Published:Updated:

10 செகண்ட் கதைகள்

10 செகண்ட் கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: ஸ்யாம்

10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
10 செகண்ட் கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
10 செகண்ட் கதைகள்
10 செகண்ட் கதைகள்

செல்போன் மகிமை!

`` `அம்மனின் மகிமை 'னு ஆயிரம் நோட்டீஸ் அச்சடிச்சுக் குடுக்கிறதுக்குப் பதிலா, செல்போன்ல டைப் பண்ணி ஷேர் பண்ணச்சொல்லுவோம்'' - ஐடியா கொடுத்தான் அரவிந்த்!

-வேம்பார் மு.க.இப்ராஹிம்

ட்ரெய்லர்டா...

``ஒரு மாஸ் ஹீரோ கதை ரெடி பண்ணியிருக்கேன் சார்'' என்றதும் ``கதை எல்லாம் இருக்கட்டும். படத்தோட ட்ரெய்லர் எப்படி இருக்கும்னு மட்டும் சொல்லுங்க'' என்றார் புரொடியூஸர்!

- கோ.பகவான்

நாய்க் கடன்!

காலைக்கடன் கழிக்க வெளியே அழைத்துப்போனார் வளர்ப்பு நாயை, குழந்தைக்கு பேம்ப்பரை மாட்டி வீட்டில் விட்டுவிட்டு!

- பாப்பனப்பட்டு வ.முருகன்

மாறும் காலம்

சண்டே மதியம் `போர் அடிக்குது' என, கொஞ்ச நேரம் டி.வி-யை ஆஃப் செய்தார்கள்!

- பிரகாஷ்.சி

சமையல் கடமை

``நாளைக்குத் தேவையான பிரேக் ஃபாஸ்ட்க்கு மெனு சொன்னீங்கன்னா, ரெடி பண்ணி ஃப்ரிட்ஜ்ல வெச்சுடுவேன்'' என்றாள், முதல் நாளே கணவனிடம்!

- பிரகாஷ் ஷர்மா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

10 செகண்ட் கதைகள்

கிழிமுரண்

துணிக்கடை மொட்டைமாடியில் காய்ந்துகொண்டிருந்தது கிழிந்த சட்டை!

- சி.சாமிநாதன்

அரண்மனைப் பேய்

``ஒரு அரண்மனை வீட்ல ஒரு பேய்...'' - பாட்டி கதை சொல்ல ஆரம்பித்ததும் பேத்தி கேட்டாள், ``ஏன் பாட்டி... பேய் எல்லாம் குடிசை வீட்ல இருக்காதா?'' என்று.

- அபிசேக் மியாவ்.

தனியே...

``என்னைத் தனியாவிடுங்க” என்று ரூமுக்குள் புகுந்து கதவைச் சாத்திக்கொண்டவள், மொபைல் எடுத்து ஃபேஸ்புக்கைத் திறந்தாள்!

- விகடபாரதி

அன்லைக் ஆதங்கம்!

``நேத்து ஃபுல்லா ஆன்லைன்ல இருந்திருக்கீங்க, எனக்கு ஒரு லைக்கூட போடலை. அந்த அளவுக்கு நான் வேண்டாமப்போயிட்டேனா?''

- பி.பாலாஜிகணேஷ்

அடையாளம்

“வாட்ஸ்அப்புல தினமும் குட் மார்னிங், குட் நைட் மெசெஜ் அனுப்புவாரே… அவர்தானேப்பா இவர்?”-  அப்பாவிடம் கேட்டான் பையன், ஃபங்ஷனில் பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்ததும்!

- அஜித்

10 செகண்ட் கதைகள்

அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய ‘நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ரூ. 500. உங்கள் கதைகளை 10secondstory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!