Published:Updated:

நினைவில் மின்னும் ஒளிப்படங்கள் - புதுவை இளவேனில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நினைவில் மின்னும் ஒளிப்படங்கள் - புதுவை இளவேனில்
நினைவில் மின்னும் ஒளிப்படங்கள் - புதுவை இளவேனில்

சந்திப்பு: வெய்யில்

பிரீமியம் ஸ்டோரி
நினைவில் மின்னும் ஒளிப்படங்கள் - புதுவை இளவேனில்

புதுவை இளவேனில், புகைப்படக் கலைஞர். கலை இலக்கிய ஆளுமைகள் பலரை விருப்பத்துடன் தேடிச்சென்று புகைப்படமெடுத்து ஆவணப்படுத்திக் கொண்டிருப்பவர். சில புகைப்படங்களுக்குப் பின்னிருக்கும் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்...

நினைவில் மின்னும் ஒளிப்படங்கள் - புதுவை இளவேனில்

திமூலத்திடம் அவரைப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற என் விருப்பத்தைச் சொன்னேன். நான் எடுத்த கி.ரா., சுந்தர ராமசாமி போன்றோரின் படங்களைப் பார்த்திருந்ததால், சம்மதித்தார். அது டிஜிட்டல் கேமராக்கள் உள்ளே வராத காலம். கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள அவரது வீட்டின்  ஓவிய அறையிலும் வீட்டுக்கு வெளியில் உள்ள மரத்தடியிலும் வைத்துப் படம் எடுத்தேன். பிரின்ட்டில் படங்கள் அவருக்கு ரொம்பவும் பிடித்திருந்தன. அவரது முடிவுறாத ஓவியம் ஒன்றை எனக்குப் பரிசாகத் தந்தார். அதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எந்த ஓவியரும் இப்படிச் செய்ய மாட்டார்கள். அதை ஒரு முக்கியமான பரிசாக நான் பாதுகாக்கிறேன். இன்னொரு முக்கியமான விஷயம். அவரது கடைசிப் புகைப்படங்களாக அவை அமைந்துவிட்டன.  உடல்நிலை பாதித்ததால், பிறகு அவர் புகைப்படம் எடுத்துக்கொள்ளவே இல்லை.

நினைவில் மின்னும் ஒளிப்படங்கள் - புதுவை இளவேனில்

2009 என்று நினைக்கிறேன். அருந்ததி ராய், தமிழகக் கிராமங்களின் தலித் மக்களைச் சந்திக்கிற பயணமாக வந்தார்.  விடுதலைச் சிறுத்தைகள் டி.ரவிக்குமார்தான் அழைத்து வந்தார். அப்போது எடுத்த புகைப்படம் இது.

நினைவில் மின்னும் ஒளிப்படங்கள் - புதுவை இளவேனில்

வரை புகைப்படமே எடுக்க முடியாது என்று நான் நினைத்த முதல் எழுத்தாளர், சுந்தர ராமசாமி. அவரது ஆளுமை அவ்வளவு அபாரமாக இருந்தது. ஆளும் இறுக்கமாக இருந்தார். அவருடன் எட்டு நாட்கள் சுற்றி, படமெடுத்தேன். பின் ரொம்பவே என்னிடம் சகஜமாகிவிட்டார். ஒரு காரை வாடகைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். அதில் நிறைய பயணம்செய்து படமெடுத்தோம்.

நினைவில் மின்னும் ஒளிப்படங்கள் - புதுவை இளவேனில்

ன்னல் ஒளியில் புகைப்படங்கள்் எடுப்பதில் எனக்கு ரொம்பவே விருப்பம். அந்த வெளிச்சத்தில் ஏதோ ஒரு புது அழகு வந்து சேர்ந்துகொள்வதை பலமுறை உணர்ந்திருக்கிறேன்.

எனது கேமராவால் பதிவுசெய்ய முடியாமல் போய்விட்டதே என்று நான் வருத்தப்பட்டு நினைத்து ஏங்கும் முகம் எம்.எஸ்.சுப்புலட்சுமியுடையது. அது நிறைவேறாமலேயே போய்விட்டது. இது பட்டம்மாள் அம்மையாரின் வரலாற்று நூலுக்காக நான் எடுத்த படம்.

நினைவில் மின்னும் ஒளிப்படங்கள் - புதுவை இளவேனில்

சிலர் என்னிடம் விரும்பி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். சிலரை நான் மிகவும் விரும்பி எடுத்திருக்கிறேன்.  அப்படியானவர்களில் ஒருவர் டி.எம்.கிருஷ்ணா. மிக மகிழ்ச்சியான நாள் அது.

