Published:Updated:

உஷா கிருஷ்ணன்

உஷா கிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
உஷா கிருஷ்ணன்

முகங்கள்

உஷா கிருஷ்ணன்

முகங்கள்

Published:Updated:
உஷா கிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
உஷா கிருஷ்ணன்
உஷா கிருஷ்ணன்

ஷா கிருஷ்ணன் - திரைப்பட இயக்குநர். ‘மெட்ராஸ்’ கலையரசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ராஜா மந்திரி’ திரைப்படத்தின் இயக்குநர். இரட்டை அர்த்த வசனங்கள், பெண்களைப் பற்றிய கிண்டல்கள், விமர்சனங்கள் இல்லாமல் குடும்பத்தோடு சென்று பார்க்கும் திரைப்படத்தைக் கொடுத்ததற்காகப் பாராட்டுகள் குவிந்துகொண்டி ருக்கும் ஒரு மாலைப்பொழுதில் அவரிடம் பேசினோம்.

‘‘உங்களின் குடும்பப் பின்னணி, சினிமா மீதான ஆர்வம் பற்றிச் சொல்லுங்களேன்?’’

‘‘என் சொந்த ஊர் சிதம்பரம் பக்கத்துல ஒரு கிராமம். ஊர்ல ஸ்கூல் படிச்சுட்டு இருக்கறப்போ என்னவாகப் போறோம்னு பெரிசா கனவு இல்லை. ஆனா, எங்க அப்பாதான் நான் நல்லா படிச்சு டாக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டாரு. அதுக்கு அப்புறம் பி.எஸ்சி பயோ டெக்னாலஜி படிச்சேன். இரண்டாவது ஆண்டு படித்தபோது அப்பா தவறிட்டாரு. கல்லூரி நாட்கள்ல எனக்கு நாடகம் மீது ஓர் ஆர்வம் பிறந்தது. அதே மாதிரி நான் பண்ணுன நாடகங்கள் எல்லோருக்கும் பிடிக்க ஆரம்பிச்சது. அதுக்கு அப்புறம் மீடியா பக்கம் போகணும்னு முடிவு பண்ணி முதுகலை ஊடகவியல் படிச்சேன். அந்தச் சமயத்துல எங்க கல்லூரிக்கு நாடக எழுத்தாளர்கள், சினிமா சம்பந்தப்பட்ட ஆட்கள் சிறப்பு அழைப்பாளர்களா வருவாங்க. அவங்களோட அறிமுகம்தான் எனக்கு சினிமாவை அறிமுகப்படுத்தியது. அப்படி நண்பர் ஆனவர்தான் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி. அவர் மூலமா இயக்குநர் மகேந்திரன்கிட்ட உதவி இயக்குநராகும் வாய்ப்புக் கிடைத்தது. அதுக்கு அப்புறம் ‘நாதஸ்வரம்’ தொடர்ல வேலை பார்த்தேன். எல்லோர் வீட்லேயும் இருக்கிற மாதிரி நான் சினிமாவுலச் சேரப்போறேன்னு சொன்னதும் எங்க வீட்லயும் எதிர்ப்பு இருந்துச்சு. அவங்ககிட்ட எடுத்துச்சொல்லி சம்மதிக்கவெச்சேன். இப்போ அவங்க மட்டுமில்லாம எல்லோரும் என்னை ஓர் இயக்குநரா அங்கீகரிச்சு இருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு.’’

‘‘திரைப்பட இயக்குநர் என்கிற வார்த்தைக்குப் பின்னால் இருக்கக்கூடிய உங்களது பயண அனுபவம் எப்படியானது?’’

‘‘சினிமாதான் இலக்குனு முடிவு பண்ணினதும் அதுக்கான வாய்ப்புகளைத் தேடிப்போக ஆரம்பிச்சேன். சில இயக்குநர்களிடம் நான் போய் உதவி இயக்குநர் வாய்ப்புக் கேட்டப்போ ரொம்ப யோசிச்சாங்க. அதுக்கு அவங்க சொன்ன காரணங்கள் என்னை ரொம்பக் கஷ்டப்படுத்தியது. அதுதான் என்னோட இலக்கை நோக்கி உறுதியாப் பயணிக்கவும்வெச்சது. சுசீந்திரன் சார்கிட்ட உதவி இயக்குநரா ‘ஜீவா’, ‘பாண்டிய நாடு’ படங்கள்ல வேலை பார்த்தப்போ நிறைய விஷயங்களைக் கத்துக்க முடிஞ்சது. பெண் அப்படின்னா ரொம்பவே யோசிச்சவங்க இருக்கறப்போ, வேலைக்குச் சேர்ந்த முதல்நாள்லயே எனக்கு முக்கியமான வேலைகளைக் கொடுத்து என்னை உற்சாகப்படுத்தினாரு சுசீந்திரன். சினிமாங்கறது பாலினம் சம்பந்தப்பட்டது கிடையாது. சின்னச்சின்ன விஷயங்களில்கூட பெண்ணுங்கறதுனால  சில வித்தியாசங்கள் சினிமாவிலேயும் இருக்கு. வாடகைக்கு வீடு பாக்குறதுல இருந்து, டிஸ்கஷன் பண்ற இடம்வரைக்கும் அந்தப் பிரச்னைகளை நான் சந்தித்து இருக்கிறேன். இதுனாலகூட பெண்கள் படைப்பாளிகளாக உருவெடுப்பதில் சிக்கல்கள் இருப்பதாக உணர்கிறேன்.’’

‘‘திரை உலகில் பெண்களுக்கு என்னென்ன சிக்கல்கள் இருப்பதாக உணர்கிறீர்கள்?’’

உஷா கிருஷ்ணன்

‘‘சினிமா ஆண், பெண் எல்லோருக்கும் பொதுவானது.  அதில் ஆண்களைக் குறிப்பிடறப்போ யாரும் ஆண் இயக்குநர்னு சொல்றதில்லை. அதுவே, பெண்ணுங்கறப்போ மட்டும் பெண் இயக்குநர்னு சொல்றாங்க. இந்த விஷயத்துல இருந்து மாற்றம் வரணும். பெண்களும் ஒரு விஷயத்தை உருவாக்க முடியும். அது எல்லோருக்கும் தெரியும். ஆனா, இங்கே அதை ஏத்துக்கிறதுக்கான பக்குவம் இல்லை. எங்களுக்கான வாய்ப்புகளைக் கொடுக்க வேண்டாம். ஆனால், எங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைத் தடுக்காமல் இருந்தாலே போதும். இன்னமும் நிறையப் பெண்கள் சாதிக்க முடியும் என்பதைத்தான் என்னுடைய அனுபவம் காட்டி இருக்கிறது.’’

- மா.அ.மோகன் பிரபாகரன்