும், ஏழ்மையை அவர்கள் எதிர்கொள்ளும் துயரத்தையும் இக்கதை நம்முன் விரிக்கின்றது.

வர்க்கப் போராட்டத்தை அழகியல் குறையாமல் கலையுணர்ச்சி ததும்பத் தமிழில் எழுதிய முதல் படைப்பாளியும் அழகிரிசாமிதான். அவரது `வெறும் நாய்’  என்கிற கதையே அது. ஒரு பணக்கார டாக்டர் வீட்டில் ஒரு நல்ல ஜாதி நாயை வளர்த்தார். அந்த நாய்க்கும் தெருவில் போகும் ஒரு பேரும் இல்லாத நல்ல ஜாதி நாயாகவும் இல்லாத `வெறும் நாய்’க்கும் பகை. அந்த வெறும் நாய் டாக்டர் வீட்டுக் கேட்டுக்கு முன்னால் ரோட்டில் போனாலே இந்தப் பணக்கார நாய் பாய்ந்து பாய்ந்து குரைக்கும். எத்தனை நாள்தான் நம்ம வெறும் நாயும் பொறுமை காக்கும்? ஒருநாள் வசம்மாகப் பணக்கார நாயைக் கடித்துக் குதறி விட்ட்து. டாக்டருக்குக் கோபம் வந்து ஒரு கல்லை எடுத்து எறிந்தார். வெறும் நாயிடம் நடக்குமா? அது தப்பி ஓடி விட்டது.

டாக்டர் வீட்டுக்குப் பின்புறம் கூலித்தொழிலாளி முனியசாமியும், அவன் மனைவியும் வசித்து வந்தார்கள். அவர்களின் குடிசைக்குத்தான் வெறும் நாய் சோத்துக்காகப் போய் நிற்கும். மிஞ்சின அன்றைக்கு நாய்க்குச் சோறு கிடைக்கும். முனியனைக் கூப்பிட்டு டாக்டர் `ஒழுங்கா உன் நாயை அடக்கி வை இல்லேன்னா சுட்டுவிடுவேன்’ என்று மிரட்டிக்கொண்டே இருந்தார். அவன் எவ்வளவோ சமாதானமாகப் பேசியும் டாக்டரின் கோபம் அடங்கவில்லை. இந்தப்பகை முற்றி ஒருநாள் டாக்டரும் வெறும் நாயும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. முனியனைப்போல சமாதானம் பேச அது என்ன மனுசனா, நாயல்லவா? டாக்டரை முழங்காலுக்குக் கீழே கடித்துக் குதறி இழுத்து விட்டது.

அன்று இரவு முனியனின் மனைவி வெறும் நாய்க்கு வயிறாரச் சோறு போடுவாள். மனைவி தூங்கியபிறகு முனியன் எழுந்து போய் நாயை வாஞ்சையுடன் தடவிக்கொடுப்பான்..

``மனுஷனுக்குத்தான் ஜாதிப்புத்தி போகுமென்றால் நாய்க்கும் போய் விடுமா?”

என்ற வரியுடன் கதை முடியும். ஒரு தெளிவான அறிக்கை அது, அல்லவா?

கு.அழகிரிசாமியும், கி.ராவும் அன்றைய கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தது அவர்களுடைய கடிதங்களில் உள்ள குறிப்புகளின் வழி தெரிய வருகிறது. மிகப்பெரிய இசை ரசிகரான அழகிரிசாமி மலேசியாவில் வாழ்ந்த காலத்தில் இசைக்கலைஞரும் இவரது கதைகளின் ஆழ்ந்த வாசகருமான சீதாலட்சுமி அம்மாவை மணந்து கொண்டார். அவர்களின் காதல் வாழ்வின் கனிகளாக மூன்று குழந்தைகள் பிறந்தன. இறுதியாக அவர் சோவியத் நாடு இதழில் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால் அதிக காலம் பணி செய்ய முடியாமல் அவர் வாழ்வு முடிந்தது. அவருடைய `அன்பளிப்பு’ சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. ஆனால், அதைப் பெற்றுக்கொள்ள அவர் உயிருடன் இருக்கவில்லை. கு.அழகிரிசாமியின் கதைகளை வாசிக்காதவர்கள் தமிழ் வாழ்வின் அதி அற்புதமான தருணங்களை இழந்தவர்களாவார்கள்.