இப்போது வரும் காய்ச்சல்

எனக்காகக் காய்ச்சிய
சுடுதண்ணிதான் எல்லோருக்கும் குடிக்க

நாளை மறுநாளுக்கும்
விடுமுறை விண்ணப்பம்
அப்பாவுக்கும் சேர்த்தே

அம்மா வாசல் தெளித்த மீதிப் பங்கோடு
அப்பாவின் ஒரு குவளை நீரும்
வரவாகும் முற்றத்துத் துளசிக்கு

அரை மணி நேரத்துக்கு
ஒருமுறை உடல் சூடு
ஆய்வுக்குட்படும்

என் இரண்டு மடக்கு
கஞ்சி குடிக்கும் படலத்துக்கு

அம்மாவுக்கு அடுப்படியில்
பாடம் நடத்தப்படும்

அந்த ஒரு வட்ட மாத்திரையை
ஆறாக மாற்றும்
அப்பாவின் முகம்
தேர்ந்த சிற்பியை மிஞ்சியிருக்கும்

காய்ச்சல் நீளும் இரவில் எப்போது கண்விழித்தாலும்
காணக்கிடைக்கும் அப்பா
சொல்லிக்கொண்டிருப்பார் அம்மாவிடம்
`குலதெய்வத்துக்குப் பொங்கல்
ஒண்ணு வைக்கணும்'

காய்ச்சல் விட்டபோதும்
அப்பா விட்டதில்லை வாசல் வரைகூட

இப்போது வரும் காய்ச்சல்
காய்ச்சலாக மட்டுமே
வந்துபோகிறது.

- இந்து

எதிர்வினை

பெருநகரச் சாலையில்
அனிச்சையாய்ப் பார்த்த
வண்ணத்துப்பூச்சி மீது
மோதிச் சாய்த்துவிட்டது
என் வாகனம்
திரும்பிப் பார்க்க முடியவில்லை
நேரமின்மையால்
அதற்குப்
பிறகான நாட்களில்
வேறுவேறு
வண்ணத்துப்பூச்சிகளைப்
பார்க்கும் தருணங்களில்
நேரத்தைத் தின்றுதீர்த்துவிடுகிறது
அந்த
ஒற்றை வண்ணத்துப்பூச்சி.

- ஆர்.எஸ்.நாதன்

ஒற்றைச் சிறகு

வீதியில் விழுந்துகிடந்த
ஒற்றைச் சிறகை எடுத்துச்சென்று
என் அறையின் அலமாரியில்
பத்திரப்படுத்தினேன்
கொஞ்சம் வானத்தை
கொஞ்சம் மலைகளை
கொஞ்சம் நதிகளை
கொஞ்சம் மரங்களை
கொஞ்சம் கடலை
என் அறைக்கு அறிமுகப்படுத்தியது
அச்சிறகு.

- சௌவி

நீ வசித்த ஊர்

நீ வசித்த ஊரைக் கடந்துகொண்டிருக்கிறேன்
திறந்திருக்கும் குருடனின் விழிகளென
வெறித்தபடியிருக்கிறது இக்கணம்.
என்றோ நீ ஊற்றிய ஒரு குவளை நீரில்
பருவங்கள் கடந்து தழைத்திருக்கும் சிறு தாவரம்
இட வலமாய் இன்று துளிர்த்த துளிரிலைகளில்
இரண்டு எனக்கானது.
உனது விரல்கள் விசிறிய நெல்மணிகளைப்
புசித்திருந்த இவ்வூர் கோயிலின் மாடப்புறா ஒன்று
இன்று கூடடைகையில் கீழிறங்கிய சிறகின் ஒலி
உனது பெயரின் மாத்திரை அளவிற்கேயானது
கோடையின் கானல்நீரோடும் இவ்வூரின் படித்துறை
உனது பாதத்தின் ரேகைகளைக் காற்றில் எழுதியபடியிருக்கிறது.
இவ்வூர் எல்லையின் குப்பைமேடொன்றில்
நீ உடுத்தி எறிந்துவிட்டுப் போன பழந்துணியொன்று
காற்றில் படபடத்தபடி நீயற்ற ஊரின்
நிர்வாணத்தை மறைத்தபடியிருக்கிறது.
உனது நினைவென்னும் பிரமாண்டத்தை
அடக்கிடவல்லதல்ல
இச்சிற்றூரைக் கடந்துகொண்டிருக்கும்
பேருந்தின் சின்னஞ்சிறு ஜன்னல் சட்டகம்.

