Published:Updated:

10 செகண்ட் கதைகள்

10 செகண்ட் கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: ஸ்யாம்

10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
10 செகண்ட் கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
10 செகண்ட் கதைகள்
10 செகண்ட் கதைகள்

தொடர் ஆன கதை

10 செகண்ட் கதைப் போட்டிக்கு, 100 செகண்டில் படிப்பதுபோல் அனுப்பியிருந்தார் மெகா சீரியல் டைரக்டர்.

- பா.ஜெயக்குமார்

10 செகண்ட் கதைகள்

ரிக்வெஸ்ட்

``நீ எனக்கு ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுப்பா!'' என்றது குழந்தை. திருவிழாவில் பொம்மை செல்போன் வாங்கிக் கொடுத்ததும்!

- பெ.பாண்டியன்

10 செகண்ட் கதைகள்

 மாற்றம்

``ஒரு சின்ன சேஞ்ச்... கன்டெய்னர் கொள்ளை சீனை ரயில்பெட்டியில வெச்சுக்கலாம்'' என்றார் டைரக்டர்.

- கோ.பகவான்

10 செகண்ட் கதைகள்

குழப்பம்

40 நாட்களில் படத்தையே முடித்த இயக்குநருக்கு, டீஸர் கட் செய்ய ஒரு மாசம் ஆனது.

- விகடபாரதி

10 செகண்ட் கதைகள்

ரீசார்ஜ்

ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன அக்காவிடம், `என்ன வாங்கி வருவது?' எனக் கேட்டேன்.

``300 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணு போதும்!'' என்றார்.

- பிரகாஷ் ஷர்மா.

10 செகண்ட் கதைகள்

திருஷ்டி!

கணவர் பதிவிட்ட குழந்தையின் பிக்சருக்கு விழுந்த லைக்ஸ் பார்த்து, ``ஊர் கண்ணே இன்னைக்கு உன் மேலதான்'' என திருஷ்டி கழித்தாள் மீனா!

- பெ.பாண்டியன்

10 செகண்ட் கதைகள்

தண்ணீர்

விபத்தில் அடிபட்டவன் குடிக்க தண்ணீர் கேட்டான்... மோதிவிட்டுச் சென்றிருந்தது தண்ணீர் லாரி.

- ராம் ஆதிநாராயணன்

10 செகண்ட் கதைகள்

ஆவல்

முதல் நாள் முதல் காட்சி தொடங்குவதற்குள் அந்தப் படத்தின் டவுண்லோடு முடிந்திட வேண்டும் என லேப்டாப்பையே ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்தான் முருகன்.

- விகடபாரதி

10 செகண்ட் கதைகள்

உள்ளே... வெளியே...

“என்னத்த சமைச்சிருக்கே..!'’ என மனைவியிடம் நொந்துகொண்டார், முதலாளியிடம் சற்று முன்னர் திட்டு வாங்கி வீடு திரும்பிய ஹோட்டல் மாஸ்டர்.

- பாஸ்கர் எம்.

10 செகண்ட் கதைகள்

திருட்டு!

``பள்ளியில் இருந்து எதுக்கு சாக்பீஸ் எடுத்துவர்றே?'' - என, ஆபீஸில் இருந்து எடுத்து வந்த ஸ்கேலால் அடித்தார் அப்பா.

- பாஸ்கர் எம்.

10 செகண்ட் கதைகள்

அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய ‘நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ரூ.500. உங்கள் கதைகளை 10secondstory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!