64 எருமைகளால் ஆனது எங்கள் தொழுவம்
பால் மாடுகளாக சினைமாடுகளாக கன்றுகளாக...
எங்கள் தொழுவத்து மாடுகள் இறங்கினால்
தாமிரபரணி திணறிவிடும்
முதிர்ந்து சாகும் மாடுகளை அப்பா
பனைமரங்களுக்குத் துணையாகப் புதைப்பார்
எங்கள் தொழுவச் சாணத்தில்தான்
ஊர் வயல்களில் கதிர்கள் நிமிர்ந்து நின்றன
எங்கள் குடிசைகளில்
சீம்பாலும் கடம்பும் மணந்தவண்ணமிருக்கும்
மறைந்த எருமைகளின் கொம்பினுள்
அறுவடைத் தானியங்களை நிரப்பி வணங்குவோம்
ஆறு அகண்ட புல்வெளியைக் கொண்டிருந்தது அன்று
தாமரைகளில் ரத்தம் செழித்திருந்தது
எங்கள் உறக்கங்களில் சன்னமாக
மின்மினிகள் இசைத்தன
நாய்களும் பூனைகளும் ஆழ்ந்து உறங்கின
என்ன நடந்ததென்று எங்களுக்கு விளங்கவில்லை
இன்னும்கூட
அலைவரிசை மாறி மாறி புரியாதவாறு ஒலித்த
வானொலிச் செய்திகள் அச்சமடையச் செய்தன
சாலை சமைக்கும் ராட்சத ஊர்தி
ஊருக்குத் தீக்குறியானது
நில அளவைக் கருவிகளோடு சிலர் தென்பட்டனர்
கண்முன்னே தொழுவம் காலியாகிக்கொண்டிருப்பதை
கூத்துப் பார்ப்பதுபோல
பார்த்துக்கொண்டிருந்தார் அப்பா
பின்னொரு நாள்
கொடுங்காற்றில் தொழுவம் சாய்ந்தது
ராத்திரி அகவல் கொடூரமாக இருந்தது
பனங்காட்டு மயிலே...
அப்பா முளைக்குச்சியைப் பிடுங்கி
தன் மார்பில் இறக்கிவிட்டார்
அம்மாக்கள் எரியும் லாந்தர்களை
தலைமீது உடைத்துக்கொண்டார்கள்
தாம்புக்கயிற்றை எடுத்துக்கொண்டு
அக்காவும் அண்ணனும் எங்கோ ஓடினார்கள்
வெட்டி வெட்டி இழுத்துக்கொண்டிருந்த
எங்கள் குடியின் தொண்டைக்குழிக்கு
கொஞ்சம் பால் வாங்க
பக்கத்து கிராமத்தை நோக்கி ஓடினேன் நான்.

அப்பாவுக்கு மூன்று மனைவிகள்
கால்களை பெரியம்மாவும்
வயிற்றிலிருந்து கழுத்துவரை சித்தியும்
தலையை அம்மாவுமாக என்னைப் பெற்றெடுத்தார்கள்
பிறகு...
அருகம்புற்களால் கருவேல முள்கொண்டு
அப்பா தைத்தார்
இந்தக் கதை கேட்கவே
மடி நிறைய சம்பா அவலும் நாட்டுப்பழமுமாய்
உழுது களைத்தவர்கள் முற்றத்தில் வந்து கூடுவார்கள்.

நான் பசியால் அழுதேன்
மேற்குத்தொடர்ச்சி மலைகளும் கேட்கும்படியாய்
வீறிட்டுக் கதறினேன்
அம்மாக்கள் அங்கும் இங்குமாய் ஓடினார்கள்
வயிறாற்ற இயலாத தங்கள் மார்புகளை
கைகளில் ஏந்திக் கரைந்தபடி

தானியங்கள் முளைக்கக் காத்திருந்தார்கள்
தானியங்கள் மாரி இறங்கக் காத்திருந்தன
மாரி பருவத்திற்காகக் காத்திருந்தது
பருவமோ
நைந்துபோன சோளக்கொல்லைப் பொம்மையின்
வாய் நிறையச் சிரித்துக்கொண்டிருந்தது...

அவர்கள் எடுத்துக்கொண்டோடியது
ஆயிரம் வெள்ளாமைக்காடுகளைச் சுற்றிவந்த
புணையல் மாடுகளின் தாம்புக்கயிறு
அதைத் தேடி அலைந்தேன்
நெடுந்தூரம்
கருங்கிடாரிகளின் குளம்படிகளை
ஆங்காங்கே கண்டேன்
வழியில்
சுருக்குத் தழும்புகொண்ட கழுத்தோடு
ஒரு அக்காவும் அண்ணனும்
நீலத்தும்பிகளின் பின்னே
துள்ளிக்கொண்டு ஓடினார்கள் காற்றில்.

சில நாட்களாகவே என் கனவில்
தொலைந்துபோன எருமைகள் திரும்பி வருகின்றன
பூவரசங்கொழைகளோடு அம்மாக்கள் உடன்வர
குளித்துக் கரையேறும்
அந்தச் சினைமாடுகளின் சுமைகூடிய நளின நடை
இந்நிலத்திற்கு நற்குறி
அப்பாவின் தேகம்போல மேகம் கருக்கிறது
இனி நிலமெங்கும் அன்னம் பெருகும்.

