Published:Updated:

முகமூடிகளின் முன்னோடி!

முகமூடிகளின் முன்னோடி!
பிரீமியம் ஸ்டோரி
முகமூடிகளின் முன்னோடி!

முகமூடிகளின் முன்னோடி!

முகமூடிகளின் முன்னோடி!

முகமூடிகளின் முன்னோடி!

Published:Updated:
முகமூடிகளின் முன்னோடி!
பிரீமியம் ஸ்டோரி
முகமூடிகளின் முன்னோடி!
முகமூடிகளின் முன்னோடி!

ஸ்பைடர்மேன், பேட் மேன் போன்ற சூப்பர் ஹீரோக்களுக்கு முன்பாக, எதிரிகளை சுளுக்கு எடுத்தவர், வேதாளர் (The Phantom) என அழைக்கப்படும் முகமூடி வீரர். உலகின் முதல் சிறப்பு உடையணிந்த காமிக்ஸ் ஹீரோ இவர்தான்.

லீ ஃபாக் (Lee Falk) என்ற அமெரிக்க எழுத்தாளரால் 1936-ம் ஆண்டு பிப்ரவரி 17- ம் தேதி தோன்றிய வேதாளர், இன்று வரையில் உலகின் பல்வேறு மொழிகளில், மக்களின் மனம் கவர்ந்த காமிக்ஸ் நாயகனாகத் திகழ்கிறார். இவர், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் தோன்றியது மிகவும் குறைவே. அப்படி இருந்தும் இன்றும் உலகின் மிகவும் விரும்பப்படும், அறியப்படும் காமிக்ஸ் ஹீரோவாக இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஃபார்சித் (Forsyth), ரிச்சர்ட்சன்   (Richardson), ஐஸன் (Eisen), வாட்சன் (Watson) ஆகிய நான்கு நண்பர்கள் சேர்ந்து 1948-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஒரு காமிக்ஸ் இதழைத் தொடங்கினார்கள். அவர்களின் பெயர்களின் முதல் எழுத்துக்களை சேர்த்து ஃப்ரூ பப்ளிகேஷன்ஸ் (Frew Publications) என்று பெயரிட்டனர். முதல் இதழ் வெளியாகும் முன்பே ஐஸனும், வாட்சனும் குழுவிலிருந்து வெளியேறிவிட்டார்கள். மற்ற இருவரும் சேர்ந்து, வேதாளரை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்கள்.

இவர்களிடம் வந்து சேர்ந்ததும் வேதாளர், புயல் பாய்ச்சல் எடுத்தார். 68 ஆண்டுகளாக தொடர்ந்து வேதாளரின் கதைகளை வெளியிட்டு, ரசிகர்களுக்கு விருந்து படைத்தது ஃப்ரூ காமிக்ஸ்.

முகமூடிகளின் முன்னோடி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிர்வாக மாற்றங்களின் காரணமாக சில மாதங்கள் புத்தகம் வெளியாகவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில்தான் வேதாளரின் 80-வது ஆண்டு விழாவும் வந்தது. அப்போது, ஃபரூ காமிக்ஸ் நிறுவனத்தால் வேதாளரின் 80-வது ஆண்டு விழா மலரை வெளியிட இயலவில்லை. பின்னர், நண்பர்களின் கூட்டு முயற்சியால் மறுபடியும் ஃப்ரூ காமிக்ஸ் வெளிவரத் துவங்கியது. எனவே, ஃப்ரூ காமிக்ஸ் முதன்முதலில் வெளியான செப்டம்பர் மாதத்தில், வேதாளரின் சிறப்பு மலரை வெளியிட்டனர்.

இந்த 80-வது ஆண்டு மலரில் மொத்தம் 8 வேதாளர் கதைகள் உள்ளன. இதில், 7 கதைகள் முதன்முறையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகின்றன. அந்த எட்டாவது கதையோ, ஃப்ரூ காமிஸின் முன்னாள் எடிட்டர் ஜிம் ஷெப்பர்ட்  உருவாக்கியது.

இன்னமும் பல சிறப்புகள் இந்த மலரில் உள்ளன. 80 ஆண்டுகளை சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் உருவான கதைகளைத்  தேர்ந்தெடுத்துள்ளார்கள். அதாவது, ஒரு கதை வேதாளர் தோன்றிய 1930 காலகட்டத்தில் நடக்கிறது. மற்றொரு கதை, 1940-களில் எழுதப்பட்டது. இப்படியாக 8 தசம ஆண்டுகளில் உருவான கதைகள் இவை. அதற்காக அரதப் பழசான கதைகள் என நினைக்காதீர்கள்.  ஒவ்வொரு கதையும், மிகவும் சிறப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தவிர,  ஒவ்வொரு கதையும் பிரேசில், இத்தாலி, துருக்கி, ஜெர்மனி, யுகோஸ்லாவியா, ஸ்வீடன், நார்வே மற்றும் ஆஸ்திரேலியா என வெவ்வேறு நாட்டில் வெளியானவை.

4 கதைகள் கறுப்பு வெள்ளையிலும், 4 கதைகள் வண்ணத்திலும் உள்ளன. மேலும், வாசகர்களுக்களைக் குதூகலப்படுத்தும் வகையில், சிறப்பு வண்ணம் தீட்டும் போட்டிகள், விஷேச பகுதிகள் என 212 பக்கங்களில் சிறப்பாக தயாராகி உள்ளது.

இந்த இதழுடன் வேதாளர் கதைகளின் ஆராய்ச்சியாளரான பேர்ரி ஸ்டப்பர்ஸ்ஃபீல்டின் ஸ்பெஷல் அலசல் கட்டுரையைகொண்ட 20 பக்க இணைப்பிதழும் உண்டு. இதில், ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் வேதாளரின் கதைகள் எப்படி மெருகேறின என்பதை விளக்கி இருப்பது ஹைலைட்!

முகமூடிகளின் முன்னோடி!

வன்முறையும் விஷமமும் நிறைந்த சமகால காமிக்ஸ் புத்தகங்களில் இருந்து வேறுபட்டது வேதாளரின் கதைகள். இவரது கதைகளில் சண்டை, துப்பாக்கிச் சூடு, மரணம் என்பதெல்லாம் கடைசி கட்டமாக, மிகக் குறைவாகவே கையளப்பட்டு இருக்கும். பல வாழ்வியல் நெறிமுறைகளை அழகாக அறிவுறுத்தும் சூப்பர் ஹீரோவாக வேதாளர் வருவார். உணவு, வாழ்க்கை முறை, சீரிய கொள்கைகள் என ஒவ்வொரு பெற்றோரும் தமது வாரிசுகளுக்கு போதிக்க விரும்பும் விஷயங்களை கதைகளின் ஊடே சொல்வதே வேதாளரின் சிறப்பு.

உலகெங்கும் இருக்கும் காமிக்ஸ் ரசிகர்கள் பாதுகாக்க வேண்டிய அரிய புத்தகமாக வெளியாகி இருக்கும்   வேதாளரின் 80-ம் ஆண்டு மலரை ஆன்லைனில் ஆர்டர் செய்ய http://www.phantomcomic.com.au என்கிற வலைதளத்தை அணுகலாம்.

- கிங் விஷ்வா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism