
கணங்களே ஒளிரும் சோப்புநுரைக்குமிழிகளை
உருவாக்கும் ஒரு கை
என்னுடையதாய் இருக்கிறது
கணங்களே வாழும் குமிழிகளை
தொட்டுடைக்கும் ஒரு விரலும்
என்னுடையதாய் இருக்கிறது
மாயை மாயை இஃதெனப் பிதற்றும்
ஒரு மனமும் என்னுடையதாய் இருக்கிறது
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism