0.00

அவர்கள் குஷிநாரம் நோக்கிச் செல்ல வேண்டும். மழை நசநசவெனப் பெய்துகொண்டிருந்தது. கரடுமுரடான மலைப்பாதை. நாயுருவிகள் கிழித்ததில், காலெங்கும் ஈரத்தில் எரிந்தது. கண் மறைக்கும்

இருளில் ‘தம்மம்... சரணம்... கச்சாமி...’ என முனகியபடியே மூத்த பிக்கு வேகமாகச் சென்றுகொண்டிருந்தார். சன்னதம் கொண்ட நடை. அத்தி ஒரு கணம் தடுமாறி கீழே விழப்போனான்.

நடந்துகொண்டிருந்த இளைய பிக்கு நிலைகுலைவின் சத்தம் கேட்டு, ``என்னாச்சு?’’ என்றார்.

“ஒன்றுமில்லை போங்க...” என்றபடியே அத்தி பின்தொடர்ந்தான். மூத்த பிக்கு நடையை நிறுத்தவே இல்லை. மலையேறிக்கொண்டிருந்த அத்தி, எதேச்சையாகத் திரும்பிப் பார்க்கவும் ஒரு பெரிய மின்னல் வெட்டியது. ஒரு கணம் சுற்றிலும் மலை அடுக்குகள் வெளிப்பட்டு மீண்டும் இருளில் பதுங்கின.

0.01

காலை நன்கு புலர்ந்துவிட்டிருந்தது. ஓய்வின்றி விடிய விடிய நடந்தாயிற்று. மூத்த பிக்கு சற்றும் சோர்வின்றி முன்னேறிக்கொண்டே இருந்தார். புதர்க்காடுகளின் பல வண்ணப் பூச்சிகள் மழை நின்ற ஏகாந்தத்தில் காற்றில் பறந்துகொண்டிருந்தன. தும்பிகள், மீன்களைப்போல அங்கும் இங்கும் காற்றில் நீந்திக்கொண்டிருந்தன. மரச்செறிவு முடிந்து புதர்களும் தர்ப்பைப்புற்களும் அடர்ந்து சென்றன. ‘ஆறு பக்கம் வந்துவிட்டது’ என அத்தி நினைத்தான். வண்டல் மண் காலில் பதிய, சேறும் சகதியுமாக தர்ப்பையை மிதித்து உருவாக்கிய ஒற்றையடிப் பாதையில் சென்றுகொண்டிருந்தார்கள். தூரத்தில் மரங்களின் இடைவெளியில் கந்தகி நதி தெரிந்தது. ஆர்வமாய் அத்தி முன்நோக்கி ஓடினான். பக்கம் செல்லச் செல்ல, கந்தகி பெரும் ஆவேசத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் சப்தம் ஸ்தூலமாகக் கேட்டது. செம்மண் நிறத்தில் புதுவெள்ளம். வாழை மரங்கள், இலை தழைகள் நீரின் மேற்புறம் தோன்றி மறைந்தன.

“பெரிய ஆவேசக்காரிதான்” அத்தி புன்னகையுடன் சொன்னான்.

“நதியில் புது வெள்ளம் போகும்போது இறங்கக் கூடாது” இளைய பிக்கு சொன்னார். மூத்த பிக்கு அமைதியாக இருந்தார். “வேறு வழி இல்லை; ஆற்றைத் தாண்டித்தான் ஆக வேண்டும்” என்றார். “இன்னும் கொஞ்சம் கீழே போனால், நதி அகலமாகிறது அங்கு போகலாம்” என்றார் இளைய பிக்கு. மூவரும் நடக்கத் தொடங்கினர். திடீரென ஒரு பிளிறல் ஆற்றின் ஆர்ப்பரிக்கும் ஓசையைக் கிழித்துக்கொண்டு கேட்டது. எதிர்க் கரையில் மூன்று யானைகள் நின்றிருந்தன. துதிக்கை உயர்த்தி அவை பிளிறின. தண்ணீரில் ஒரு யானை நிலைகொள்ள முடியாமல் உருண்டுகொண்டிருந்தது. வெள்ளத்தை எதிர்த்து நிற்பதும், மீண்டும் உருள்வதுமாக ஆற்றின் போக்கில் போய்க்கொண்டிருந்தது. கரையில் நிற்கும் யானைகள் பிளிறிக்கொண்டிருந்தன.

