Published:Updated:

தந்தைமை

தந்தைமை
பிரீமியம் ஸ்டோரி
தந்தைமை

கவிதை: பா.திருச்செந்தாழை, ஓவியம்: செந்தில்

தந்தைமை

கவிதை: பா.திருச்செந்தாழை, ஓவியம்: செந்தில்

Published:Updated:
தந்தைமை
பிரீமியம் ஸ்டோரி
தந்தைமை
தந்தைமை

றந்துவிட்ட அடுப்பங்கரை வேலையொன்றின் 

ஞாபகம் வந்தவள் பாலருந்தியபடி உறங்கிவிட்ட

சிசுவைத் தன்னிலிருந்து விலக்குகிறாள்

மிகச் சிறிய பூவைக் காம்பிலிருந்து பிரிப்பதுபோல

உறங்கும் சிசுவின் முகமோ நீருக்குள் கூழாங்கல்

பால்துளி படிந்த அதன் சிறு உதடுகள்

இன்னமும் குவிந்தபடி காற்றைச் சப்புகின்றன

உருண்டையான பிரபஞ்சமோ கடவுளின் மார்பெனக் கனிகிறது

மனம்பொறாத சிசுவின் தகப்பன்

மிக மெதுவாக தன் கட்டைவிரலை

அதன் உதடுகளுக்குத் தருகிறான்

மிருதுவான இளஞ்சூட்டுடன் அவ்வுதடுகள்

சிகரெட் வாடையெழும் அவ்விரலை கடவுளெனப் பற்றுகின்றன

உறங்கியபடி இவன் விரல் சூம்பும் சிசு

காருண்யத்தைப் பருகுகிறது...

விடிவிளக்கின் வெளிச்சத்தில்

மெள்ள கண் கலங்கும் தகப்பனின்

பாலினம் கரைகிறது மெள்ள மெள்ள.