எதிர்பார்ப்பு

மீதி சில்லறைக்கு, சில்லறையையே கொடுத்த கடைக்காரரை முறைத்தாள், சாக்லேட் எதிர்பார்த்த அம்முக்குட்டி!

- விகட பாரதி

காரணம்

“எதிர்பார்ப்பைத் தூண்டிவிட்டதுதான் தப்பு!” என்று படம் சரியா போகாததற்கு, படக் குழுவினர் கலந்தாலோசித்தனர்.

- நிரவி கஜேந்திரன்

கடந்துபோன காதல்

`புரோக் அப்’ என ஸ்டேட்டஸ் தட்டிய வானதிக்கு, சென்ற ஆண்டு அதே நாளில் `ஆயுசுக்கும் நீ வேணும்டா!’ என எழுதிய ஸ்டேட்டஸை மெமரீஸில் காட்டியது ஃபேஸ்புக்.

- ரம்யா தேவநாதன்

விவாதம்

20 ரூபாய் இளநீரை 30 ரூபாய் என அநியாயத்துக்கு விற்பனைசெய்த வியாபாரியிடம் சண்டை போட்ட டென்ஷன் குறைய, 11 ரூபாய் சிகரெட்டைப் பற்றவைத்தான் பகீரதன்.

- பாஸ்கர் எம்.

பாலைவனப் பாலாறு!

பாலைவனத்தில் நடக்கும் படத்தின் ஷூட்டிங்கை மிகக் குறைந்த செலவில் பாலாற்றில் எடுத்து முடித்தது சினிமா புரொடக்ஷன் டீம்.

- அஜித்

அதிர்ச்சி!

“அதிர்ச்சியான விஷயம் எதுவும் வேணாம். குறிப்பா, வாட்ஸ்அப் வீடியோ!” என்றார் கர்ப்பிணிப் பெண்ணிடம் டாக்டர்.

- கோ.பகவான்

மாற்றம்!

“ஹலோ மாப்ளே... எங்கே இருக்கீங்க?” குமரேசன் கேட்டவுடன், “நீங்க போன் பண்ணியிருக்கிறது லேண்ட்லைனுக்கு மாமா!” என்று பதில் அளித்தான் அரவிந்த்.

- கல்லிடை வெங்கட்

முத்தப் பரிசோதனை

வீட்டுக்கு லேட்டாக வந்த அப்பா குடித்துவிட்டு வந்திருக்கிறாரா என டெஸ்ட் செய்ய, ‘என் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுங்க’ என்றது குழந்தை.

- எஸ்.ராமன்

சட்டமன்றப் பழக்கம்

ஹோட்டலுக்குச் சாப்பிட வந்த அமைச்சர், டி.வி செய்தியில் முதலமைச்சர் பேசுவதைப் பார்த்ததும் மேசையைத் தட்ட ஆரம்பித்தார்!

- எஸ்.சித்ரா

வேண்டுதல்

தன் அடுத்த பேய்ப் படமும் 100 நாட்கள் ஓட வேண்டும் என வேண்டிக்கொண்டார் தயாரிப்பாளர், எல்லா சாமிகளிடமும்!

- ஃபெரோஸ் கான்

அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய ‘நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ரூ. 500. உங்கள் கதைகளை 10secondstory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!