Published:Updated:

விக்ரமாதித்யன் கவிதைகள்

விக்ரமாதித்யன் கவிதைகள்
பிரீமியம் ஸ்டோரி
விக்ரமாதித்யன் கவிதைகள்

ஓவியம்: ஹாசிப்கான்

விக்ரமாதித்யன் கவிதைகள்

ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
விக்ரமாதித்யன் கவிதைகள்
பிரீமியம் ஸ்டோரி
விக்ரமாதித்யன் கவிதைகள்
விக்ரமாதித்யன் கவிதைகள்

அவன் உலகம் 

நனி சிறிது

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பண்டொரு காலம்

இலக்கியம்

கிடையாது

அரசியல்

தெரியாது

சமூக

ஞானமில்லை

காசு பணம்

தெரியவே தெரியாது

இனஉணர்வு மொழியுணர்வு ஓர்மை

இல்லவேயில்லை

ஊரைப்போல நாட்டைப்போல

உள்ள மனுஷன்

படித்தானா வளர்ந்தானா

பட்டணம் புறப்பட்டுவந்தானா

பல

பணிபுரிந்தானா

பட்டு

கெட்டுத் தேறினானா

தமிழறிந்து

கவிதை செய்தானா

மதுபானத்தில்

மயங்கிக் கிடந்தானா

சுமை கூடிக்கூடி

சஞ்சலம்

கோலம் அநேகம்கொண்டு

கூத்தாடி

காலம் கருதி

கடமை

ஞானம் திரண்டு

அமைதி

எப்படி சதாசிவா

ஒரு சமயம் சபாநாயகம்

ஒரு நேரம்

பிக்ஷாடனர் 

ஆதார் அட்டை 

எதுக்கு

இவனுக்கு

யாதுசெய்ய

இதைவைத்து

வெளிநாடு

செல்லப்போகிறானா

வங்கியில்

கடன்வாங்கப்போகிறானா

தேர்தலில்

போட்டியிடப்போகிறானா

அரசு அலுவலகமென்றாலே

அப்படியோர் ஒவ்வாமை

வாக்காளர் அட்டையே

அதிகம்

குடிமைப்பொருள் அட்டையே

போதும்

எழுபது வயது

இன்னும் சிறிது காலம்

பிறகென்ன

சற்றே

அரசுத்தயவு/சலுகை வேண்டாத

அப்பாவிக் கவிஞன்

விட்டுவிட

வேண்டுகிறான் அருள்கூர்ந்து 

அக்னிநக்ஷத்ர நாட்கள் 

முள்

மரக்காடு

நிற்க

நிழலில்லை

வெயிலில்

காய்ந்தோம்

கோடைமழையில்

நனைந்தோம்

பகலிரவாய்

பணி

ஊதியம்

சொற்பம்

எதற்காக

இதெல்லாம்

முறை

கழியத்தான் 

நமக்குள் 

ஆரம்பத்திலிருந்தே

ஒத்துப்போகாதுபோயிற்று

சந்தித்தவேளையைத்தான்

சொல்ல வேண்டும்

இனியும்

இதைச் சரிப்படுத்த முடியுமெனத் தோன்றவில்லை

எதற்காக

அலட்டிக்கொள்ள வேண்டும்

சினம்கொள்ளவோ வருத்தப்படவோ

வேண்டியதில்லை

நேர்ந்துவிட்டதற்கு

சமாதானமெதற்கு

இதற்கு

இருவருமே பொறுப்பாளியாக மாட்டோம்

அவரவர் பாட்டுக்குப்

போய்க்கொண்டிருக்கலாம்

புகார் சொல்ல

தேவையில்லை

காலம் துண்டித்துவிடுமென்றால்

கவலை அநாவசியம்

உறவெனில்

பிரிவும் உள்ளதுதானே

திருமண வரவேற்புக்கு அழைத்ததில்

சந்தோஷம்

மறுபடியும் பார்க்கவாய்த்தால்

முந்தினவற்றை மறந்துவிட்டே பேசலாம்

நல்லது

நிலம் தாங்கும்