கட்டுரைகள்
கவிதைகள்
Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

வணக்கம்.

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ‘இயல்’ விருது பெறும் கி.ரா. -வுக்கு ‘விகடன் தடம்’ இதழின் வாழ்த்துகள்!

ஆகஸ்ட் இதழை முன்வைத்து ஏராளமான கடிதங்களும் எதிர்வினைகளும்  வரப்பெற்றோம். தமிழின் குறிப்பிடத்தக்க பல ஆளுமைகள், எதிர்வினைகள் செய்திருந்தார்கள். அனைத்து எதிர்வினைகளையும் இதழில் பிரசுரிப்பது சாத்தியம் இல்லை. இதைப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம். அதே சமயம் உங்களது கருத்துகளுக்கும் எங்கள் மீதான நம்பிக்கைக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்.

தலையங்கம்

மகாஸ்வேதா தேவி, ஞானக்கூத்தன், நா.முத்துக்குமார் மூவருக்கும் விகடன் தடம் தனது ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறது.

கி.ரா.-வின் நேர்காணல், யுகபாரதி விவரிக்கும் தமிழ்த் திரையிசை வரலாறு, ஐந்து பெண் ஆளுமைகளின் சந்திப்பு, யூமா வாசுகி மொழியாக்கம் செய்திருக்கும் கன்னட எழுத்தாளர் வசுதேந்திராவின் சிறுகதை என பல ஆளுமைகளின் அழுத்தமான படைப்புகள் நிறைந்த இதழை உங்கள் கைகளில் சேர்ப்பதில் மகிழ்கிறோம்!   

- ஆசிரியர்