நினைவில் மின்னும் ஒளிப்படங்கள் - புதுவை இளவேனில்

தியோடர் பாஸ்கரன், புகைப்படத்தில் இவரது தோற்றம் தீவிரமாக இருக்கிறதல்லவா? இயல்பில் மிகவும் மென்மையானவர், அதிர்ந்து பேசாதவர். இது ஓர் அழகான காட்சிப்பிழை.

நினைவில் மின்னும் ஒளிப்படங்கள் - புதுவை இளவேனில்

ல்மாவை திருச்சி அருகே துவரங்குறிச்சியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று எடுத்தேன். அவரது வீட்டில் என்னை மலையாளப் பத்திரிகை நிருபர் என்று சொல்லி அறிமுகப்படுத்தினார்.  ‘தமிழ்ப் பத்திரிகை நிருபர் இல்லை’ என்று அழுத்திச் சொன்னார். தமிழே பேசாமல் அன்று அவரைப் புகைப்படம் எடுத்தது சுவாரஸ்யமான அனுபவம்.

நினைவில் மின்னும் ஒளிப்படங்கள் - புதுவை இளவேனில்

விசுப்பிரமணியன், கடப்பாக்கம் பழைய துறைமுகத்தில் எடுத்த படம். 

நினைவில் மின்னும் ஒளிப்படங்கள் - புதுவை இளவேனில்

னிமொழி என்னிடம் புகைப்படம் எடுத்துக்கொள்ள விருப்பப்பட்டார். பாண்டிச்சேரியில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து எடுக்கப்பட்ட படம் இது. இப்படி ஒரு படம் என்னிடம் இருப்பதே அவருக்குத் தெரியாது. பார்த்தால் ஆச்சர்யப்படுவார்.

நினைவில் மின்னும் ஒளிப்படங்கள் - புதுவை இளவேனில்

ரங்கநாதன், புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று எனது ஸ்டுடியோவுக்கு வந்தார். என்னிடமே வந்து இளவேனில் இருக்கிறாரா என்று கேட்டார். நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும். ‘நீங்கள் வயதானவராக இருப்பீர்கள் என்று நினைத்தேன்’ என்றார். ஏன் அப்படி நினைத்தாரோ தெரியவில்லை. ஸ்டுடியோவில் வைத்து எடுத்தது எனக்குத் திருப்தியாக இல்லை. பிறகு பாண்டிச்சேரியிலுள்ள அவரது வீட்டில் வைத்து எடுத்தேன்.

நினைவில் மின்னும் ஒளிப்படங்கள் - புதுவை இளவேனில்

ஞ்சய் சுப்பிரமணியன் கேட்டார்: “என்னைப் புகைப்படம் எடுத்துத் தரணும். எவ்வளவு கேப்பீங்க?” நான் சும்மா விளையாட்டாகச் சொன்னேன். “பத்தாயிரம் கொடுங்க”. சரி வாங்கிக்கோங்க என்று சொல்லிட்டார். நான் சொல்வது 10 ஆண்டுகளுக்கு முன்பு. நான் பணம் வாங்கிக்கொண்டு புகைப்படம் எடுத்த ஒரே ஆளுமை அவர்தான். அவரிடம் பணம் வாங்கிய  குற்ற உணர்ச்சியை இன்றும் சுமந்து கொண்டிருக்கிறேன். 

நினைவில் மின்னும் ஒளிப்படங்கள் - புதுவை இளவேனில்

மேஷ் - பிரேம் என்னை அழைத்தார்கள். பாண்டிச்சேரியிலுள்ள ரெயின்போ நகர் வீட்டில் வைத்துப் படமெடுத்தேன். இந்தப் படம் அவர்களுக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. அன்று மீன்குழம்பு சமைத்துக்கொடுத்தார்கள். நான் அதை அவர்களது பரிசாகப் பெற்றுக்கொண்டேன். இப்போது ரமேஷ் - பிரேம் இருவரும் பிரிந்துவிட்டார்கள்.

நினைவில் மின்னும் ஒளிப்படங்கள் - புதுவை இளவேனில்

னந்தின் கவிதைகள் எனக்குப் பிடித்தமானவை. “என்னை எதுக்கு எடுக்குறீங்க? நான் ஒரு எளிமையான கவிஞன்” என்று சொன்னார்.  “நான் எளிமையான கலைஞர்களைத்தான் சார் தேடி எடுத்துக்கொண்டிருக்கிறேன்” என்று சொன்னேன். சென்னை ராயப்பேட்டையில் அவரது வீட்டில் வைத்து எடுத்தேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு