தொழில்நுட்பம்
``நான் இயக்கிய படத்தின் டீஸரை, நெட்டில் இத்தனை லட்சம் பேர் பார்த்திருங்காங்களேன்னு நினைச்சா சந்தோஷமாகத்தான் இருக்கு. ஆனா, இதே மாதிரி முழுப் படத்தையும் நெட்லயே பார்த்துட்டாங்கன்னா?'' - வருத்தப்பட்டார் இயக்குநர்.
- சதிஷ்
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கொலைத் திட்டம்
``ஜனங்க நடமாட்டம் அதிகமா இருக்கிற ஸ்பாட்டில் வெச்சுப் போட்டுத்தள்ளுங்க. அப்பத்தான் யாரும் கண்டுக்க மாட்டாங்க'' என்று அடியாட்களுக்கு, அறிவுரை வழங்கினான் கூலிப்படைத் தலைவன்.
- ரவி குமார்
ரியல் ஃபைட்
``என்னைய்யா சண்டபோடுறான்... கொஞ்சம்கூட ரியலாவே இல்லை!” - டூப் நடிகரைத் திட்டினார் ஒரிஜினல் நடிகர்.
- அபிசேக் மியாவ்
வருத்தம்
ஃபேன்சி எண் வாங்கியதற்காக வருந்தினான், ஆக்ஸிடன்ட் செய்துவிட்டுத் தப்பியபோது.
- வீ.விஷ்ணுகுமார்
டிஜிட்டல் அம்மா
வாட்ஸ்அப் வீடியோக்களைக் காண்பித்து, குழந்தைக்கு சாதம் ஊட்டுகிறாள் அம்மா!
- கட்டுமாவடி கவி கண்மணி
நட்பு
``நீ எனக்கு ஃப்ரெண்ட்... இந்தா வாழைப்பழம். பிச்சையெடுக்கக் கூடாது சரியா?'' - குழந்தை சொன்னதும் தலையாட்டியது யானை.
- திருமாளம் எஸ்.பழனிவேல்

ஜாமீன்
சாமியார் ஆசீர்வாதம் வழங்கினார், தன்னை ஜாமீனில் எடுக்க வந்தவர்களை!
- சி.சாமிநாதன்
டைட்டில்
``படத்தோட டைட்டில் `குமாரும் இந்துவும் சேர்ந்து சுத்தினவங்க' '' என்ற அசிஸ்டென்ட் டைரக்டர் மகேஷ், ``சுருக்குனா KISS-னு வரும் சார்'' என்றான்.
- ராஜி ராம்

சமாதான செல்ஃபி
``உனக்கும் உன் மாமியாருக்கும் சண்டையாமே?'' என்று கேட்டவர்களின் வாயை அடைக்க, மாமியாருடன் செல்ஃபி எடுத்து அப்லோட் செய்தாள் அமுதா.
- ராம் ஆதிநாராயணன்
ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்
முதல் நாள் வகுப்பில் பேராசிரியை உள்ளே நுழைந்ததும் ``அவங்க என் ஃபேஸ்புக் ஃப்ரெண்டுடா!'' என்றான் வருண், நண்பனிடம்.
- கல்லிடை வெங்கட்

அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய ‘நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ` 500. உங்கள் கதைகளை 10secondstory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!