Published:Updated:

ஓட்டுநர்

ஓட்டுநர்
பிரீமியம் ஸ்டோரி
ஓட்டுநர்

கவிதை: இசை, ஓவியம்: பிரேம் டாவின்ஸி

ஓட்டுநர்

கவிதை: இசை, ஓவியம்: பிரேம் டாவின்ஸி

Published:Updated:
ஓட்டுநர்
பிரீமியம் ஸ்டோரி
ஓட்டுநர்
ஓட்டுநர்

றுத்த முகத்தில்
நரையோடித் திரண்டிருந்தது
தோளில் அழுக்குத் துண்டோடு
காக்கிச் சீருடையில் இருந்தார்
வார் அறுந்த செருப்பைக் கண்டு
பிழையாக
ஒரு கணம் இரக்கம்கொண்டுவிட்டேன்
அப்போதுதான்
அவர் தன் சைனா மொபைலை
வெளியே எடுத்தார்
எதையோ தேடி முடுக்கிவிட
`வானம் தாலாட்டி மேகம் தள்ளாடியது’.
கமலைவிடவும் பிரமாதமாகத் தலையாட்டுகிறார்
பாடகனைவிடவும் பிரமாதமாகப் பாடுகிறார்
என்னைவிடவும் பத்து மடங்கு லயிக்கிறார்
ஐயா, என்ன ஓட்டுகிறீர்...
புஷ்பக விமானம்தானே?