சரட் சரட்டென

பதினாறு கால்கள் ஓடிவருகின்றன.

மேஜையைச் சுற்றிவளைத்து

கைகள் உயர்த்த கட்டளையிடுகின்றன.

அதிர்ச்சியில் உறைந்திருப்பவன்

நெற்றிப்பொட்டில் வைத்து அழுத்தப்படுகிறது ஒரு துப்பாக்கி.

வாய் பிளந்து உறைகையில்

மின்மிகை மாநிலத்தில் மூன்றாவது முறை

ஒலி ஒளி போகிறது.

திரையில் வெண்ணிறம் படர்கிறது.

திறந்திருந்த வாயில்

ஒரு பட்டாணி போட்டு

மெள்ள அரைக்கத் தொடங்குகிறேன்.

பக்கத்து இருக்கையிலிருந்து

இந்த அரசாங்கம் குறித்து

ஏதோ கருத்துச் சொல்ல

ஒரு வாய் திறக்கிறது.

அதற்கும் ஒரு பட்டாணி ஈயப்பட

அந்த வாயும்

அதை மெள்ள அரைக்கத் தொடங்குகிறது.

இருள் மேலும் இருளுகிறது.

சரட் சரட்டென

பதினாறு கால்கள் ஓடிவருகின்றன.

மேஜையைச் சுற்றிவளைத்து

கைகள் உயர்த்த கட்டளையிடுகின்றன.

அதிர்ச்சியில் உறைந்திருப்பவன்

நெற்றிப்பொட்டில் வைத்து அழுத்தப்படுகிறது ஒரு துப்பாக்கி.

வாய் பிளந்து உறைகையில்

மின்மிகை மாநிலத்தில் மூன்றாவது முறை

ஒலி ஒளி போகிறது.

திரையில் வெண்ணிறம் படர்கிறது.

திறந்திருந்த வாயில்

ஒரு பட்டாணி போட்டு

மெள்ள அரைக்கத் தொடங்குகிறேன்.

பக்கத்து இருக்கையிலிருந்து

இந்த அரசாங்கம் குறித்து

ஏதோ கருத்துச் சொல்ல

ஒரு வாய் திறக்கிறது.

அதற்கும் ஒரு பட்டாணி ஈயப்பட

அந்த வாயும்

அதை மெள்ள அரைக்கத் தொடங்குகிறது.

இருள் மேலும் இருளுகிறது.