64 எருமைகளால் ஆனது எங்கள் தொழுவம்
பால் மாடுகளாக சினைமாடுகளாக கன்றுகளாக...
எங்கள் தொழுவத்து மாடுகள் இறங்கினால்
தாமிரபரணி திணறிவிடும்
முதிர்ந்து சாகும் மாடுகளை அப்பா
பனைமரங்களுக்குத் துணையாகப் புதைப்பார்
எங்கள் தொழுவச் சாணத்தில்தான்
ஊர் வயல்களில் கதிர்கள் நிமிர்ந்து நின்றன
எங்கள் குடிசைகளில்
சீம்பாலும் கடம்பும் மணந்தவண்ணமிருக்கும்
மறைந்த எருமைகளின் கொம்பினுள்
அறுவடைத் தானியங்களை நிரப்பி வணங்குவோம்
ஆறு அகண்ட புல்வெளியைக் கொண்டிருந்தது அன்று
தாமரைகளில் ரத்தம் செழித்திருந்தது
எங்கள் உறக்கங்களில் சன்னமாக
மின்மினிகள் இசைத்தன
நாய்களும் பூனைகளும் ஆழ்ந்து உறங்கின
என்ன நடந்ததென்று எங்களுக்கு விளங்கவில்லை
இன்னும்கூட
அலைவரிசை மாறி மாறி புரியாதவாறு ஒலித்த
வானொலிச் செய்திகள் அச்சமடையச் செய்தன
சாலை சமைக்கும் ராட்சத ஊர்தி
ஊருக்குத் தீக்குறியானது
நில அளவைக் கருவிகளோடு சிலர் தென்பட்டனர்
கண்முன்னே தொழுவம் காலியாகிக்கொண்டிருப்பதை
கூத்துப் பார்ப்பதுபோல
பார்த்துக்கொண்டிருந்தார் அப்பா
பின்னொரு நாள்
கொடுங்காற்றில் தொழுவம் சாய்ந்தது
ராத்திரி அகவல் கொடூரமாக இருந்தது
பனங்காட்டு மயிலே...
அப்பா முளைக்குச்சியைப் பிடுங்கி
தன் மார்பில் இறக்கிவிட்டார்
அம்மாக்கள் எரியும் லாந்தர்களை
தலைமீது உடைத்துக்கொண்டார்கள்
தாம்புக்கயிற்றை எடுத்துக்கொண்டு
அக்காவும் அண்ணனும் எங்கோ ஓடினார்கள்
வெட்டி வெட்டி இழுத்துக்கொண்டிருந்த
எங்கள் குடியின் தொண்டைக்குழிக்கு
கொஞ்சம் பால் வாங்க
பக்கத்து கிராமத்தை நோக்கி ஓடினேன் நான்.

அப்பாவுக்கு மூன்று மனைவிகள்
கால்களை பெரியம்மாவும்
வயிற்றிலிருந்து கழுத்துவரை சித்தியும்
தலையை அம்மாவுமாக என்னைப் பெற்றெடுத்தார்கள்
பிறகு...
அருகம்புற்களால் கருவேல முள்கொண்டு
அப்பா தைத்தார்
இந்தக் கதை கேட்கவே
மடி நிறைய சம்பா அவலும் நாட்டுப்பழமுமாய்
உழுது களைத்தவர்கள் முற்றத்தில் வந்து கூடுவார்கள்.

நான் பசியால் அழுதேன்
மேற்குத்தொடர்ச்சி மலைகளும் கேட்கும்படியாய்
வீறிட்டுக் கதறினேன்
அம்மாக்கள் அங்கும் இங்குமாய் ஓடினார்கள்
வயிறாற்ற இயலாத தங்கள் மார்புகளை
கைகளில் ஏந்திக் கரைந்தபடி

தானியங்கள் முளைக்கக் காத்திருந்தார்கள்
தானியங்கள் மாரி இறங்கக் காத்திருந்தன
மாரி பருவத்திற்காகக் காத்திருந்தது
பருவமோ
நைந்துபோன சோளக்கொல்லைப் பொம்மையின்
வாய் நிறையச் சிரித்துக்கொண்டிருந்தது...

அவர்கள் எடுத்துக்கொண்டோடியது
ஆயிரம் வெள்ளாமைக்காடுகளைச் சுற்றிவந்த
புணையல் மாடுகளின் தாம்புக்கயிறு
அதைத் தேடி அலைந்தேன்
நெடுந்தூரம்
கருங்கிடாரிகளின் குளம்படிகளை
ஆங்காங்கே கண்டேன்
வழியில்
சுருக்குத் தழும்புகொண்ட கழுத்தோடு
ஒரு அக்காவும் அண்ணனும்
நீலத்தும்பிகளின் பின்னே
துள்ளிக்கொண்டு ஓடினார்கள் காற்றில்.

சில நாட்களாகவே என் கனவில்
தொலைந்துபோன எருமைகள் திரும்பி வருகின்றன
பூவரசங்கொழைகளோடு அம்மாக்கள் உடன்வர
குளித்துக் கரையேறும்
அந்தச் சினைமாடுகளின் சுமைகூடிய நளின நடை
இந்நிலத்திற்கு நற்குறி
அப்பாவின் தேகம்போல மேகம் கருக்கிறது
இனி நிலமெங்கும் அன்னம் பெருகும்.