0.02

குஷிநாரம் மழையில் தியானித்துக்கொண்டிருந்தது. மெல்லிய தூறல்கள் சரிந்துகொண்டிருந்தன. காற்றில் தூறல்கள் நடனமிடுவதை, குடிலுக்குள் இருந்து கவனித்துக்கொண்டிருந்தான் மிலிந்தன். வைத்தியன். `கவிராஜ்’ என்று சொல்வார்கள். `கவிராஜ் மிலிந்த’ என்றுதான் அனைவரும் அழைப்பர். காலையில் எழுந்ததிலிருந்தே அவனுக்கு சங்கத்துக்குச் செல்ல வேண்டும் என்று தவிப்பு. ஆனந்தர் நேற்று இரவு அவசரமாக வந்து கவிராஜ் சோமதத்தரை அழைத்துச் சென்றார். என்ன விஷயமாக இருக்கும் என்று மனம் அலைபாயத் தொடங்கியது. ஒருவேளை ததாகதருக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லையோ?

“குஷிநாரத்துக்கு மேற்கே நல்ல மழை...” குரல் கேட்டுத் திரும்பினான் மிலிந்த.

அத்தி புன்னகையுடன் நின்றிருந்தான். “கந்தகியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நேற்று, அதில் ஒரு யானை அடித்துச் செல்லப்படுவதைப் பார்த்தேன்.”

“நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? தெற்கே சென்றவர்கள் இல்லையா?”

“ஆமாம்... நாங்கள் தெற்கின் கடைக்கோடியில் இருந்து வருகிறோம். ததாகதர் எப்படி இருக்கிறார்?”

தூரத்தில் ஒருவன் மூச்சிரைக்க ஓடிவந்து கொண்டிருந்தான்.

அவன் துவராடை மிகுந்த அழுக்காய் இருந்தது. “கவிராஜ்! உங்களைப் பெரியவர் வரச் சொன்னார்” மூச்சுவாங்கச் சொன்னவன், பதிலுக்குக்கூடக் காத்திருக்காமல் எங்கோ ஓடினான்.

0.03

“யானை நீரில் அடித்துச் செல்வதைப் பார்த்தது யார்?” பெரிய கவிராஜ் முணுமுணுப்பாகக் கேட்டார்.

அத்தி தயக்கத்துடன் முன்னகர்ந்து வந்து “நான்தான்” என்றார்.

“உன் பெயர்?”

“அத்தி” மிலிந்தன் சொன்னான். அத்தி அவனைப் பார்த்தான்.

“ததாகதர் உன்னை வரச் சொன்னார்” என்றார் பெரியவர். அவர் முகம் சுரத்தில்லாமல் இருந்தது. இரண்டு பெரிய மருத மரங்களின் கிளைகள் ஒன்றை ஒன்று கோத்திருந்தன. அதன் நிழலில் ஒரு மஞ்சள் வண்ணத் துவராடையின் மீது உலர்ந்த மலர் போல ததாகதர் கிடந்தார். அருகில் ஆனந்தரும் மூத்த பிக்குவும் இருந்தார்கள். ஆனந்தர் கண்களில் தாரைதாரையாகக் கண்ணீர். பொறுக்க முடியாமல் விசும்பிக் கொண்டிருந்தார்.

கோதம முனி மெலிதாய் தலை அசைத்து அத்தியை, “இங்கே வா” என்றார். அத்தி பக்கமாகச் செல்லவும், அவன் தலையில் கை வைத்து, “யானையை வெள்ளம் அடித்துச் செல்லட்டும்” என்றார்.