- கே.ஸ்டாலின்

இப்போது வரும் காய்ச்சல்

எனக்காகக் காய்ச்சிய
சுடுதண்ணிதான் எல்லோருக்கும் குடிக்க

நாளை மறுநாளுக்கும்
விடுமுறை விண்ணப்பம்
அப்பாவுக்கும் சேர்த்தே

அம்மா வாசல் தெளித்த மீதிப் பங்கோடு
அப்பாவின் ஒரு குவளை நீரும்
வரவாகும் முற்றத்துத் துளசிக்கு

அரை மணி நேரத்துக்கு
ஒருமுறை உடல் சூடு
ஆய்வுக்குட்படும்

என் இரண்டு மடக்கு
கஞ்சி குடிக்கும் படலத்துக்கு

அம்மாவுக்கு அடுப்படியில்
பாடம் நடத்தப்படும்

அந்த ஒரு வட்ட மாத்திரையை
ஆறாக மாற்றும்
அப்பாவின் முகம்
தேர்ந்த சிற்பியை மிஞ்சியிருக்கும்

காய்ச்சல் நீளும் இரவில் எப்போது கண்விழித்தாலும்
காணக்கிடைக்கும் அப்பா
சொல்லிக்கொண்டிருப்பார் அம்மாவிடம்
`குலதெய்வத்துக்குப் பொங்கல்
ஒண்ணு வைக்கணும்'

காய்ச்சல் விட்டபோதும்
அப்பா விட்டதில்லை வாசல் வரைகூட

இப்போது வரும் காய்ச்சல்
காய்ச்சலாக மட்டுமே
வந்துபோகிறது.

- இந்து

எதிர்வினை

பெருநகரச் சாலையில்
அனிச்சையாய்ப் பார்த்த
வண்ணத்துப்பூச்சி மீது
மோதிச் சாய்த்துவிட்டது
என் வாகனம்
திரும்பிப் பார்க்க முடியவில்லை
நேரமின்மையால்
அதற்குப்
பிறகான நாட்களில்
வேறுவேறு
வண்ணத்துப்பூச்சிகளைப்
பார்க்கும் தருணங்களில்
நேரத்தைத் தின்றுதீர்த்துவிடுகிறது
அந்த
ஒற்றை வண்ணத்துப்பூச்சி.

- ஆர்.எஸ்.நாதன்

ஒற்றைச் சிறகு

வீதியில் விழுந்துகிடந்த
ஒற்றைச் சிறகை எடுத்துச்சென்று
என் அறையின் அலமாரியில்
பத்திரப்படுத்தினேன்
கொஞ்சம் வானத்தை
கொஞ்சம் மலைகளை
கொஞ்சம் நதிகளை
கொஞ்சம் மரங்களை
கொஞ்சம் கடலை
என் அறைக்கு அறிமுகப்படுத்தியது
அச்சிறகு.

- சௌவி

நீ வசித்த ஊர்

நீ வசித்த ஊரைக் கடந்துகொண்டிருக்கிறேன்
திறந்திருக்கும் குருடனின் விழிகளென
வெறித்தபடியிருக்கிறது இக்கணம்.
என்றோ நீ ஊற்றிய ஒரு குவளை நீரில்
பருவங்கள் கடந்து தழைத்திருக்கும் சிறு தாவரம்
இட வலமாய் இன்று துளிர்த்த துளிரிலைகளில்
இரண்டு எனக்கானது.
உனது விரல்கள் விசிறிய நெல்மணிகளைப்
புசித்திருந்த இவ்வூர் கோயிலின் மாடப்புறா ஒன்று
இன்று கூடடைகையில் கீழிறங்கிய சிறகின் ஒலி
உனது பெயரின் மாத்திரை அளவிற்கேயானது
கோடையின் கானல்நீரோடும் இவ்வூரின் படித்துறை
உனது பாதத்தின் ரேகைகளைக் காற்றில் எழுதியபடியிருக்கிறது.
இவ்வூர் எல்லையின் குப்பைமேடொன்றில்
நீ உடுத்தி எறிந்துவிட்டுப் போன பழந்துணியொன்று
காற்றில் படபடத்தபடி நீயற்ற ஊரின்
நிர்வாணத்தை மறைத்தபடியிருக்கிறது.
உனது நினைவென்னும் பிரமாண்டத்தை
அடக்கிடவல்லதல்ல
இச்சிற்றூரைக் கடந்துகொண்டிருக்கும்
பேருந்தின் சின்னஞ்சிறு ஜன்னல் சட்டகம்.

- கே.ஸ்டாலின்